நான் மௌன அலை... நீ இசைக்கரை... - 2
இதுவரை...
கமலேஷ் – கரோலின், ஐசக் – ரெபேக்காவின் அறிமுகம். திருமணத்தில்
தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தாள் ரெபேக்கா.
இனி...
ரெபேக்காவின் கூற்று ஒருவித கிலியைத் தோற்றுவித்தாலும்
சுதாரித்தவள், “நேர்ல வாடா...
பேசலாம்...” என்றாள். “ஃபோன்லயே பேசிடலாம்... நேர்ல பார்த்து பேசுற அளவுக்கு
எனக்கு பொறுமையில்ல..” என்றாள் ரெபேக்கா.
“ப்ச்... என்னடா நீ? முகத்தைப் பார்த்து பேசினா தீர்வு
கிடைக்காத விஷயங்கள் எதுவுமில்லைன்னு நீதானே சொல்லுவ? அதுவுமில்லாம இது உன்னோட
எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம்...” என தன்னால் இயன்றமட்டும் அவளிடம் காரணத்தை
தெரிந்துகொள்ள கரோலின் பிரயத்தனப்பட, அவளோ எதிர்முனையில் அமைதிகாத்தாள்.
சற்று நேர இடைவெளிக்குப் பின்னர் தொடர்ந்த கரோலின், “ஸீ ரெபேக்கா... ஒரு விஷயத்துல டிசைட்
பண்ணின பின்னாடி கன்வின்ஸ் பண்றது ரொம்ப கஷ்டம்தான்... ஐ நோ... ஆனா இதுல நீ
எடுத்திருக்கிறது டிசிஷன் இல்ல... உன்னோட எதிர்காலத் திட்டம்.. அதுவுமில்லாம நான்
எடுத்து சொல்லித்தான் அதை புரிஞ்சிக்கணும்ங்கற இடத்துல நீ இல்லைன்னு
நினைக்கிறேன்.. எந்த விஷயத்திலேயும் அட்வைஸ் பண்ணலாம்.. ஆனா கல்யாண விஷயத்திலே
முடியாது...” என ஏதேதோ பிதற்ற, “அண்ணி...” என்றாள் ரெபேக்கா
திடமாக.
“கல்யாணம் வேணாம்ன்னு சொல்றப்போகூட அண்ணின்னுதான் சொல்ற...
என்னையே உன்னால அந்நியமா நிறுத்த முடியாதப்போ, ஐசக்...? இப்போ ஏதோவொரு கோபத்துல
வேணாம்ன்னு சொல்றவ அவனைப் பார்த்ததும் கோபமெல்லாம் வடிஞ்சு கண்ணீர் வடிக்கப்போற...
எதையும் குழப்பிக்காம தூங்கும்மா... காலையில எழுந்ததும் நேரா அவன்கிட்டே போய்
பேசு.. முகத்தைப் பார்த்து பேசுறப்போ தீர்வு கிடைக்காத பிரச்சனைகள்ன்னு எதுவுமே
இல்ல...” என தெரிவிக்க, “பாக்கறேன்...”
என அரைமனத்துடன் அழைப்பைத் துண்டித்துவிட்டாள் ரெபேக்கா.
குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் வந்த கமலேஷ்
பின்னாலிருந்து கட்டிக்கொள்ள, பதற்றம்விடுத்து
புன்னகையை பூசிக் கொண்டவள், “எப்படி இவ்ளோ சீக்கிரமா
குளிச்சீங்க?” என வினவ, “எல்லாம் ஒரு ஆர்வம்தான்...” என
கண்ணடித்தான்.
“சரிதான்...” என்றவள், “ஃபிரிட்ஜ்ல பாக்கெட் பால்தான் இருக்குது... சூடுபண்ணி பாதாம் பவுடர்
போட்டு வைங்க... குளிச்சிட்டு வந்துடறேன்..” என எழுந்து கொள்ள முற்பட, “பரவாயில்ல... அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..” என்றான் குறும்பாக.
