ஹலோ...
அவளி(னி)ன் குரலில் தான் எத்தனை ஈர்ப்பு..
சிலரை 'மைக்கை விழுங்கிவிட்டாயா..'என கேலி பேசியதும் உண்டு...இவளோ(னோ) 'காந்தம் விழுங்கி விட்டாள்..' போலும்...
போனை காதில் வைத்ததும் அவள(ன)து தொண்டையில் தண்டனை காலம் நிறைவடைந்து...
வாயானது பற்களை கொண்டு சிறைபடுத்தி...
பாதி சிந்தியபடி எனது காதில் விழும்
அவள(ன)து 'ஹலோ'விற்கு தான்
நான் கொத்தடிமை ஆனேன்...
0 Comments