“ரொம்ப
நாள் கழிச்சு நம்ம பாஸ்ட்டை பாக்குறது எவ்ளோ அவ்புல்லா இருக்கும் தெரியுமா?? ஒன் மினிட்
முன்னாடி கூட, வ்வா லைப் எவ்ளோ கூல் அண்ட் ஸ்மூத்தா போகுதுன்னு சந்தோசப்பட்டேன்..
இதோ வந்துருச்சு.. எஸ்.. அவனை பார்த்ததும் ஷிப்ட் ஆனேன் தான்.. லைப்ல மூவ் ஆன் ஆக
வேண்டிய பார்ட்டீஸ் நிறைய இருக்குறாங்களே.. வாட்எவர் நான் அச்சம் கொள்ளவில்லை
எனதருமை பார்வையாளர்களே.. ஜஸ்ட் அவாய்ட் கரோ.. பார்த்தா என்ன பண்ற?? எப்படி இருக்குற?? ப்ளா ப்ளா.. இப்படி நிறைய பேச
வேண்டியிருக்குமே.. நின்னு நிதானமா பேசுற அளவுக்கு டைம் நிறைய கொட்டி கிடக்குது..
மைன்ட் செட் இல்லையே..” -தீஸ்தா.
உதடுகள்
துடிக்க பேசி கொண்டிருந்தவளின் பின்னால் தொடுகையை உணர, “ஹவ் டேர்??” என மனதிற்குள்ளே கருவி கொண்டு தீஸ்தா திரும்ப, “விவாஹா
செக்ஷன் எங்க இருக்குது??” என கேட்டபடி ஐம்பது வயது மிக்க
பெண்மணி ஒருவர் நின்றார்.. அவளும் தன்னை மேலும் கீழும் பார்த்து சுயபரிசோதனை இட்டு
“நான் எந்த ஆங்கிள்ள சேல்ஸ் கேர்ள் மாதிரி தெரியுறேன்..” என குழம்பி
கொண்டிருந்தாள்..
அப்பொழுது,
“அம்மா, அவங்க சேல்ஸ் கேர்ள்
இல்லை.. கஸ்டமர்.. நீங்க கேட்ட செக்ஷன் லெப்ட் கார்னர்ல இருக்குது..” என கூறியவன்
அவர் சென்ற பின்னும் பேண்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்து இடமாக தலையை சாய்த்து தீஸ்தாவை
உறுத்து நோக்கி கொண்டிருந்தான்.. “ம்க்கும்..” என உதட்டை சுழித்து முகத்தை திருப்பி கொண்டாள்.. அவனுடைய
முகபாவத்தை காணும் பொருட்டு விழிகளை பக்கவாட்டில் உருட்ட,
இன்னமும் அதே ஸ்டைலில் தான் நின்றான்..
அதற்கு
மேலும் கட்டுப்படுத்த முடியவில்லை சிரிப்பை... “கபீர்...” என அவளுக்கே உரித்தான
உச்சரிப்பில் அழைக்க, “தீஸ்தா, என்னை மறந்துட்டியா?? ஏன் என்னை
பார்த்ததும் தெரியாதவங்களை அவாய்ட் பண்ற மாதிரி நடந்துக்குற..” என இறுக்கமாக
முகத்தை மாற்றினான்.. “ஆமா அவாய்ட் பண்ணினேன்.. என்ன பண்ணுவ??”
என திமிராகவே தீஸ்தா பார்வையை உயர்த்த, “தீஸ்... பயந்துட்டியா?? ஹஹஹா.. சர்காட்டிக் குயினே காமெடியை பைட்டா மாத்துறது ரொம்ப ஆச்சரியமா
இருக்குது.. இந்த சிக்ஸ் மன்த்ஸ்ல அந்த க்ரிஷ்பினஸ் உன்கிட்ட இருந்து போயிடுச்சா??” என புஜத்திலே மெலிதாக தட்டினான்..
“யா..
