“டியர் வியூவர்ஸ்..
என்னோட இந்த போரிங் அண்ட் நான்-கேரிங் லைபை
பாக்குறதுல உங்களுக்கு அவ்ளோ அவசரமா?? என்னோட இந்த டாக்சிக் அண்ட் டேஞ்சரஸ் லைபை
பார்க்குறதுனால எந்த சடனான ட்விஸ்டை எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க.. அண்ட் இப்படி
நடக்கணும்னு மனசுக்குள்ளே இமெயில் அனுப்பி வைக்காதீங்க.. பிகாஸ்.. இது என்னோட
லைப்.. நடக்குறதை அப்படியே விட்டுடாம கூட சேர்ந்து ஆடி பாக்குறதுல தானே கிக்கே
இருக்குது.. இல்லைன்னா இப்படி சம்பந்தமே இல்லாத சாத்விக் கூட சாமுத்ரிகா பட்டு
வாங்க வருவேனா??
ப்ச்.. இன்ட்ரஸ்ட் அண்ட் இர்ரிடேட் லெவல் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி கொடுத்துட்டு
மிசஸ் ஆய்டுன்னு சொன்னா அது எவ்ளோ அவ்புல்லா இருக்கும் தெரியுமா??”
-தீஸ்தா
அந்த
போர்ட் கார், கருந்திரளென விரித்து வைக்கப்பட்டிருந்த சாலையில் வேகமெடுத்து செல்ல,
மிகவும் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த சாத்விக் அவ்வபோது முன்கண்ணாடி வழியே தனது
அழகை கண்டு வியந்து கொண்டான்.. பலரும் கூறும் அந்த “கல்யாண களை” வந்து விட்டதென்று
அவனை நம்ப வைக்கப்பட்டதன் வெளிப்பாடு அது.. தனித்தனியே விவரிக்காவிடினும் விடலை
பெண்களை வியப்பில் ஆழ்த்தும் வித்தககாரன் தான்.. அவன் விழுந்ததோ, வியப்பே காட்டாத இந்த வித்தியாச
வினோதமான “தீஸ்தா” மீது தான்..
“புனே..
மும்பை.. கொஞ்சம் ஓவர் தான்ல.. ஒரு கான்பெரென்ஸ் அட்டென்ட் பண்ணினா போதுமே டோட்டல்
மும்பையும் இவனோட கண்ட்ரோல்ல வந்துடும்.. டூ ஹாட்.. இந்த ரூட்ல லெப்ட் திரும்பினா
இவனோட நேட்டிவ் பிளேஸ்.. இவனை பத்தி தெரிஞ்சது தான்.. பட் திஸ் டைம்.. ஐ கனாட்
ஸ்டாண்ட் திஸ்... நான் பேசுற எல்லாத்தையும் சர்காஸ்டிக்கா பார்த்தா உங்களுக்கே
புரியும்..” -தீஸ்தா
“சாத்வி..
காஞ்சிபுரம் பட்டு.. இட்ஸ் எ ட்ரடிஷனல் ஒன்.. மஸ்ட் பார் மை வெட்டிங்.. இப்படி
அர்ஜுன் கிட்ட சொன்னது நீ தானே.. தட்ஸ் வொய் ஐ கம் ஹியர்..” என்ற தீஸ்தாவின்
வார்த்தையில் தோள்களை குலுக்கி கொண்டு மீண்டும் தனது வேலையை தொடர்ந்தான்
சாத்விக்.. அவனுடைய மௌனம் வசதியின்மையை தோற்றுவிக்க, “ஆன்லைன்ல பார்த்த கலெக்ஷன் கண்டிப்பா இங்க
கிடைக்குமா??” என
பேச்சு கொடுக்க தொடங்கினாள்..
“யா..
அப் கோர்ஸ்.. இங்க எல்லாமே அவைலபிள்.. கஸ்டமர் சாய்ஸ்.. ஐ மீன், நம்மளோட பேவர்ஸ்க்கு ஏத்த மாதிரி நெய்து
தர்றாங்க.. தட்ஸ் வொய் வி சூஸ் திஸ் ஒன்..” என்கவும், “நாம இதையும் ஆன்லைன்ல செஞ்சிருக்கலாமே..” என்ற
அடுத்த கேள்வி வந்தது தீஸ்தாவிடம் இருந்து.. அவளின் இயல்பே அதுதான் என்பதை கூடவே
இருந்து புரிந்து கொண்டவன் அதனை இயல்பாகவே எதிர்கொண்டான்..
