Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

பகலிலொரு போதகம்..

 


காலை கண்விழிப்பதே கைபேசியை கண்டு தான் என்ற கொள்கைகளை கொண்டதனால் அன்றைய அதிகாலமும் எனக்கு அப்படியே விடிந்தது.. நேற்று பாதி உறக்கத்தில் கைவிட்ட வாட்சாப் க்ரூப் சாட் ஆயிரத்தை தொடும் அளவிற்கு ஸ்டிக்கர் மயமாகி நிறைந்திருந்தது.. சப்ஸ்க்ரைப் செய்து வைக்கப்பட்டிருந்த நான்கைந்து சானல்களிலும் பதிவேற்றப்பட்ட வீடியோக்களின் பதிவு குறுக்காக தொல்லை செய்ய, அதனையும் விழுங்கி விடுமளவிற்கு பேஸ்புக்கில் டேக் செய்த பதிவுகள் பூதாகரமாக மாறி நின்றது..

 

“நைட் தூக்கத்துல நெட்டை ஆப் பண்ணாம போட்டது எவ்ளோ பெரிய தப்பு.. ஆன்லைன்ல இருந்தும் பக்கி ரிப்ளை பண்ணலைன்னு சொல்லிட்டு பக்கி பண்டாரங்கள் கூகிள் பே கூட விடாம க்ரூப் ஸ்டார்ட் பண்ணி காவ்யா கள்ளகாதல் பண்றதா இருந்தா யாரை சூஸ் பண்ணுவா?? ஜூஸ் கடை அங்கிளா?? கூல் கடை அண்ணாவா?? என பெரிய பட்டிமன்றமே நடத்தி வைச்சிருக்குது.. இது மட்டும் யார் கண்ணுலயாவது சிக்குச்சு.. என்னை பத்தி என்ன நினைப்பாங்க??” என திட்டி கொண்டே அவர்கள் செய்து வைத்திருந்த லீலைகளை லிப்ஸ்டிக் கறை போல அழித்து விட்டேன்..

அதற்குள் கீழே இருந்து, “பாப்பா, காபி ரெடி குடிக்க வா..” என அம்மா அழைக்கவும் அடித்து பிடித்து பற்பசை பாதியை பாத்ரூமில் தவறவிட்டு கண்களில் இமைமுடி நனையாமலேயே முகம் கழுவி விட்டு வந்தமர்ந்தேன்.. டிவியில் காலை சுப்ரபாதம் ஓடிகொண்டிருக்க, அம்மா அதில் லயித்து தனது காபியின் நேரத்தை அணுஅணுவாக சுவைத்து கொண்டிருந்தாள்.. இந்த பக்கமாய் அப்பா காய்ந்த காகிதத்தை (செய்தி தாள்) கசக்கி விடாமல் கணக்குளில்லாத முறையாய் வாசித்து கொண்டிருந்தார்..

எல்லா காலையும் வழக்கமாக நடப்பது தான் என்பதால் காபி கோப்பையில் ஒரு மிடறு விழுங்கியவாறே பேஸ்புக்கில் மீம் பார்க்க தொடங்கினேன்.. இப்பொழுதெல்லாம் செய்திதாள் தொலைக்காட்சியால் கொண்டு சேர்க்க இயலாத தகவல்களை மீம் தானே எளிதாகவும் ருசிகரமானதாகவும் தருகிறது.. இன்றைய தலைமுறையினரின் சம்பளம் வாங்காத செய்தி வாசிப்பாளர்கள் தான் இந்த மீம் க்ரியேட்டர்கள்..

தினம் தினம் புதிதான ஒன்று ட்ரண்டிங்கில் வருவது போல இன்று ஏதோ ஒரு பள்ளி தான் பலியாடு.. மேலோட்டமாக பார்த்த என்னால் சரிவர புரிந்து கொள்ள இயலவில்லை.. எனக்கு அரசியல் மற்றும் ஆன்மீக அறிவு சற்று குறைவு தான்.. அடுத்ததாக யூடியூப் சென்றாகி விட்டது.. எடுத்ததுமே தலைவன் பிரியாணி மேன் ரபியின் பதிவு.. அந்த ஒரு சானலின் பதிவுக்காக மட்டுமே யூடியூபை உபயோகப்படுத்தும் எனக்கு தற்பொழுது தர்மசங்கடமான நிலை.. பொதுவெளியில் அந்த காணொளியை காண்பது எனது உடல்நலத்திற்கும் அம்மாவின் மனநலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்..