“எதே...” என்கிற ரீதியில் அவள் முறைக்க, “ஹே... கேள்விகேட்டு டிலே பண்ணாதடா...”
என்றவன் கையோடு அவளை இழுத்துச் சென்றுவிட்டான்.
வெகுநாட்டத்துடன் அவளில் காதலை ஸ்தாபித்தவன் நெற்றியில்
அழுத்தமாக முத்தமிட, இறுக்கமாக
கட்டிக்கொண்டாள் கரோலின். கேசத்தைக் கோதியவாறே அவள் முகத்தை நிமிர்த்தியவன், “இன்னைக்கு ஆஃபீஸ்ல செம்ம ஸீன் ஒண்ணு நடந்துச்சு... ராஜேஷ் வழக்கம்போல
உன்னை என்னோட புருஷன்னு சொல்ல, அதை புதுசா வந்த பையன்
பிரவீன் தப்பா நினைக்க, அப்புறமா அவன் உன்னைப்பத்தி கேள்வியா கேட்க, ராஜேஷ் டென்ஷனாகன்னு ஒரே களேபரம்தான்...” என புன்னகையுடன் விவரித்தான்
கமலேஷ்.
“ஆஹான்...” என அவனது மார்பிலிருந்த கருநிற கற்றைகளுடன்
விளையாடியவள், “ஏன்ப்பா...
பசங்கள்லாம் இப்படி இருக்கிறாங்க? இன்னைக்கு சஸ்பென்ட் ஆன ஒரு பையனோட அப்பா அவனோட
சஸ்பென்ஷன் ஆர்டரை கையில் வாங்குறப்போ எப்படி நடுங்கினார்... தெரியுமா? ரொம்ப
சங்கடமாப் போச்சுது...” எனப் பேச, முறைத்தான்.
“ஆக மேடம் இவ்ளோ நேரம் அதைத்தான் நினைச்சிட்டு
இருந்திருக்கிறீங்க...” என அவன் சற்றே டென்ஷனாக, “இல்லப்பா... நீங்க உங்க ஆஃபீஸ்ல நடந்ததை சொன்னதும் எனக்கு
டக்குன்னு ஞாபகம் வந்துச்சு....” என்றவள், அவனது நம்பாத
பார்வையை உணர்ந்தவளாக, “அட... நம்புடா கமலேஷு...” என
கன்னத்தில் செல்லமாகத் தட்டினாள்.
“இப்படி ஏதாவது பண்ணியே கவுத்துடு...” என்றவாறே அவளை
அணைத்துக் கொண்டவன் காலைக் கதிரவனின் கற்றைகள் முகத்தில் உரைத்த பின்னரே விழித்துக்
கொண்டான்.
“ரைட்டு... இன்னைக்கும் நான்தான் அவுட்டு...” என தலையை
உலுக்கிக் கொண்டவன்,
காலைக் கடன்களை முடித்துவிட்டு படுக்கையறையிலிருந்து வெளியே வருவதற்குள் சமையலறையைவிட்டு
வெளியே வந்திருந்தாள் கரோலின்.
“என்னை எழுப்பியிருக்கலாம்ல... நீயே எல்லாத்தையும்
செஞ்சுக்குவன்னா நான் எதுக்கு?” என ஆற்றாமையுடன் வினவ, “பழகிடுச்சு... எல்லாத்தையும் நானே
செய்யறதுக்கு என்னை அடாப்ட் பண்ணிக்கிட்டேன்...” என அவள் தெரிவித்த மாத்திரத்தில் ஜிவுஜிவுவென
கோபம் தலைக்கேறியது அவனுக்கு.
“அடாப்ட் பண்ணிக்கிட்டியா?” என முறைத்தவன், கையில் கிடைத்த பாத்திரமொன்றை தரையில் விசிறியடிக்க, கரோலினின் கண்கள் சிவந்தது.