“மே
பி.. இது நமக்கு ஒரு ஸ்பேசிங் டைமா இருக்கலாம்.. சோ..” என வார்த்தை வராமல்
சாத்விக் தவிக்க,
“இதையும் அர்ஜுன் தானே டிசைட் பண்ணினது.. நாட் பேட்.. இட்ஸ் நைஸ் ஐடியா...” என தோள்களை
குலுக்கி கொண்டாள்..
“அர்ஜுன்
இருக்குறாரே.. சம்டைம்ஸ் பேட் பேடா திட்டணும்னு தோணும்.. பட், ஐ டோன்ட் நோ தமிழ் பேட் வேர்ட்ஸ்..
சோ ஐ யம் பெஷேன்ட் வித் ஹிம்.. சிக்ஸ் இயர்ஸா சாத்விக் எனக்கு பழக்கம்.. வி
அண்டர்ஸ்டாண்டிங் ஈச் அதர்.. அர்ஜுன் தாட்ஸ் நாங்க ரெண்டு பேரும் லாங் ட்ரைவ் போனா
எங்களுக்கு ஸ்பேஸ் கிடைக்கும்.. அல்ரெடி அப்படி தானே இருந்தோம்.. வாட்எவர்..”
-தீஸ்தா
கார் குறிப்பிட்ட
இடத்தை அடைந்ததும் சாத்விக் இறங்கி வேகமாக முன்னால் ஓட, அவனுடைய வினோதமான செயலை கண்ணுற்ற தீஸ்தா இருந்த
இடத்திலேயே ஆர்வமாக வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.. பொறுப்பாக தீஸ்தாவின் கதவை
திறக்க, “நாட் பேட்
சாத்வி.. சீக்கிரமே அர்ஜுனோட கண்டிஷன்ஸ புல்பில் பண்ணிடுவ போல...” என உதடு வளைத்து
புன்னகைத்தவள் மெல்ல இறங்கினாள்..
“ஹே..
தீஸ்தா.. ஸ்டாப் டீசிங் மீ யா... இது கூட அர்ஜுன் அங்கிள் சொன்னதுனால தான்
செய்வேனா?? இதெல்லாம்
மேரேஜ் பண்ண போற க்ரும் செய்ய வேண்டிய பேசிக் திங்க்ஸ் தான்.. சோ டோன்ட்
அண்டர்எஸ்டிமேட்...” என மூக்கின் நடுவே விரலை உயர்த்தி காட்ட, “வாவ்.. சாத்வி, நீ இவ்ளோ கியூட்டா பேசுவன்னு
தெரிஞ்சிருந்தா இவ்ளோ லேட் பண்ணியிருக்க மாட்டேன்.. அப்போவே அர்ஜுனோட பெர்மிஷன்
கேக்காம கல்யாணம் பண்ணியிருக்கலாம்..” என கண்ணை சிமிட்டி கன்னம் கிள்ளினாள்
தீஸ்தா..
“சரி
போலாமா??” என சிறிதான
வெட்கம் கலந்த புன்னகையோடு கேட்ட சாத்விக்கிடம், “ம்ம்..” என தலையாட்டி விட்டு முன்னே நடந்தாள்..
முகுர்த்த பட்டிற்கே சிறப்பான காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல கடையின் முன்னே தான்
நின்றிருந்தனர்.. பிரபலம் என்பதனை நியாயப்படுத்தும் வகையில் கடையின் ஒரு அடிக்கு
முன்பதாகவே சில்லென்ற ஏசி காற்றும் “நைஸ்..” என கூற கூடிய நறுமணமும் நாசியை
தொட்டது. திருமணத்தினை மிகவும் பண்பாடும் பாரம்பரியமும் கொழித்து ஓடும் வைபவமாக
நிகழ்த்த வேண்டும் என்பதில் அர்ஜுனும் சரி சாத்விக்கும் சரி உறுதியாகவே
இருந்தனர்.. இதில் உடன்பாடே இல்லாத தீஸ்தா டீஸ் செய்வதையே ஒரு வேலையாக
கொண்டிருந்தாள்..
இருவருமே
உள்ளே நுழைய,
“வெல்கம் மேம்,
சார்.. என்ன பாக்குறீங்க.. ரெடிமேட் ஆர் மெட்டீரியல் சிஸ்டர்..” என வழமையான தனது
பணியினை சேல்ஸ் கேர்ள் தொடங்கினாள்.. “ரெடிமேட் தான்.. இட்ஸ் ஓகே சிஸ்டர்.. வி
வில் மேனேஜ்..” என முறுவலித்து கொண்ட தீஸ்தா, “சாத்வி, உனக்கு எந்த மாதிரி கலெக்ஷன்ஸ் வேணும்.. ஐ மீன் நீ எந்த மாதிரி
எக்ஸ்பெக்ட் பண்ற??
