இரு
மெய்களுக்கும் நடுவே மெல்லிய கோட்டின் இடைவெளி மட்டுமே இருக்க, சற்றும் அசராமல் விழிகளை திமிராக உயர்த்தி கொண்டிருந்த தீஸ்தா அவனுடய
மூளை முழுவதுமே நிறைந்தாள்.. சற்று நேரத்திற்கு முன் தீஸ்தா கேலிக்காக கூறிய “கண்மூடும்
வேளையிலும் என்னுள் கலங்க மாட்டாயடி கண்மணியே..” என்ற சொற்றொடர் அன்னிச்சையாகவே
அவனுடைய அதரங்களில் அசைந்தது..
கனவுகள்
என்பது மூளையில் எங்கோ சம்பந்தமில்லாமல் சேமித்த முகங்கள் வந்து போவது தான்
என்பார்கள்.. அது போலவே தான் அவன் இன்று கூறிய வார்த்தைகள் மாதங்கள் பல கடந்தும்
அவளினுள் புதைந்து கிடந்துள்ளது..
“பயோ-மேக்னட்
கேள்விபட்டிருக்குறீங்களா?? இல்லைன்னா தெளிவா கேளுங்க.. அது நம்ம கண்கள் தான்..
நேச்சுரலாவே அந்த மேக்னடிக் பவர் ஐஸ்ல மறைஞ்சிருக்கும்.. அதுக்கான
டயாமேக்னட்டிக்கை மீட் பண்ணும் போது தானா ஆக்டிவேட் ஆகும்.. அது நட்பு, காதல், பாசம், பரிவு, விரோதம், வெறுப்பு இப்படி எதுவா வேணா இருக்கலாம்..
பட் அந்த ப்ராசஸ் உண்மை.. இப்போ எனக்கு நடக்குற மாதிரி..” -கபீர்
“ஹே..
மிஸ்டர்..” என அவனுடைய தோள்களில் அழுத்தம் கொடுத்து பின்னே தள்ளி விட்டு
நிகழ்உலகத்திற்கு அழைத்து வந்தாள்.. தனது மடத்தனத்தை எண்ணி ஒற்றை கண்களை சுருக்கி,
“ஒ.. சாரி.. கபீர்..” என அறிமுகமாகி கொண்டான்.. வினோத பார்வையை வீசி கொண்டே, “தீஸ்தா.. தீஸ்தா அர்ஜுன்..” என கைகளை குலுக்கி கொண்டாள்..
“தென்..
இங்க இருந்து கிளம்புறதுக்கு எனி ஐடியா??” என
தீஸ்தா கேள்வியாக நோக்க, “ம்ம்ம்.. நோப்..” என உதட்டை அழுந்த
கடித்து கொண்டான் கபீர்.. இருவருமே ஓரறையில் ஓருணர்வில் தான் சிக்கி கொண்டிருந்தனர்..
அவளோ அங்கும் இங்கும் நடைபயின்று குறுக்கு வழியை யோசிக்க துவங்க, ஒரு நேரத்தில் அவளின் மீது பார்வையை பதித்தும் மறு நேரம் கண்ணாடியையும்
பார்த்து தனது நேரத்தை போக்கி கொண்டிருந்தான்..
“ப்ச்..
இதை எப்படி மறந்தேன்.. எப்பவுமே அர்ஜுன் சொல்லிட்டே இருப்பாரு.. எந்த
சிச்சுவேஷன்லையும் ஹைப்பர் ஆககூடாது.. ஹைப்பர் ஸ்டேஜ்ல நிறைய மறந்து போறதுக்கு
சான்சஸ் இருக்குது.. எஸ்.. ஐ பர்காட் தட்.. அர்ஜுன் போன் லொகேஷன் என்னோட போன்ல
கனெக்ட் ஆகிருக்குது.. தப்பிக்குறதுக்கு சான்சஸ் சாலிடா இருக்கும் போது நான் ஏன்
சம்பந்தமில்லாம இந்த சந்துக்குள்ள ஒளிஞ்சிக்கணும்...” -தீஸ்தா
வேகமாக
தனது பர்சினை லாவகமாக சுழற்றி அதினுள் இருந்த போனை எடுத்து திறந்த திரையில்
கண்காணிக்க துவங்கினாள்.. அவளின் செய்கைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் அவனது கண்
காமிராவில் படம் பிடித்து கொண்டிருந்தான் கபீர்.. “எஸ்.. அர்ஜுன் பார்க்கிங் ஏரியா
போயாச்சு.. சோ திஸ் டைம் பார் எஸ்கேப்..” என தனக்குள்ளே கூறி கொண்டு வெளியே செல்ல
எத்தனித்தவளை பிடித்து நிறுத்தினான்..
