தனிப்பெற்றோர்
பாரினில் பாவப்பட்ட புறாக்கள்கூட இணையில்லாது பிரிந்து வாழாது...
பாமரன் ஒருவன் பத்தினியை பாரினை விட்டு பிரிந்த பொழுதிலே பெண்படும் பாடு பரிதாபம் தான்....
பால்மறவா பாலகனின் பொறுப்பைக் கொண்டு பதியைத்தேடா பாரினைவிட்டு பறக்க பச்சாதாபம் எழாது...
பத்து மாதத்தில் தொடங்கி பேரனை பெறும் வரையிலும் பெண்காணும் பேரவலம் எங்கும் கிடையாது...
விதவைத்தாயென விட்டுவைக்காது வெறிநாய்கள் வேட்டையாட வேவுப்பார்க்கும்...
தனியொருத்தியாய் தாரகத்தில் தன்மகனை(ளை) தரமுயற்சித்து தன்னையும் உருக்குகிறாள்...
தந்தையானவன் தனியானால் தான்கொண்ட தவப்புதல்வியை தாரைவார்த்துக்கொடுக்கும் தினம்வரையில் தணலென கொதிக்கும் தன்நெஞ்சம்...
தவறானமொழிகளில் தன்மகள் தவித்துவிடக்கூடாதென தயங்கும்....
தாயாய் இருந்தால் கண்டிப்பு காணாமல் சென்றுவிடுமோ என்ற கண்மூடித்தனமான பயம்...
தந்தையாய் இருந்தால் ஒழுக்க நெறிகள் ஒழுங்கில்லாம் சென்றுவிடுமோ என்ற ஒரவஞ்சனையான பயம்...
ஆணோ பெண்ணோ, இல்லாதவரின் வளர்ப்பையும் சேர்த்தே அளிக்க, இரு வேடங்களிலும் சிறப்பாய் செயலாற்ற சிரமங்கள் பல
ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒவ்வொருவரின் மீதும் நம்பிக்கை கொள்ளாது தொடரும் அந்தப் பயணம் தான் காட்டிற்குள் செல்லும் புள்ளிமான் போல...
காகிதபணம் தொடங்கி காதல்வரை விரும்புகின்ற பொழுதெல்லாம் வீட்டு வாசலில் காத்திருக்கும் அவர்கள் பெற்ற செல்வங்களுக்கு...
ஆனால் முடிவில் அவர்கள் பெற்ற செல்வங்களுக்காக பெற்றோரின் மனம் காத்திருக்கும் முதியோர் இல்ல வாசல்களில்...
0 Comments