ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் 



அகரம் முதல் கரம் வரை

ஆதி முதல் அந்தம் வரை
அடி முதல் அறிவுரை வரை
ஐந்து முதல் ஐம்பது வரை
பிறப்பு முதல் இறப்பு வரை
படிப்பு முதல் பகுப்பறிவு வரை

எந்த உருவிலாவது எந்த நெறியையாவது                                            எச்சரித்துக்கொண்டே இருக்கும்

வாழ்வை வாழ்வதில் தொடங்கி
வழக்காடுவது வரை வெற்றி பெற
வைப்பது மின்னும் இவ்வைரங்களே

அடித்தாலும் அணைத்தாலும்
அதிலுள்ள அர்த்தம் அறியும்..

வகுப்பறைகளில் வழக்கமான பாடங்களை
விட்டு வாழ்க்கையனுபவங்களை வழங்கி
வெளிப்படையாய் வடிவமைப்பர்...

அன்று வாங்கிய அடி
இன்றும் வலிக்காமலில்லை
அதே தவற்றை மீண்டும்
இழைக்க மனம் நேரிடும்போது...

அறிவாற்றல் கொண்ட ஆசிரியர்கள் மாறலாம்
ஆனால், அவர்களின் கடமை அவசியம் அங்கம் வகிக்கும்...

ஆசிரியர் தொழில் என்ற பிரிவுகளில் சிக்குண்டாலும்
தியானம் என்ற தியாகத்திலேயே நிலைத்திருப்பர்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

Reactions

Post a Comment

0 Comments