 

கைகளோ பரபரக்கிறது அதனை திறந்து விடு என்று.. மூளையோ எச்சரிக்கிறது அம்மா இருக்கிறார் என்று.. வேறு வழியில்லை.. மெல்ல பூனை போல நெளிந்து அப்பாவின் காது ஒலிப்பானை (ஹெட்போன்) எடுத்து முன்னெச்சரிக்கையாக எனது தலை மாட்டிவிடாமல் இருக்க காதில் மாட்டி கொண்டேன்.. தலைவனின் ரியாக்ஷன் பார்த்து பொங்கி வரும் சிரிப்பை மட்டுப்படுத்த முயல்கிறேன் முடியவில்லை.. எனது நல்ல நேரத்திற்கு அதிக அளவில் க்ரிஞ்சை க்ரிஞ் செய்யாமல் இருந்தது அந்த காணொளி.. முழுவதும் பார்த்து முடித்த எனக்குள் பல கேள்விகள்..

 

என்றுமே இது தோன்றுவது தான்.. நகைச்சுவை கலந்து நயமாக பல சிந்தனைகளை உருவாக்கி விடும் காணொளி இந்த முறை வேறுமாதிரியாக இருந்தது.. முன்னர் ஒரு கருத்தை முன்னிறுத்தி மட்டுமே நகரும் காநோளிகளுக்கு நடுவே இந்த காணொளி தனித்து நின்றது.. ஒன்று பள்ளி பிரபலமானதில் தெளிவு கிடைத்திருந்தது.. மற்றொன்று பிரபல நடிகர் ஒருவர் அவரது பெண் விசிறியிடம் தகாத வார்த்தைகளை பேசியது.. இந்த முறை அவரே சற்று உணர்ச்சிவயப்பட்டிருந்தார்.. ரசிகையாக இருக்கிற காரணத்தினால் இந்த நிகழ்வு எனக்குள் மாற்றத்தை தருகிறதா இல்லை உண்மையாகவே இதன் வீரியம் எனக்குள் மாற்றத்தை தருகின்றதா என தெரியவில்லை..

 

அப்பொழுது,

சுப்ரபாதம் நிறைவடைந்து செய்திகள் வாசிக்கப்பட, பிரபல பள்ளி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்திரவு அளித்ததாக தற்பொழுது புகார் அளித்துள்ளார் பழைய மாணாக்கர் ஒருவர்.. அதிர்வோடு தந்தையை திரும்பி பார்க்க, “ப்ச்.. காலங்காத்தாலயே எப்படி நியூஸ் போடுறான்.. பாரு..” என சலித்தவாறே சானலை மாற்றினார்..

 

எதுவும் பேசாமல் அமைதியாக சோபாவில் சாய்ந்து கொண்ட நான் கைபேசியை கைவிட்டிருந்தேன்.. அந்நேரத்தில் வெளியே கீரைக்காரர் வந்துவிட அம்மா வெளியே எழுந்து போனாள்.. இது தான் சரியான சமயம், அப்பாவிடம் இது பற்றி பேசுவதற்கு.. அம்மா சற்று பிற்போக்கு சிந்தனை உடையவர் என கூறலாம்.. இது பற்றி பெண்கள் அதிலும் நான் பேசவே கூடாது.. வயதிற்கு மீறிய பேச்சு என கடிந்து அப்பாவிற்கும் அதட்டல் இடுவார்..

 

“ப்பா.. அந்த நியூஸ் பத்தி என்ன நினைக்குறீங்க??” என மெல்ல பேச்சை தொடங்க, “அது பத்தி என்ன சொல்றது?? இவ்ளோ நாள் இவங்க எல்லாரும் எங்க போனாங்க.. கோமால இருந்தாங்களா??” என்றார்.. அப்பா ஒரு ஜாம்பவான் என்று கூறி விட முடியாது.. அவரின் கருத்து என்பது முதலாவதாக என்றுமே இருக்காது.. ஒவ்வொரு வார்த்தைகளுக்கு நடுவிலும் நாம் அதை உட்கிரகித்து சிந்திக்க நேரம் தருவார்..