மே பி என்னோட க்ரிஷ்பினஸ் க்ரஷ் பேப்பர் மாதிரி வேஸ்ட்டட் ஆயிருக்கலாம்.. பட்
சிக்ஸ் மன்த்ஸ்க்கு முன்ன நான் பார்த்த அதே ஜெல் நேச்சர் இன்னமும் உன்னை விட்டு போகலைன்னு
நினைக்குறேன்..” என புன்னகை மாறாமலேயே கூரியவளின் பேச்சில் கேலி தொனித்தது..
அவளின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனுக்கு இந்த கேலி பெரிதாக தோன்றவில்லை..
“கம்
ஆன் யா.. எல்லாருக்கும் இந்த மாதிரி சீக்கிரமே ரியூனியன் கிடைக்குறதில்லை..” என
தோள்களை அணைத்தான் கபீர். “ஐ அக்ரீ...” என ஆமோதித்தவள் வெற்று சிரிப்பை
படரவிட்டாள்.. அந்த புன்னகையை பார்த்து எத்தனை நாட்கள் ஆகிறது.. அன்று வெற்றி
சிரிப்பு இன்று வெற்று சிரிப்பு.. இரண்டிற்குமே இவனும் ஒரு காரணம் என நினைக்கும்
பொழுது சற்று அகந்தை கூடி போனது..
“வெல்..
நீ..” என கபீர் தயக்கத்தை கையில் எடுத்திருக்க, “சாரி கலெக்ஷன்ஸ் பார்க்க வந்தேன்..” என
தயக்கத்தை உடைத்தாள்.. “ஒ.. ஐ பர்காட்..” என பாசாங்கிற்காக வார்த்தைகளை உதிர்க்க, “நான் இப்போ கிளம்பனும்.. சி யூ லேட்டர்..” என விடைபெற்று சென்றாள்
தீஸ்தா.. கேள்விகளை மட்டுமே எழுப்பும் கருவிழியாள் விடையின் வீட்டை வாடகைக்கு
எடுத்து விடைபெற்றும் செல்கிறாள்..
“நாட்
பேட்.. நான் நினைச்ச மாதிரி சினிமாட்டிக் மீட்டிங்கா இருந்து.. அது எப்படி..
ஹாங்.. கண்மூடும் வேளையிலும் என்னுள் கலங்க மாட்டாயடி கண்மணியே.. இப்படி எந்த
சீரியலிஸ்டிக் டைலாக்கும் ஓடல.. கிரேட் எஸ்கேப்.. ஒ.. நான் யாருன்னு சொல்லலையே..
கபீர்.. ஒன்ஸ் அப்பான் ய டைம் மை பெஸ்ட் ஒன்.. இன்னைக்கு வொர்ஸ்ட் ஒன்.. திஸ் ஒன்
லைன் அன்நேசசரி தான்.. பட் ரைமிங் பெர்பெக்ட்டா வருதில்லையா?? ஹஹஹா.. கபீரை இனி
என்னோட லைப்ல பார்க்கவே கூடாதுன்னு கண்ல கண்ணீர் ஓட சபதம் எல்லாம் எடுக்கலை.. பட்
சின்னதா மனசுக்குள்ள ஒரு டிசிஷன்.. இப்போ அதுவும் காலி..”
-தீஸ்தா
வெள்ளை
பளிங்கு தளத்தில் தனது மீடியம் ஹைட் ஹீல்ஸ் கீறிடும் வகையில் ஒவ்வொரு அடியிலும்
வேகத்தை குறைத்து அங்கும் இங்குமாய் வேடிக்கை பார்த்து கொண்டே நடந்தாள்.. இவ்வாறு
தனியே விதவிதமான மனிதர்களின் நடுவில் எந்த சிந்தனையும் இன்றி இளைப்பாற நடைபயில்வதில்
அலாதி சுகம் அவளுக்கு.. சுற்றிலும் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளுடன் தினமும் தீர்ந்து
போவதால் வெளியிடங்களில் அதன் மேல் கவனத்தை செலுத்துவதில் நாட்டம் குறைவு..