“இப்போ என்ன பிரச்சினை உங்களுக்கு? அதான் எல்லா வேலையும்
முடிஞ்சதுல்ல...” என அவள் அலட்சியமாகப் பேச, “ஹே... என் பிரச்சினையே அதுதான்டி... எல்லா வேலையையும் நீயே பண்ணிடற... ஆஸ்
அ ஹஸ்பண்டா, அப்பாவா என்னோட ரோல் என்னன்னு கேக்கறேன்...” என இயலாமையுடன் சோஃபாவில்
அமர்ந்தான்.
அவனருகே அமர்ந்தவள், “மாத்திக்கத்தான் ட்ரை பண்றேன்... முடியல...” என கலங்கிய விழிகளுடன் தெரிவிக்க, அவளது வதனத்தை கரங்களில் ஏந்திக் கொண்டவன், “மாத்திக்க
ட்ரை பண்ணும்மா... ப்ளீஸ்... எனக்காக... என்னையும் வேலை செய்ய சொல்லு, நான்
எழுந்துக்கலைன்னா சண்டை போடு, வீட்டு வேலைகள்ல எனக்கும் ஷேர்
கொடு, ஃபினான்ஷியல் டிசிஷன்ஸ்ல என்னையும் சேர்த்துக்கோ...
வெறுமனே பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்க்காக மட்டும் புருஷன் பொண்டாட்டியா இருக்கிற மாதிரி
ஃபீலாகுது கரோ... உன்னோட எமொஷனலி அட்டாச் ஆகணும்ங்கறதுதான் என்னோட இப்போதைய
இலட்சியமாவே இருக்குது...” என தானும் கண்கள் கலங்கிவிட்டான்.
“ப்ச்... கமல்... என்னதிது? ஃபினான்ஷியலி இன்டிபன்டன்டா டிசைன்
பண்ணப்பட்ட எல்டர் டாட்டர்ஸ் எமோஷனலி அட்டாச் ஆகுறது கஷ்டம்தான்... ஆனா... ஆனா... நான்
உங்களோட எமொஷனலி கனெக்டடாத்தான் இருக்கறேன்...” என்றவள், அவனது கரத்தை எடுத்து, தனது மார்பில் வைத்து, “நம்பலைன்னா கேட்டுப்
பாரு... உன்னோட பெயரைத்தான் சொல்லுது...” என்றாள்.
அதில் சிரித்துவிட்டவன், “இதயம் பேசாதுடா... லப் டப்ன்னுதான் துடிக்கும்...” என கேலிசெய்ய, “அருகம்புல் ஜூஸ் வச்சிருக்கிறேன்.. குடிச்சிட்டு மொட்டை மாடியில
வாக்கிங் போயிட்டு வாங்க... பசங்க எழுந்ததும் ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பணும்..”
என கன்னத்தில் தட்டியவள், தனது வழக்கமான உடற்பயிற்சி
செய்யும் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அதிகாலையில் எவ்வளவு சீக்கிரம் எழுந்து கொண்டாலும் சமையலறை
வேலைகளை முடித்தபின்னரே உடற்பயிற்சி செய்வது கரோலினின் வழக்கம். எத்தனை முறை
முயன்றும் அவளால் இதை மாற்றிக்கொள்ள இயலவில்லை.
ஒவ்வொரு நாளும் இரவிலேயே மறுநாள் காலை உணவிற்காக வீட்டிலேயே
வறுத்து அரைத்த ராகி/சோளம்/கம்பு இவற்றில் ஒன்றை கஞ்சியாகக் காய்த்து, வைத்துவிடுவாள். மோர் சேர்த்த கஞ்சிதான்
இருவருக்கும் காலை உணவு. குழந்தைகளுக்கு அதே மாவில் பேன் கேக், இட்லி, பீட்சா என அவர்களுக்குப் பிடித்தமான வகையில்
கொண்டு சேர்த்துவிடுவாள்.
மதிய உணவிற்கு அரிசியில் வடித்த சாதத்தின் அளவிற்கு
ஏதேனுமொரு காய்கறியால் செய்யப்பட்ட கூட்டு; இடைவேளையில் உண்பதற்கு பழங்கள், பழச்சாறு என
அனைத்தையும் தானே தயாரித்துவிடுவாள்.