 

“ஆமா அதுவும் சரி தான்.. ஏன் இவ்ளோ பெரிய கேப்..” என யோசித்தவள், “இதை பாருங்க ப்பா.. இந்த பொண்ணு தைரியமா இமேடியட் ஆக்ஷன் தானே எடுத்துருக்குறா..” என காணொளியை காண்பித்தேன்.. முழுவதுமாக பார்த்து முடித்தவர், “இதை வச்சு நீ என்ன தான் சொல்ல வர்ற??” என என்னை சோதிக்கும் முயற்சியில் இறங்கினார்.. கிணற்றில் தோண்ட தோண்ட தான் ஊற்றெடுக்கும்.. அது போல என் பக்கம் வறட்சியை காட்டினால் மட்டுமே ஆதி முதல் அந்தம் வரை விடை கிடைக்கும்..

 

எனவே, “பர்ஸ்ட் இன்சிடென்ட்க்கு எந்த ஒப்பீனியனும் இல்லை.. செகண்டை பார்க்கும் போது பெரிய ஆளுங்க கிட்ட வம்பு வச்சிக்க கூடாதுன்னு தெரியுது..” என பாவமாக முகத்தை வைத்து கொண்டேன்.. “அங்க இருக்குற உண்மை என்னன்னு நமக்கு தெளிவா தெரியாது.. ஆனா இதுல இருந்தும் பாடங்களை கத்துக்கலாம்.. இதுல ரெண்டு ஜெனேரேஷன் கேப் இருக்குது.. முதல்ல செக்சுவல் ஹராஸ்மென்ட்.. அந்த ஏஜில அவங்களால எக்ஸ்போஸ் பண்ண தெரியல.. ரெண்டாவது செக்ஸ் ப்ரெஷர்... அந்த பொண்ணோட தைரியம் பாராட்டுக்குரியது தான்.. ஆனா பாதியானது தான்.. இந்த ஜெனேரேஷன் டெவலப்மென்ட்ல கெப்பாசிட்டி கம்மியா இருக்குது.. அதாவது முந்தின  ஜெனரேஷன்ல இருந்து இன்னும் இம்ப்ரூவ் ஆகலை..” என கூறினார்..

“அப்போ இந்த பொண்ணுக்கு இருக்குற தைரியம் முன்னாடி உள்ளவங்களுக்கு இருக்கணும்னு சொல்ல வர்றீங்களா??” என மனம் தாளாமல் கேட்டு விட, “ஹஹஹா.. பிரச்சினையோட வீரியம் காலாகாலத்துக்கு கூடிட்டே தான் இருக்கும்.. நாமளும் அது கூட சேர்ந்து அப்டேட் ஆகணும்.. ஒரு குட்டி எக்சாம்பிள் உனக்கு புரியணும்னு சொல்றேன்.. உனக்கு பிரச்சினை வந்தப்போ உன்னால வாயை திறந்து சொல்ல முடிஞ்சிதா?? ஏன் இப்போ வரை உன்னால சொல்ல முடியலை??” என்றார்..

 

கடைசி கேள்வியில், எனக்கு மூளை சுருகென்று தைத்தது.. “ஆமா.. ஸ்கூல் டேஸ்ல இந்த மாதிரி லிமிட் க்ராஸ் ஆன பேச்சை என்னோட அப்பா வயசுல இருக்குறவரு என்கிட்டே பேசுன எக்ஸ்பீரியன்ஸ் இருக்குது.. அப்போ எனக்கு சரியா புரியலை.. வளர வளர அந்த வார்த்தைகளுக்கு மீனிங் புரியுறப்போ நேர்ல போய் செவுட்டுலே ரெண்டு அடி குடுக்கணும்னு தோணிச்சு.. அந்த வார்த்தைகளை பிரெண்ட்லியா பேசுற அப்பா கிட்ட கூட ஷேர் பண்ண முடியலை.. அப்படின்னா “நீ தான் ஒழுங்கா இருந்துருக்கனும்னு சொல்ற அம்மா கிட்ட எப்படி சொல்லுவேன்.. சோ அவங்களோட சிச்சுவேஷன் எனக்கு புரிஞ்சிடுச்சு..”

“உடனே, நானும் ஒரு சோஷியல் அக்டிவிஸ்ட் மாதிரி பேஸ்புக்ல போஸ்ட் போடுறதோ தட்டு தடுமாறி ஒரு ரைட்டரா மாறிட்டு வர்ற நான், வேகமா போய் என்னோட பீலிங்க்ஸ ஒரு லைன்ல கொட்டி முன்னாடியும் பின்னாடியும் லவ் சீன்ஸ் வச்சு டெக்கரேட் பண்ணி வாலிப பொண்ணுங்க மனசுல உங்களுக்காக ஒரு காதலன் வருவான்.. வந்து உனக்காக பைட் பண்ணுவான்னு ஒரு பொய்யை வாழ்க்கையில விதைக்க மாட்டேன்.. இதெல்லாம் காலங்காலமா நாம பண்ணிட்டு வர்ற கோமாளித்தனம்.. இதுனால என்ன மாறிட போகுது??”