சாத்விக்கும் அர்ஜுனும் வீடியோ காலில் இணைந்து ஏதேனும் ஒன்றை தெரிவு
செய்திருப்பர்.. அதுவரையில் இருவரின் கவனத்திற்கும் செல்லாமல் இப்பொழுது நேரத்தை
கடத்த வேண்டும்..
இறுதியாக
அடுக்கப்பட்டிருந்த பலவகையான பகட்டான பர்ஸ் அடுக்கப்பட்டிருந்த பிரிவின் அருகே
சென்றாள்.. ஒவ்வொன்றையும் கைகளில் எடுத்து வருடி, வேலைபாடுகளை சிந்தையில்
அடுக்குகளாக சேமித்தாள்.. இன்னும் இரண்டே நாட்களில் அதே பர்சினை மேலும் அழகோடு
உருவாக்கி விடுவாள்.. அப்பொழுது, அவளின் கரத்தை பிடித்து இழுத்த கபீர், வேகமாக
கூட்டி செல்ல “கபீர் என்னாச்சு??” என்ற கேள்விக்கு பதிலில்லை.. இழுத்த இழுப்பில் நகர்ந்தவளை அந்த மாதிரி
முயற்சிக்கும் அறையினுள் (trail room) சென்று
கதவை அடைத்தான்..
“ம்ம்..
ஐ தாட்.. மீட் பண்ணும் போது ல சேஞ்சஸ் நடந்திருக்கும்.. நோ வே.. இவனோட ஆட்டிடியூட்
இல்லை பீகேவியர் கூட மாறலை.. இவனோட இந்த ஹேபிட்ஸ்னால இப்போ எப்படி என்ன ப்ராப்ளம்??ன்னு தெரியாமலேயே
கூட இருக்குறேனோ அப்படி தான் பர்ஸ்ட் மீட்ல இருந்தேன்.. எங்க பர்ஸ்ட் மீட் தான்
என்னோட லைப் ஹிஸ்டரில மோசட் க்ரிஞ் அண்ட் சினிமாட்டிக் ஒன்...” -தீஸ்தா
ஒரு
வருடத்திற்கு முன்,
அறையினுள்
அங்கும் இங்குமாக நடமாடிய தீஸ்தா, தனக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சென்ற
வருடம் பிறந்தநாள் பரிசாக அர்ஜுன் வாங்கி கொடுத்த அமெரிக்கன் டூரிஸ்ட் ட்ராலியில் அள்ளி
போட, எப்பொழுதோ நிறைந்து விட்ட பெட்டி கண்களாலேயே அவளிடம் இறைஞ்ச, சிறிதும் கருணையே
பிறக்காமல் அழுத்தி மூடினாள்.. பால்கனியில் க்ரீச்சிடும் சத்தம் கேட்கவும் மனம்
பிசைய, அவளின் முகம் காண தைரியமில்லை.. அந்த குட்டி குட்டியான கண்களையும் அலகையும்
கொண்ட சிட்டினை கண்டால் மறுகணமே இவளின் முடிவின் உறுதி சரிய துவங்குமே..
“ஒ..
மை டியர் பிக்கி.. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. இங்க இருக்குற இந்த கிளைமேட், காலையில நடக்குற
என்னோட எம்பரசிங்கான பீகைவியர், க்ளம்சியான இந்த ரூம், ஓவர்
கேரிங்கான அர்ஜுன்.. எல்லாரையும் விட உன்னை பாக்க முடியாதுன்னு நினைக்கும் போது
தான் ஐ பெல்ட் டவுன்.. பட் நான் என்னோட டெசிஷன் தப்புன்னு யோசிக்குற மாதிரி
சிச்சுவேஷன் மாற விடமாட்டேன்.. இன்பாக்ட் என்னோட டெசிஷன் தப்பு இல்லை.. அர்ஜுன்
அடிக்கடி பிஸ்னஸ் விஷயமா வெளிய போறாரு.. என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுனாலும் அது
எனக்கு ஓவர்டோஸா தெரியுது.. லோன்லியாவே இருந்ததுனால அது எனக்குள்ளே அபெக்ட்
பண்ணியிருக்குதுன்னு நான் நினைக்குறேன்.. சோ இங்க இருந்து போறேன்.. எங்கேன்னு
எனக்கே தெரியாது.. பெர்பெக்ட்டான இன்கண்வீனியன்ட் பேலஸ்ல இருந்து கிளம்ப போறேன்.. தட்ஸ்
பைனல்.. பை அர்ஜுன்.. சாரி அண்ட் மிஸ் யூ..” என ஏக்க பெருமூச்சிட்டு அவளுக்கென
காத்திருந்த டாக்சியில் பெட்டிகளோடு ஏறினாள்..