"ஒன் செகண்ட்.. நான் சொல்ற இந்த
சிச்சுவேஷன் உங்களுக்கே கொஞ்சம் வியர்டா இருக்குது இல்லையா?? சொல்ற எனக்கே க்ரிஞ்சா இருக்குது.. உங்களோட டே டு டே லைப்ல இப்படி ஒன்னு நடந்தா
உங்களோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்.. ஐ கான்ட் அக்செப்ட் திஸ் மச் ஆப்
சினிமாட்டிக் இன்ட்ரோ.. முன்ன சொன்ன மாதிரி எது வேணாம், எதை அக்செப்ட் பண்ணிக்க
மாட்டோமோ அதை தான் கொடுக்கும் இந்த லைப்.. சச் எ மெட்டிரியலிஸ்டிக் ஒன்..” -தீஸ்தா
“வாட்ஸ்
யுவர் ப்ராப்ளம் மேன்??” என தீஸ்தா புருவங்களை
சுருக்க, “உங்க ப்ராப்ளம் சால்வ் ஆனதும் கிளம்பறீங்க..” என சன்ன குரலில் கேட்டான்
கபீர்.. “உனக்கு ஹெல்ப் பண்றதுனால எனக்கு என்ன யூஸ்??” என நிமிர்வாக கேட்க, “ச்சே.. என்ன பெண்ணிவள்.. ஒவ்வொரு பார்வையிலும் வியக்க வைக்கிறாளே.. அரிய
வகை பெண்களில் ஒருவளாக இருக்க கூடும்..” என்றே தோன்றியது அவனுக்கு.. “உங்க கிட்ட
ஹெல்ப் கேக்கலை.. ஜஸ்ட் நடக்குறதை மட்டுமே வேடிக்கை பார்க்கலாம்.. உங்களுக்கு
என்டர்டெயின்மென்ட் கிடைக்கும்..” என அலட்சியமாக கூறியவன் தீஸ்தாவின் வழக்கமான வாழ்க்கையென்னும்
நாட்குறிப்பில் இன்றைய நாளின் அடையாளமாக மாறிபோனான்..
“ஓகே...”
என சம்மதித்தவள், அங்கிருந்த ஆடைமேடையில்
கரம் வைத்து தலையை சாய்த்திருக்க, “கிவ் மீ யுவர்
காஸ்மெட்டிக்ஸ்..” என கரம் நீட்டினான்.. “எக்ஸ்கியூஸ் மீ..” புரியாமல் பார்த்தவளை
மெல்லிய கேலிநகை இழையோட, “வெயட் அண்ட் வாட்ச்..” என்றவனிடம்
அரை மனதோடு பர்சில் இருந்த லிப்ஸ்டிக், ஐலைனர் மற்றும்
பேஸ்வாஷையும் கொடுத்தாள்..
பேஸ்வாஷை
முகத்தில் சீராக தடவியவன் அடுத்தடுத்த ஒப்பனைகளையும் செய்ய துவங்கினான்..“வாட்ஸ்
ராங் வித் யூ கபீர்?? ஆர் யூ மேட்??” என கடிதலாக
பிடுங்கிய தீஸ்தா “யூ லுக் லைக் எ ட்ரான்ஸ்ஜென்டர்...” என மேக்கப்பினை கலைக்க
முயன்றாள்.. “ஹே.. தீஸ்தா..” என ஒற்றை கைகளால் தடுத்து, “திஸ்
இஸ் அல்சோ ய கைண்ட் ஆப் டிராமா யா..” என்றவனை ஞேவென பார்த்தாள்..
“ஸீ
தீஸ்தா.. இதே காஸ்டியூம்ல நான் வெளிய போனா என்ன ஆகும்.. எல்லாருமே என்னை ஒரு
மாதிரியா நினைச்சிப்பாங்க.. கூடவே நீயும் வந்தா..” என ஆர்வமூட்ட விழைய, “வாட் டூ
யூ மீன்??” என அலட்டலில்லாமல் கேட்டாள்.. “நான் ஒரு ட்ரான்ஸ்ஜென்டர்னு மாமாக்கு தெரிஞ்சு
அடுத்து என் பக்கமே திரும்ப மாட்டாரு..” என்கவும், “ஓகே..
ரெடி..” என சம்மதித்தவள் லிப்ஸ்டிக்கை ஓவர்கோட்டிங் அடித்தாள்..
“தீஸ்தா..
வாட் ஆர் யூ டூயிங்..” என இம்முறை அதிர்ச்சி அவன் முகத்தில் இருக்க, “வெயிட் அண்ட் வாட்ச் மேன்...” என்றவள் கூந்தலை அங்கும் இங்குமாக கலைத்து
விட்டு, அவனது கரம் பிடித்து வெளியே அழைத்து வந்தாள்.. அவர்களின்
கெட்ட நேரமாக கபீரின் மாமா கண்முன்னே தோன்ற, அது எப்பொழுதோ
நல்ல நேரமாக மாறியிருந்தது..
