காதல் கள்வனுக்கு...
கண்களை கண்ட நொடி காற்றில் கரைந்து போனேன்...
கண்ட எனக்கு தான்
கட்டிய கப்பல் கவிழ்ந்தது....
சொல்லும் சொல்லில் அன்பு
செறிந்த வார்த்தைகளை
செல்லில் பதிவிட்டு
சேமித்தேன்.....
சொன்ன வார்த்தை அனைத்தும்
செல்வமிழந்தது என்றாய்....
செல்ல சொற்கள் சீரெழுப்பிய
செல்வமிகு மாளிகை சீரழிந்தது......
இவ்வளவு நடந்த பின் பேசாமல்
இறுக்கமாய் இருந்தால்??
இறுகிய மனதுடன் இருப்பதற்கு
இவளிடம் தான் கற்கவேண்டும்...
உன்னால் என்னிடம் பேசாமல்
உண்ணவும் உறங்கவும் முடியும்
என்னால் ஏனோ உன்னை
எதிர்பார்க்காமல் எந்த வித எண்ணத்திலும்
என்னை புதைக்க இயலாது என்கிறாய்.
என்னால் உனக்குள் சில மாற்றங்கள் உருவாகிறது
என்பதை நீ ஏன் உணர மறுக்கிறாய்....
மாறாக என் மனதை ஊக்குவிப்பதும் நீயே....
சுக்கு நூறாக
உடைப்பதும் நீயே....
இதை எல்லாம் அறிந்தும் அறிவை நம்பாது மனதின்
சொல்லை கேட்டு
என்னை நானே பைத்தியம் என கூறி கொள்கிறேன்....
நடக்காத ஒன்று என நெறிமுறைகள் கூறினாலும்
நினைவு அங்கே தான்
நடை போடுகிறது....
கஷ்டப்பட்டு கடினப்பட்டு கல்லாக கட்டுண்டு போன என் இதயம்
கேட்காது தான்....
கடிவாளம் போட்டு மறக்க கட்டளையிடுகிறேன்....
இரக்கமேயில்லாமல் காலம்
இரண்டு வெவ்வேறு பட்ட
இதயங்களை இவ்வுலகில்
தனித்தீவுகளாய்
இடைவெளியுடன் இருக்க
வைத்ததற்காய்
இரங்கல் விழா கொண்டாடட்டும்...
நடக்காததை நினைத்து நிகழ்காலத்தை
கைவிடாதே என
நபருக்கு அறிவுறுத்திய எனக்கு
நினைவில் வாழும் நீ
நிகழ்த்தி விட்டு சென்றதற்காய்
நித்தமும் நன்றியுடன் நான்......
0 Comments