ஆர்.ஆர்
அவென்யு,
“உப்..
இந்த ஹாட்டான சிட்டில ஹாட்டான பாய் பிரெண்ட் கிடைக்குறது கூட ஈசியர் தன் பைண்டிங்
எ நியூ அப்பார்ட்மென்ட்.. பிப்டீன் அவென்யூஸ் ட்ரை பண்ணிட்டேன்.. ஆல் ஆர் புக்கிங்
அண்ட் பில்ட்.. அல்தோ எல்லா இடத்துலேயும் ரெண்டு கண்டிஷன்ஸ் இருக்குது.. பர்ஸ்ட் ஒன்
அல்ரெடி புக் பண்ணியிருக்கணும்.. அதுக்கு என்கிட்டே டைம் மெஷின் இல்லை பாஸ்..
செகண்ட் ஒன் ஸ்டே பண்ணியிருக்குற கேண்டிடேட் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.. இந்த
கண்டிஷன் நாட் அப்ளிக்கபில் டு மை கேரக்டர்.. புதுசா ஒருத்தரை அவ்ளோ ஈசியா லைப்ல
இன்வால்வ் பண்ண முடியாது.. ஓகே இது நமக்கு செட் ஆகும்னு ஒரு இன்ஸ்டின்க்ல
அக்செப்ட் பண்ணிகிட்டாலும் நாளைக்கு ஜெல் ஆகாம போய்ட்டா இந்த ஒரு கண்டிஷனுக்காக
நடக்குற எல்லாத்தையும் என்டுரன்ஸ் பண்ணிட்டு போக முடியாது.. சோ வேற ரூட்டை
தேடனும்..” -தீஸ்தா
அந்நேரத்தில்
பெல்லாவின் நினைவு வர, கைபேசியில் பெயரை துளாவி தூண்டில் இட்டாள்.. “ஹான்.. பெல்லா.. நான்
பிப்டீன் அவென்யு போயிட்டு வந்துட்டேன்.. நோ வேக்கன்ட்.. உனக்கு தெரிஞ்ச ப்ளாட்ஸ்
ஆர் ஹவுஸ் ப்ரோகேர்ஸ் இருந்தா சஜெஸ்ட் பண்ணு..” என கேட்க, “மை
ஸ்வீட்டி பிரெண்ட் தீஸ்தா.. இங்கே ப்ளாட்ஸ் கிடைக்குறது ரொம்ப ரேர்.. ஹெல்ப்
கேக்குறது உன்னோட நேச்சர் இல்லைன்னு தெரியும்.. அதுக்காக இப்படி க்ரிட்டிக்கல்
சிச்சுவேஷன்ல கூட ஹெல்ப்பை இப்படி தான் கேட்பியா?? ஐ நோ
உனக்கு ஈகோ கொஞ்சம் ஜாஸ்தி.. சோ ப்ரோகேர்ஸ் நம்பர் தர்றேன்.. உன்னோட
சாட்டிஷ்பாக்ஷனுக்கு ட்ரை பண்ணிட்டு ஒழுங்கா என்னோட ரூம்க்கு வந்து சேரு..” என்றாள்
பெல்லா அக்கறையுடன்..