கமலேஷிற்கும் கரோலினுக்கும் பிரதானமாக பிரச்சினை ஏற்படுவது
இந்த விஷயத்தில் மட்டும்தான்... அனைத்தையும் தனியாளாக சமாளிக்க முனைப்புக்
காட்டுவாள் அவள், என்னை
ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவான் அவன்.
அத்திபூத்தாற்போல எப்போதாவது அவனுக்கு வாய்ப்பு கிட்டும், அப்போதும் உதவுகிறேன் பேர்வழி என தானே பாதிக்கும்
மேற்பட்ட வேலைகளை முடித்துவிடுவாள்.
ஒருவாறாக இருவரும் தயாராகி, குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு தத்தமது பணியிடம் சென்று
சேர்ந்தனர்.
முதலாவது பாடவேளை வகுப்பு இல்லாததால் ரெபெக்காவிற்கு
அழைத்தாள் கரோலின்.
“ரெபேக்கா... பிஸியா? பேசலாமா?”
“ஹான்... சொல்லுங்க அண்ணி...”
“என்னடா புதுசா கேக்கற? நேத்து நீதானே நல்லா இருந்த
குட்டையை குழப்பிவிட்ட? இப்பவாவது தெளிஞ்சிருக்குதா இல்ல அப்படியேதான் இருக்குதா?”
“அப்படியேதான் இருக்குது...”
“அவன்கிட்டே இதை சொல்லிட்டியா?”
“ப்ச்... இல்ல... எப்படி சொல்றதுன்னு தெரியல...”
“தப்பா நினைச்சுக்கலைன்னா வேணாம்ன்னு சொல்றதுக்கு என்ன
காரணம்ன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“வந்து... இதை சொல்லலாமா என்னன்னு தெரியல... அதுவுமில்லாம
நீங்க இதை நம்புவீங்களான்னும் தெரியல...”
“முதல்ல சொல்லுடா... அப்புறமா சொல்றேன்...”
“உங்க தம்பி ரொம்ப அரகன்ட்...”
“காமெடி பண்றியா ரெபேக்கா? அவன் உன்மேல கோபப்படவே
மாட்டிக்கிறான்னு ஒரு தடவ சண்டை போட்ட... ஞாபகம் இருக்குதா?”
“இருக்குது அண்ணி... ஆனா நேத்து நான் என் கண்ணால அவரோட
க்ரூவல் மென்டாலிட்டியை பார்த்தேன்...”
“கண்ணால பார்த்தியா? என்ன சொல்ற??”
“நேத்து சர்ச்க்கு போனோம்ல.. அங்கே ஒரு பிச்சைக்காரர்
இருந்தார்... அவரை உங்க தம்பி தன்னோட பெல்ட்டால அடிக்கிறதைப் பார்த்தேன்...”
“வாட்????”
அதிர்ந்தாள் கரோலின். “இருட்டுல நீ வேற யாரையாவது பார்த்திருப்ப ரெபேக்கா... அவன் அப்படிப்பட்ட
ஆளில்ல... ரொம்ப இரக்க மனசுக்காரன்... நிறைய ஆசிரமத்துக்கு ஹெல்ப் பண்றான்ப்பா...”
“எனக்கே ஷாக்கிங்காத்தான் இருந்துச்சு அண்ணி... நான் இவரை
முதன்முதலா ஆசிரமத்துல வச்சுத்தான் பார்த்தேன்... நாங்க கேம்ப் போட்டிருந்த அநாதை
ஆசிரமத்துக்கு இவர் வாலன்டியரா வந்திருந்தார்... அப்புறமா நிறைய கேம்ப்ல பார்த்து,
பேசி, பழகித்தான் லவ் பண்ணத் தொடங்கினேன்... மனநலம்
சரியில்லாத நிறைய பேரை ரோட்ல இருந்து ரெஸ்கியூ பண்றதுக்கு ஹெல்ப்
பண்ணியிருக்கிறார்... எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்குது அண்ணி... ஆனா... ஆனா...
