திருமணம் சுமையா?? சுகமா??

திருமணம் சுமையா?? சுகமா??



 நித்தமும் நின்னோடு நீங்காது நித்திரையுடைத்து நிந்திப்பேன் என நீயுரைக்கும் நிமிடங்கள் நரகம்.. என தோன்றினாலும் நான்கே நிமிடத்தில் நீதரும் நீங்கா நினைவுகள் மட்டுமே நிரந்தரமாய் தங்குகிறது...காதல் திருமணத்தில் மட்டும் கிடைக்கும் அழகான வரம்...

ஒரு எழுபது வயது பெண்மணி இறந்தப்பின்னும் அவள் கணவனின் மீது அவள் வாசம் வீசுகையில் அவர்களின் காதலை பார்க்கலாம்... நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மட்டும் கிடைக்கும் அரிதான வரம்....

ஒரு கணம் பந்தத்தில் இணைய வெறுப்பும் சில கணங்களில் என்றோ
கிடைக்கும் காதல் துளிக்காய்
காத்திருப்பதில் பிழையில்லை என்றோ
நினைவுகள் நிலையின்றி நீந்துகிறது...

திருமணம் என்பதில் திருத்தமானசில  திருப்பங்கள் உண்டு...
ஒன்று பிடித்தவரோடு பிடித்த மாதிரியான வாழ்க்கை...
மற்றொன்று பிடித்தவரோடு பிடிக்காத மாதிரியான வாழ்க்கை....
இறுதியாக பிடிக்காதவரோடு பிடித்தமாக்கிய வாழ்க்கை...

வாழ்க்கையை வாழ தேர்ந்தெடுத்தால்
திருமணம் என்பது திரும்பி இடமெல்லாம் தித்திக்கும்
தேனினைவுகளை தரும்....

                       
Reactions

Post a Comment

0 Comments