இரண்டொரு
நிமிடத்தில் எண்களை பகிர்ந்திருக்க, இந்த கனமான பெட்டிகளை மேலும் சுமந்து தீர்க்க இயலாது என்பதால் இங்கேயே
வைத்து விட்டு மீண்டும் வந்து எடுத்து கொள்ளலாம் என்று எண்ணினாள்.. காம்பவுண்ட்
வாசலில் சிறு குடைக்குள் அமர்ந்து எஸ்பிபி பாடலின் ஸ்ருதியில் மெய்மறந்து
லயித்திருக்க, ஜன்னல் கண்ணாடியை தட்டினாள் தீஸ்தா.. கண்களை
திறந்த வாட்ச்மேன் அவளை திருதிருவென விழிக்க, “தாத்தா, வேக்
அப்.. ஐ வான்ட் சம் பேவர் ப்ரம் யூ..” என கூற, கண்ணாடியை
கடந்து அவளின் குரல் பயணிக்காததால் வெளியில் இறங்கி வந்தார்..
“என்னாம்மா??” என கண்களை
சுருக்கி நோக்க, “அங்கிள்.. நான் இந்த பிளாட்டுக்கு புதுசா குடி
வந்திருக்குறேன்.. சோ என்னோட லக்கேஜ் இங்கேயே இருக்கட்டும்..” என புதிய கதை ஒன்றை
கட்டிவிட, அப்பாவியான காவலாளி அதையும் நம்பி அனுமதி
அளித்தார்.. சுமையை கழற்றி விட்ட
திருப்தியில் குஷியோடு கிளம்பியவள் தரகருக்கு அழைக்க, மாலிற்கு வருமாறு கூறிவிட்டார்..
கையில்
போன் மற்றும் பர்சோடு அவர் கூறிய மாலினை அடைந்த தீஸ்தா, தரகர் வர தாமதமானதால்
மெல்ல காபிடேரியாவிற்குள் நுழைந்தாள்.. சூடாகவே சுற்றி கொண்டிருந்ததற்கு இதமாக
கூல் காபியை ஆர்டர் செய்து அருந்த துவங்கினாள்.. அப்பொழுது அலுவலக ஒப்பந்தம்
குறித்து நேரில் சந்தித்து பேசுவதற்காக க்ளைண்டுகளை தேடி அர்ஜுன் அங்கே வருகை
தந்திருந்தார்.. இதனை மேலிருந்த தீஸ்தா கண்ணாடி கதவுகளின் வழியே பார்த்து விட, முன்னெச்சரிக்கையுடன்
தற்பொழுது இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்தாள்..
“அர்ஜுன்
எப்பவுமே இப்படி தான்.. அன்ப்ரிடிக்டபில் பெர்சன்.. எங்க எப்போ எப்படி
பார்ப்போம்னு கெஸ் பண்ணவே முடியாது.. பிரெண்ட்ஸ் கூட ஹேங்அவுட் பண்றப்போ சடனா
விசிட் பண்ணுறது.. எக்ஸ்பெக்ட் பண்ணி இன்வைட் பண்றப்போ இன்விசிபிள் ஆகுறது...
இப்படி நிறைய நடக்கும்.. அண்ட் நவ் நான் வெக்கேட் பண்ணினதும் தெரியாது.. தெரியாம
மாட்டிகிட்டா கூட பேசி ஹிப்னாட்டைஸ் பண்ணி அகைன் கூட்டிட்டு போக சான்ஸ்
இருக்குது.. சோ ஐ வில் எஸ்கேப் நவ்..”
-தீஸ்தா
கத்தி
விஜயை மிஞ்சிய அளவில் ஏழு தளத்தின் ப்ளூப்ரின்ட்டினையும் சிந்தையினுள் விரித்து
வைத்து திட்டங்களை வகுக்க தொடங்கினாள்.. அர்ஜுன் மேலே வருவதாக இருந்தால் தானியங்கி
நடைபடிகளின் (elevator) வழியே தான் வர வேண்டும்.. அதற்குள்ளாக படிகளின் வழியே கீழிறங்கினால்
கீழ் தளத்தை அடைந்து விடலாம்.. தரைதளத்தில் வாகனங்களுக்கு நடுவே தன்னை அடையாளம்
காண்பது வைக்கோலினுள் குண்டூசியை தேடுவது போல.. என ஒருவழியாக சக்கர வியூகத்தை
வகுத்து விட்டாள்..