அந்த பெக்கர்மேன் ஒரு மனநலம் சரியில்லாதவர்... அதுதான் எனக்கு ஒண்ணுமே புரியல...
ஒருவேளை உலகத்துக்கு நல்லவனா ஆக்ட் பண்ணிட்டு இருட்டிலே தன்னோட சுயரூபத்தைக்
காட்டுறாரோன்னு...”
“அவன் என் தம்பிங்கறதுக்காக சப்போர்ட் பண்ணல... இருந்தாலும்
இயல்பான சாத்தியக்கூறா இதை சொல்றேன்... நீயே சொல்ற, ரெஸ்க்யூ பண்ண ஹெல்ப்
பண்ணியிருக்கிறான்னு.. இதுவும் அதுல ஒண்ணா இருக்கலாம்ல.. மே பீ அவர் அவனை அட்டாக்
பண்ணியிருக்கலாம்...”
“ஆனா சத்தம் கேட்டதும் அந்த இடத்துல இருந்து உங்க தம்பி
வேகமா போயிட்டார்... அப்புறமா எதுவுமே நடக்காத மாதிரி இயல்பா நம்மோட வந்து
பேசிட்டு இருந்தார்...”
“இதை நீ அவன்கிட்டே நேரடியாத்தான் கேட்கணும்... தெளிவா
பேசினா அவன் தரப்பு நியாயத்தை சொல்லப் போறான், ஏத்துக்க முடிஞ்சா ஏத்துக்கோ... இல்லன்னா என்ன தண்டனை தரணுமோ அதைக்
கொடு... அதைவிட்டுட்டு இம்மெச்சூர்ட் டீனேஜர் மாதிரி எடுத்ததுக்கெல்லாம் ப்ரேக்அப்ன்னு
விளையாடிட்டு இருக்காதே... ரெண்டு குடும்பமும் ரொம்ப ஆர்வமா தயாராகிட்டு
இருக்கிறாங்க... அதுவுமில்லாம உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் அவ்ளோ காதலும் ஆசையும்
கனவுகளும் இருக்குது... அதை ஞாபகத்துல வச்சிக்கோ...” என கரோலின் அறிவுறுத்த, “சரி
அண்ணி...” என கேட்டுக் கொண்டாள் ரெபேக்கா.
அன்று மாலையில் தன்னவனிடமிருந்து அழைப்புவர, சற்று தயக்கத்துடனே ஏற்றாள் ரெபேக்கா.
“என்னடா... பிஸியா? நைட்தான் டயர்டா இருப்பன்னு டிஸ்டர்ப்
பண்ணல... காலையில இருந்து சிங்கிள் மெசேஜ்கூட பண்ண மாட்டேங்குற?” என அவன் இயல்பாக
விசாரிக்க,
“ரொம்ப டயர்டா இருந்துச்சு ஐசக்...” என்றாள்
சுரத்தேயில்லாமல்.
“அம்மு... ஆர் யூ ஓகே? வாய்ஸ் டல்லா இருக்குது... நிஜமாவே
டயர்டா இருக்குதா இல்ல வேற ஏதாவது பிரச்சினையா? எதுவா இருந்தாலும் ஃபீல் ஃப்ரீ...
என்கிட்டே சொல்லு...” என அவன் அக்கறையுடன் விசாரிக்க, எதிர்முனையில் அமைதியாக இருந்தாள் அவள்.
“சாரீ பிடிக்கலையா? நீதானே மஸ்டர்ட் எல்லோ வேணும்ன்னு
முன்னாடியே சொன்ன...” என அவன் குழப்பத்துடன் பரபரக்க, “ரொம்ப பிடிச்சிருக்குது..” என்றாள்.
“அப்புறம் என்னதான்டா பிரச்சனை? உன் வாய்ஸ் சரியில்லைன்னாலே
எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி டென்ஷன் ஆகுது... சொல்ல விருப்பமில்லைன்னா
விட்டுடு... அதைவிட்டுட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு இன்ட்ரெஸ்ட் இல்லாம பேச வேணாம்...”