பிகாஸ் உன்னோட டேஸ்ட் பத்தி ஐ ஹவ் நோ ஐடியா..” என கேட்டாள்..
“தீஸ்தா..”
என்று அவளின் கரம் பிடித்து தனக்கருகே அழைத்து, “மேரேஜ் பண்ண போற ப்ரைட்(bride) நீ தானே சூஸ் பண்ணனும்.. என்னை
கேக்குற..” என ஆச்சர்யத்தை வெளிபடுத்த, “ஹஹஹாஹ்.. யூ ஆர் ரைட்.. நான் தான் ட்ரெஸ் பண்ண போறேன்.. பட் பாக்க
போறது நீ தானே.. உனக்கு எது கம்பர்டபிளோ அதை எடுக்கலாம்..” என புன்னகை மாறாமல்
கூறியவளை “தான்க் காட்.. எங்கே நீ நார்மல் கேர்ள் மாதிரி பீகேவ் பண்ணிடுவியோன்னு
பயந்துட்டேன்..” என பெருமை அடைந்து கொண்டான்.. சுற்றிலும் உள்ளவர்களோ
அவர்களுக்குள்ளே இருந்த விட்டு கொடுத்தலையும் புரிதலையும் கண்டு, “ஸ்வீட் கப்பிள்ஸ்..” என சிலிர்த்து
கொண்டனர்..
“வெயிட்..
வெயிட்.. வெயிட்.. இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல கொஞ்சம் க்ளோசா நடந்துகிட்டா ஸ்வீட்
கப்பிள்சா?? மேட் பார் ஈச் அதர் கப்பிள்ஸ் யாரும் இப்படி பப்ளிக்ல நடந்துக்குறது
இல்லை.. ஈவன் அவங்களோட லவ் அண்ட் சப்போர்ட் அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்..
மத்தவங்களுக்கு இல்லை...” -தீஸ்தா
அதே
நேரத்தில்,
கடையின்
மறுபுறத்தில் ஒரு குடும்பம் உள்ளே நுழைந்தது.. “ஏண்டி, ஒரு முகுர்த்த சேலையை வாங்குறதுக்கா ஊரே திரண்டு
வந்திருக்குது..” என கூட்டத்தில் ஒருத்தி முகவாயில் ஒற்றை விரல் வைத்து கேட்க, “அட நீ வேற உனக்கு விஷயமே
தெரியாதுல்ல.. நம்ம மகதி புள்ளை கண்ட கண்ட பவுடரையும் ஸ்மெல் பண்ணி பம்புசெட்ல ஒரு
நாள் மயங்கி கிடந்தான் தெரியுமா??” என
அருகிலிருந்தவள் கேட்டாள்..
“ஆமா, திருவிழாவுக்குன்னு ஊருக்கு வந்த
இடத்துல மயங்கி கிடந்தான்னு எல்லாருமா சேர்ந்து ட்ராக்டர்ல தூக்கி போட்டுட்டு
போனாங்களே..” என நிகழ்வை நினைவு கூற, “ஆமா,
ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போன இடத்துல வைத்தியம் பாத்த புள்ளை கூட படிச்சது போல..
இவனை பார்த்ததும் கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்தவ சரின்னு சொல்லிட்டா..
ரெண்டு பேரும் மனசை மாத்திக்கிட்டதுனால ரெண்டு குடும்பமும் சேர்ந்து தடபுடலா
கொண்டாடுறாங்க...” என விளக்கமளித்தாள்..
இது
அனைத்தையும் காதில் வாங்கி கொண்டும் வாங்காதது போலவே முகத்தை வைத்து கொண்டு
முன்னேறி நடந்தான் அவன்.. பலமுறை திருமணம் வேண்டாம் என தெளிய வைத்தும் கேட்காமல்
மகதி அடுத்தடுத்த வரன்களை பார்க்க வெறுத்தே விட்டான்.. அதில் இது போன்ற பலவிதமான
பேச்சுகளை கடந்தே வந்தான்.. இதற்காக மனம் வருந்தும் குணம் இவனல்லவே.. “ப்பூ..” என
ஊதி தள்ளுபவனை ஆளாளுக்கும் உசுபேத்தி உடைய செய்திருந்தனர்..
