கொரோனா கால காதல்
உனது கரம் கோர்த்து கடற்கரை கடந்தவள்
கையுறை அணிந்து கைபேசி கண்டு கண்ணீர் உதிக்கிறாள்...தனியே தோளில் சாய்ந்து தனிமொழி பேசியவள்
தலையணையோடு தனிமையை தீர்த்துக்கொள்ள இயலாது திணறுகிறாள்...
தினம் தினம் உனது வாழ்த்து மொழியோடு எழுந்தாலும் முகம் பார்த்து கொஞ்சும் வரம் எனக்கில்லையா???
வாயிருந்தும் ஊமையாகினேன்..
கைகளிருந்தும் காதலனை எழுதவோ வரையவோ தவிர்க்கப்பட்டேன்..
என் காதல் முடக்கத்தில்..
என்று தீரும் இந்த தடைக்காலம்??
என்று மலரும் காதல்காலம்?? காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் கானல் படங்கள்..
0 Comments