என்றான் எரிச்சல் மிகுதியில்.
“அப்படியெல்லாம் எதுவுமில்ல ஐசக்... நார்மலாத்தான்
இருக்கிறேன்...” என அவள் அப்போதும் பொதுப்படையாகப் பேச, “இத்தனை வருஷத்திலே நீ நார்மலா இருந்தா
எப்படி பேசுவன்னு எனக்குத் தெரியாதா? இவ்ளோ நாளா வெறும் ஐசக்ன்னுதான் சொல்லிட்டு
இருந்தியா? நானே மறந்தாக்கூட காலையில ‘குட் மார்னிங் அத்தான்’னு பைபிள் கோட்
அனுப்புறவ இன்னைக்கு ஏன் அனுப்பல? எல்லாம் ஏன்னு தெரியாதுன்னு நினைச்சிட்டு
இருக்கிறியா?” என சீறிவிட்டான்.
இதை எதிர்பாராதவள், “என்ன?” என திகைக்க, “நேத்து சர்ச்ல உன் ஃப்ரென்ட்
உன்கிட்டே பேசிட்டு இருந்தது எனக்கு தெளிவாவே கேட்டுச்சு... டாக்டர்க்கு
படிச்சிருக்கிற, இவ்ளோ அழகா இருக்கிற.. ஆனா ஏன்டி
இன்ஜினியரிங் முடிச்சவனை கட்டிக்கப் போற? இவன் உன்னைவிட கலர் கம்மியா
இருக்கிறான்னு அவ சொன்னதுக்கு அப்புறம்தான் உன்னோட முகம் மாறிச்சு...
பேச்சுக்குத்தான் எனக்காக சப்போர்ட் பண்ணுனியே தவிர, அதுக்கு
அப்புறம் உன்னோட முகமே சரியில்ல... கார்ல வரும்போது கரோ அத்தனை தடவை என்னாச்சுன்னு
கேக்கறா, நீ மழுப்புற... அதுக்கு அப்புறமும் நான் அத்தனை
டெக்ஸ்ட் பண்றேன், நோ ரிப்ளை... லவ் பண்றதுக்கு முன்னாடி
நான் இன்ஜினியர், உன்னைவிட கலர் கம்மியா இருக்கிறேன்னு தெரியாதா? நீதானே முதல்ல
ப்ரொபோஸ் பண்ணின, நீதானே என் அப்பா அம்மாகிட்டே இன்ட்ரோ
கொடுத்த... அப்போல்லாம் உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்கலையா? உன்னை
எவ்ளோ உயரத்திலே வச்சிருந்தேன் தெரியுமா? நீயும் டிபிக்கல் பொண்ணு மாதிரி
பண்ணிட்டு இருக்கிற?” என அவன் தன்போக்கில் கத்திக்கொண்டே போக, “என்ன? உங்களுக்கு மட்டும்தான் பேசத் தெரியும்ன்னு பேசிட்டு
இருக்கிறீங்களா? நான் ஃபிஸிக்கல் அப்பியரன்ஸ் பார்த்துத்தான் லவ் பண்றேன்னு
உங்ககிட்டே சொன்னேனா? இல்ல அவளுக்கு பதில் சொல்லாம இருந்தேன்னு உங்களுக்கு
தெரியுமா? சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்கிறீங்க? என்னோட அப்செட்க்கு
காரணம் அவ இல்ல... நீங்க... உங்களோட ஆக்ஷன்...” என குறுக்கிட்டாள் ரெபேக்கா.
இசை ஒலிக்கும்...
கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு அப்புறமா கதை எழுதத்
தொடங்கியிருக்கிறேன் மக்களே! எப்படி வரப்போகுதுன்னு தெரியல... வழக்கம்போல உங்க
கருத்துகள் மற்றும் அன்பால தொடர்ந்து ஊக்குவிக்குமாறு கேட்டுக்கறேன்.. முடிஞ்ச
அளவு தினமும் எபிசொட் தர ட்ரை பண்றேன்... நன்றி!

0 Comments