“டெய்லி டெய்லி எதோ ஒரு இடத்துல எல்லாருமே ஹராஸ் ஆகுறோம்.. உடனே என்னை சின்ன வயசுல அபியூஸ் பண்ணுனாங்கன்னு சொல்லி அழுதுடுறது எல்லாமே சிம்பதி க்ரியேட் பண்ண வேணா யூஸ் ஆகலாம்.. வேற எந்த செஞ்சசும் நடக்காது.. ஹராஸ் ஆனதும் உலகமே நமக்கு எதிரா திரும்பி நிக்குது.. மொத்த உலகத்தையும் எதிர்த்து போராடுறோம்.. சிங்க பெண்கள் நாம.. ஆண்கள் எல்லாருமே ஆசையில சபலப்படுறவங்கன்னு ஒரு பொய்யை உண்மையா நம்பிக்குறோம்.. அது உண்மை இல்லை.. குளிர்காலத்துல கொசு கடிக்குறது இல்லையா?? அதுக்காக டெஸ்ட் டியூப் எடுத்துட்டு வந்து லேப்க்கு அனுப்பி எவ்ளோ ரத்தம் உறிஞ்சுதுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்போமா?? இல்லை அடிச்சு தூக்கி போட்டுட்டு போவோமா??”

 

“அந்த மாதிரி இதெல்லாத்தையும் கடந்து போகணும்.. வேதியியலில் ஒரு செய்முறை வகுப்பு உண்டாம்.. கிரிஸ்டலைஷேஷன்.. அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்கு தன்னிச்சையாகவே உருவாகி விடும்.. சிலருக்கு அவ்வாறு நடப்பதில்லை.. ஒற்றை க்ரிஸ்டலை துணைக்கு அனுப்பினால் அது இருக்கும் தைரியத்தில் அதன் துணையோடு கிறிஸ்டல் உருவாகிவிடும்.. என்னோட விஷயத்துல ஹெல்ப்க்கு யாரும் இல்லை.. வெளிய சொல்ல முடியல.. அம்மா என்னை தான் பேசினாங்க.. அதுக்கு நடுவுல என்னோட ஒரே இன்ஸ்பிரேஷன் அப்பாவோட அமைதி தான்.. அதை பத்தி எந்த ஒப்பீனியனும் சொல்லாம இருந்தார்.. அந்த ஒரு விஷயத்தை பிடிச்சிக்கிட்டு மேலே ஏறி வந்தேன்.. கடந்து வந்த பாதையில இந்த சம்பவத்தை நான் ஒருபோதும் சொல்லவே மாட்டேன்.. நாம அடுத்தவங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜிய கொடுக்கணும்.. எக்சாம்பிளுக்கு கூட நெகட்டிவை கொடுக்க கூடாது.. அதிக சக்தி கொண்ட கெட்டது சீக்கிரமா ஸ்ப்ரெட் ஆகுறதோட நஞ்சா மாத்திடும்.. எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு நம்பிக்கை கொடுக்குற விஷயம் எங்கேயாவது ஒளிஞ்சிருக்கும்.. தேடி கண்டுபிடிச்சு அடிச்சு வெளிய வர்றது எல்லாம் நம்ம தன்னம்பிக்கையில தான் இருக்குது.. எல்லாருக்கும் எல்லாமும் அதாவது நன்மையோ தீமையோ இருக்கும்.. எதிர்மறையா யோசிக்குறீங்களா?? நேர்மறையா யோசிக்குறீங்களாங்கறதுல தான் வாழ்க்கையோட அடுத்த கட்டம் இருக்குது..”

 

இப்படிக்கு,

மனதினுள் பாய்ந்தோடும் காவ்யாவின் கருத்துக்கள்..     

 

Post a Comment

4 Comments

  1. உடனே ரியாக்ஷன் கொடுக்கும் அளவுக்கு மெச்சூரிட்டி வரும் வயது இல்லை. அப்ப அந்த வயதில் என்ன தான் செய்வது?

    ReplyDelete
  2. மிக மிக அருமை டா... ரொம்பத் தெளிவான விளக்கம் மற்றும் சுய அலசல்... அருமை..

    ReplyDelete