திட்டத்தின்படி
மேலிருந்து படிகளின் வழியே கீழிறங்கியவளின் அதிஷ்ட லக்ஷ்மியை சோதிப்பதற்காக
சனிபகவான் அங்கு தோன்றினார்.. அதே தான்.. மேலே ஏறுவார் என்று கணித்த தீஸ்தாவின்
கணக்கு அங்கே காலியாகும்படிக்கு அர்ஜுன் அங்கேயே தேங்கி விட்டார்.. சும்மா நின்று
கொண்டிருந்த சனிபகவானை அவளின் ஸ்மார்ட் ப்ளான் சொரிந்து விட்டிருக்க, அடுத்த
தளத்திற்கு இறங்கும் படிக்கட்டுகளில் தற்காலிகள் பழுது பார்க்கும் வேலை நடைபெற்று
கொண்டிருந்தது..
வந்த
வழியே மேலே செல்ல முடிவெடுக்க நேரம் தராது அர்ஜுன் சுற்றும் முற்றும் கண்களை
சுழற்ற, அதிலிருந்து
தப்பிக்க அந்த அவசரகதியிலும் ஒரு திட்டத்தினை பிறப்பித்தது அவளின் சிந்தை..
அங்கிருந்த பெண்களின் ஆடையில் ஒன்றை எடுத்து கொண்டு ட்ரையல் ரூமினுள் நுழைய,
சிறிது தப்பினாலும் சிரிக்க விட மாட்டேன் என்று முடிவெடுத்திருந்த சனிபகவான்
மீண்டும் தனது வேலையை காட்ட துவங்கினார்.. பெண்களுக்கான இடது புறத்தில்
திரும்பாமல் பதட்டத்தில் எதிர் புறம் திரும்பினாள்..
பின்னால்
தன்னை எவரும் கவனிக்கிறார்களா என்று சோதித்து கொண்டவள் முன்னால் கவனிக்க தவற
விட்டாள்.. அதர பதற ஓரறையினுள் நுழைய, ஆயாசமாக உணர்ந்தாள்.. நிம்மதி பெருமூச்சிட்டு கதவின் தாழ்பாளை மூட செல்ல, ஒருவன் அவளை விட அதிக பதட்டத்தில் உள்ளே நுழைந்தான்.. “ஆஆ...” என
கத்துவதற்கு கூட வாய்ப்பு தராமல் வாய்பொத்தி உள்ளே அழைத்து, “கத்தாத..
கத்துனா கடிச்சு வச்சிடுவேன்.. என்னோட டாட் வெளிய இருக்குறாரு.. ஹி டிடின்ட் நோ ஐ
வாஸ் ஹியர்.. சோ கோப்பரேட் பண்ணு..” என சூரி ஸ்டைலில் அவனின் வாயினுள்ளே அழுத்தம்
கொடுக்க, களி கிண்டாத குறை தான்..
தனது
பலம் கொண்டு அவளை நீக்கியவன், “எக்ஸ்யூஸ் மீ.. ஐயம் ஜஸ்ட் லைக் யூ.. உங்களுக்கு அப்பா, எனக்கு மாமா.. மாமா பொண்ணை மேரேஜ் பண்ணிக்க சொல்லி பாலோ பண்றாரு.. சோ ஐ வில்
ஹெல்ப் யூ?? வில் யூ??” என்றவனை அதிசயித்து பார்த்தாள்..
முதல் சந்திப்பிலேயே ஒருவரை பற்றி ஒருவர் அறியாத நிலையில் முக்கியமான ஒன்றை
பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது ஆச்சர்யத்தை தானே வரவழைக்கும்..
பந்தங்கள்
தொடரும்..
2 Comments
super ud dr.
ReplyDeletethank you so much dr.. keep supporting..
Delete