எண்ணங்களில்
மூழ்கி இருந்தவனை மற்றொரு தோள்கள் தீண்டி செல்ல நிமிர்ந்தான்.. “ஹே.. அவந்தி...”
என ஆச்சர்யங்கலந்த பார்வையோடு நோக்கியவன் மெல்ல அணைத்தான்.. “என்ன சர்ப்ரைஸ்
விசிட்டா??” என
குறும்பாக ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனை தோளில் இடித்தவாறு நடந்த அவந்திகா, “இவ்ளோ மெச்சுரிட்டி வந்ததுக்கு
அப்புறமும் குழந்தை மாதிரி சர்ப்ரைஸ் கொடுக்குறது கொஞ்சம் ஓவர் தான்.. பட் ஆண்ட்டி
ஆசைப்பட்டுட்டாங்களே..” என அழகாய் புன்னகைத்தாள்..
“எங்க
அம்மா வேலை தானா?? பதினெட்டு
வயசுல லவ்வுன்னு சொன்னாலே வாயில அடிக்குறது.. பத்து வருஷம் கழிச்சு அவங்களே லவ்
பண்ணுன்னு சொல்ல வேண்டியது.. இட்ஸ் ஓவர்.. அவந்தி..” என சிணுங்கி கொண்டவனின்
முகத்தை நிமிர்த்தி, “ப்பா.. எவ்ளோ பெரிய தத்துவம்... பாவம் நைட் புல்லா உக்காந்து
இந்த மீமை தான் ப்ராக்டீஸ் பண்ணுனியா??” என செல்லமாக கண்டித்தவள் “போலாமா??” என சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த
தளத்திற்கு அழைத்து சென்றாள்..
“பர்ஸ்ட்
சாரி எடுக்கலாம்.. அப்புறமா கூட சர்வாணி சூஸ் பண்ணிக்கலாம்..” என கூறவும், “நோ.. பர்ஸ்ட் சர்வாணி அப்புறமா
சாரி..” என அவந்திகா எதிர்திட்டத்தினை கூறினாள்.. “ஓகே.. உனக்கும் வேண்டாம்
எனக்கும் வேண்டாம்.. நான் சாரி சூஸ் பண்றேன்.. நீ சர்வாணி சூஸ் பண்ணு...” என
இருவருக்கும் பாதகமில்லாமல் ஒரு வழியை அவன் கூற, “இட்ஸ் பைன்..” என சம்மதித்து விட்டு, “நான் ஆண்ட்டியை கூட்டிட்டு
போறேன்.. பை..” என காற்றில் கூந்தலை பறக்க விட்டு நகர்ந்தாள்..
இதனை பக்கவாட்டில்
தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்த மகதி, “என் கண்ணே பட்டுடும் போல இருக்குது.. எத்தனை மேரேஜ் ப்ரோபோசல் வீணா
போயிருக்கும்.. இப்படி ஒருத்தி என் மருமகளா கிடைக்குறதுக்காக தான் அப்படி
நடந்திருக்குது.. நல்ல வேளை அவளை செலக்ட் பண்ணாம விட்டானே.. அதுவே போதும்.. இந்த
பொண்ணு அவனை அவ்ளோ நல்லா புரிஞ்சி நடந்துக்குறா??” என வருங்கால மருமகளை பெருமை மெச்சும் பார்வை
பார்த்தவாறே மற்றொரு தளத்திற்கு நுழைந்தார்..
“தீஸ்தா, இந்த கலெக்ஷன் எப்படி இருக்குது??” என கைகளில் ஒரு பட்டினை உயர்த்தி
சாத்விக் காண்பிக்க,
“சாத்வி, பட்டோட லுக்கை பார்க்காத.. குவாலிட்டிய பாரு.. இல்லைன்னா இதுக்கு கூட
பிலாசபி அர்ஜுன் கிட்ட இருந்து கிடைக்கும்..” என கேலியோடு கூறிய தீஸ்தா, “ஓகே.. ஐ கால் அர்ஜுன்.. கண்ணால
பார்த்துட்டா ஒரு சாட்டிஷ்பாக்ஷன் கிடைக்கும்.. அதேர்வைஸ் இன்னொரு நாளும் இங்க வர
வேண்டியதா போகும்.. ஐ ஹவ் நோ டைம்..” என்றவாறே திரையில் எண்களை அழுத்தினாள்..
“ஹே..
