Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

வெளிநாடு வாழ் கணவன்..

 வெளிநாடு வாழ் கணவன்..




கணவனாய் கரம் பிடித்த கணபொழுதில் காதலை உணர்த்தியவன்,
கடைசித்துளி காதலையும் மிச்சமின்றி வழங்கியவன்,
கண்ணீர் வழியவிட்டு கண்ணனின் கண்ணின்                                         கலக்கத்தை மறைத்துக்கொண்டே சென்றவன்,

இன்றுவரை,
கடைவீதியில் காற்றாட கால்கள் நடைபோட, கரம் பிடித்து நடக்க கண்ணாளனின் துணைதேடுகிறது...
குழந்தைகள் கூட அடம்பிடிக்காமல் அம்மாவிடம் பழகிக்கொள்ள ஏனோ கணவனின் அண்மை கிடைக்காமல் மனம் அல்லாடுகிறது...

காதல் வரிகள் கொண்ட பாடல்களுக்கு செவிசாய்க்கும்போது காதுமடல்களில் கீதம் வாசிக்க வசீகரன் இல்லையென வசைபாடுகிறது மனம்...

இரவுகளில் கானம் பாடி உறங்க வைக்கும் இல்லாளன் இன்றி
துணைக்கு தலைகாணியை அணைத்துக்கொள்கிறாள் தாரகை..

இரண்டு நாட்களில் அவன் உணர்த்திய காதலை                                              இரண்டரை வருடங்கள் ஆகியும் ரசித்து வாழ்கிறாள்......

ஒவ்வொரு பொழுதுகளிலும் என்னோடு பேசுவதில்லை மாறாக சந்தோஷமோ துக்கமோ மிகும் வேளையில் முதலில் வந்து சேர்வதே அவனின் காதல்..

கடல்கடந்து சென்றவனுக்காக கால்கடுக்க வாசலில்...




Post a Comment

0 Comments