புதுமைப் பெண்
தரணி போற்றும் தாரகை பெண்..
தனக்குள்ளும் தனிப்புதுமையை படைத்திட துணிபவள்..
புயலாய் வரும் சோதனைகளையும்
பொங்கி எழும் கண்ணீர்களையும்
பெரிதென எண்ணாமல் அடக்கிடல் வேண்டும்...
தவறென கண்டபின்னும் தட்டிக்கேட்க
தயங்குவதை தவிர்த்திடல் வேண்டும்...
தன்னவன் உதவி தேடிடலும் வேண்டும்...
தனியென உறுதியாய் வென்றிடலும் வேண்டும்..
உறவுகளின் உன்னதத்தை உணர்ந்து உரையாட வேண்டும்...
தோழியின் தோளாக தைரியமூட்டலும் வேண்டும்...
பாதகர் பாவங்களை பொசுக்கிடல் வேண்டும்...
நாடாளும் நவயுகநாயகியாகவும் வேண்டும்...
அடுப்பு முதல் ஆண்ட்ராய்டு
அனைத்தும் அறிந்திடல் வேண்டும்...
வறியவர்க்கு கருணையின் வடிவாய் மாறிடல் வேண்டும்...
கொடூரனுக்கு காளி தேவியாய் மாறிடல் வேண்டும்...
பாரதியின் புதுமை பெண்ணை பாடுவோர்
புதுமை பெண்ணாய் வாழ பற்றில்லாதது ஏனோ...
- புதுமைபெண்ணாய்...
0 Comments