அர்ஜுன்..” என திரையை நோக்கி கரமசைக்க, எதிர்புறத்திலோ அவள் கூறிய அர்ஜுன் கம்பீரமாக அமர்ந்திருந்தார்..
வலுவான உடற்கட்டு அணிந்திருந்த கோட்டினை தாண்டியும் உணர்த்தியது.. ஒளி குறையாத
கண்கள், இறுக்கமான முகத்தசைகள், கேசத்திலோ ஆங்காங்கே வெள்ளி இழை போன்ற நரைமுடிகள்..
“ஹாய் ஸ்வீட்ஹார்ட்..
பினிஷ்ட் யுவர் ஷாப்பிங்..”
“அர்ஜுன்.. அரேன்ஜ் பண்ணிட்டு ஆக்ட் பண்ணினா அடி கொடுப்பேன்.. இங்க சாத்வி கன்பியூஷன்ல இருக்குறான்.. எப்படி சூஸ் பண்ணனும்??னு வி ஹேவ் நோ ஐடியா... தீம்ஸ் யோசிச்ச அதே பிரைன் இதுக்கும் ஐடியா கொடுத்தா நல்லா இருக்கும்..” என தோள்களை குலுக்கினாள்.
“கல்யாணத்துக்கு
டாட் தான் செலக்ட் பண்ணனும்னு ஆசைபடுறன்னு ஒப்பனா சொல்லு.. ஏன் சில்லி ரீசன்ஸ்
சொல்லுற?? மோஸ்ட்
வாண்டட் பேஷன் டிசைனருக்கு தன்னோட கல்யாண
புடவையை செலக்ட் பண்ண குழப்பமா இருக்குது.. சோ அவளோட டாடை அப்ரோச் பண்றா.. ரைட்??” என அவளை மடக்கி விட்ட மிதப்பில்
கேட்க, “கொஸ்டீன் பாஸ்..
இந்த டிபிக்கல் கொஸ்டீனுக்கு ஆன்சர் பண்ண ஐயம் நாட் இன்ட்ரஸ்ட்டட்.. சோ சாத்விக்கு
ஹெல்ப் பண்ணுங்க மேன்..” என சாத்விக்கிடம் போனை கொடுத்தாள்..
“யா..
அர்ஜுன் இஸ் மை டாட்.. ஹி வில் ஆல்வேஸ் பிசி.. இந்த ப்ரீ வெட்டிங் வேக்கேஷனை அரேன்ஜ்
பண்ணாம இருந்திருந்தா.. ஐ டோன்ட் பாதர் ஹிம்.. ஆல் டைம் பிஸ்னஸ்ல கான்சென்ரேட்
பண்ணிட்டு இருந்த அர்ஜுன் சடனா என்னோட மேரேஜ்ல கான்ட்ராக்ட் எடுத்துட்டா மாதிரி
என்னை கேக்காமலே ப்ளான் போட்டுட்டு இருக்குறாரு.. ஐ கோயிங் டு ப்ளே எ கேம் வித் தெம்..
ஹஹஹாஹ்..” -தீஸ்தா
அர்ஜுனையும்
சாத்விக்கையும் தேர்வு செய்வதில் குழப்பம் செய்து விட்டு தெளிவாக மெல்ல
அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.. சுற்றிலும் வேடிக்கை பார்த்து கொண்டே வர, அங்கிருந்த கண்ணாடியில் அவளது உருவம்
பிரதிபலித்தது.. டங்கறீ ஆடையை அணிந்து கூந்தலை சுருள் சுருளாக விரித்து
விட்டிருக்க, மிதமான ஒப்பனைகளுடன் நவநாகரீக மங்கையாக நின்றிருந்தாள்..
நெற்றியில்
கிடந்த மயிர்கற்றைகளை ஒற்றை விரல் கொண்டு நீக்கி விடும் பொழுது தான் தூரமாக
நின்றவனை கண்டாள்.. அவனை கண்டதும் முகம் அஷ்டகோணலாக மாற அங்கிருந்து உடனடியாக
இடத்தை காலி செய்தாள்..
“சம்டைம்ஸ்
ஐ ஹேட் திஸ் லைப்.. நம்மளோட லைப் ஹிஸ்டரில இருந்து டெலீட் பண்ணினா அன்எக்ஸ்பெக்டட்
டைம்ல சஜெஷன் லிஸ்ட்ல காட்டும்..”
-தீஸ்தா
2 Comments
Super starting. interesting...
ReplyDeletethank you so much dr..
Delete