அவன்
இருந்த கோலத்தில் அவர் முகம் கோண, “மாப்ள..” என
தன்னையும் அறியாமல் அழைத்தார்.. “வாட் மாப்ள?? டியர் ஓல்ட்
மேன்.. யாரு நீங்க?? யாரை பார்த்து மாப்ள சொல்றீங்க??” என தீஸ்தா உதட்டை பிதுக்க, “அவன் என் தங்கச்சி
பையன்..” என ஆதுரத்துடன் கூறினார்.. என்ன இருந்தாலும் சிறிய வயதில் இருந்தே பார்த்து
வருபவனை திடீரென்று இக்கோலத்தில் காண உள்ளம் உடைந்து போனார்.. அவருக்கே உரித்தான
வெள்ளேந்தி குணத்துடன் நிற்க, “டியர் ஓல்ட் மேன்.. இது
என்னோட லிட்டில் குயீன்.. வி ஆர் இன் லெஸ்பியன் ரிலேஷன்ஷிப்..” என சன்ன குரலில்
கூறினாள்..
அந்த
வார்த்தையில் உள்ளம் வெதும்பி போனவர், நல்ல
வேலையாக தனது மகள் முன்பே தப்பி விட்டாள் என நிம்மதி கொள்வதை தவிர வேறு
வழியில்லை.. “சி யூ.. ஓல்ட் மேன்...” என கைகளை காட்டி விட்டு தீஸ்தா நகர, அவளது கரம் கோர்க்கப்பட்டிருந்த கபீரோ திரும்பி பாராமல் நடந்தான்.. நிற்கும்
பொழுதும் மாமாவின் முகத்தினை நிமிர்ந்து பார்த்திடவில்லை.. அவரின் முகவாடலை காணும்
தைரியமில்லை எனலாம்..
மாலினை
விட்டு ஒருவழியாக பார்க்கிங் ஏரியாவிற்கு வந்து சேர,
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெடிக்க வைத்தனர்.. “ஹஹஹ்ஹா.. நான்
லெஸ்பியன் ரிலேஷன்ஷிப்னு சொன்னதும் உன்னோட மாமா முகத்தை பார்க்கணுமே... ஹஹஹ்ஹா..
இப்போ இருந்து உன்னோட மாமா நீ இருக்குற பக்கம் என்ன?? உன் பேரை கேட்டாலே தெறிச்சு
ஓடுவாரு...” என சிரித்து கொண்டவளின் மொபைல் சிணுங்க, “ஒ..
ஷிட்...” என நெற்றியில் அடித்து கொண்டாள்..
“தீஸ்தா,
வாட் ஹேப்பனிங்??” என கபீர் வினவ, “அர்ஜுன்..
ஐ மீன் மை டாட் ஜஸ்ட் பைவ் பீட் அவே ஹியர்..” என்ற தீஸ்தாவின் கண்கள் பயத்தை கவ்வியிருந்தது..
“எங்கே??” என சுற்றும் முற்றும் கண்களை அலைபாயவிட்ட கபீர், “அங்க
நிக்குறவங்களா??” என சுட்டி காட்ட, அடுத்த
நொடி சுட்டிய சுட்டுவிரலை சுருக்கி ஒரு காரின் பின்னே கபீரை சுருங்க செய்து
விட்டாள்.. “எஸ்.. கபீர்.. எனிகவ் நான் இங்க இருந்து கிளம்பனும்.. டூ யூ ஹேவ் எனி
வெஹிகிள்??” என தீஸ்தா துரிதப்படுத்த, “யா.. பட் தீஸ்தா
உன்னோட டாட் நிக்குறது நியர் மை கார்..” என்கவும், “டியர்
பேட்(fate).. ஐயம் கோயிங் டு க்ரஷ் யூ..” என கைகளை முறுக்கினாள்..
“தீஸ்தா, யூ டோன்ட் வொரி.. ஐ டேக் கேர்..” என நம்பிக்கை அளித்து விட்டு, வேகமாக அர்ஜுனை நோக்கி நடந்தான்.. முக்கியமான ஏதோவொன்றை பற்றி விவாதித்து
கொண்டிருக்க, “எக்ஸ்கியூஸ் மீ.. ப்ளீஸ் மூவ் திஸ் சைட்..”
என்கவும் மரியாதைக்காக விலகி நின்றார்.. காரில் நகர்ந்து சென்ற கபீர் அர்ஜுனிடம்
புன்முறுவலை உதிர்க்க முறுவலித்து கொண்டார்.. சற்று தூரம் சென்றதும், “தீஸ்...” என மெல்லிய குரலில் அழைக்க,
மறைந்திருந்தவள் விரைந்து ஏறி கொண்டாள்.. ஒரு நிமிடம் கார் நின்று செல்ல, அர்ஜுன் திரும்பி பார்க்க அதற்குள் அங்கிருந்து மாயமாகியிருக்க தோள்களை
குலுக்கி கொண்டார்..
காரினுள்,
கெக்கே
பிக்கே என விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தவளை சீட் பெல்ட் அணியுமாறு
அறிவுறுத்தி விட்டு, “உனக்கு பயமா இல்லையா?? தீஸ்தா..”
என்ற கபீரின் கேள்விக்கு “ஏன் பயம்??” என்பது போல அமைந்தது அவளது பார்வை.. “சப்போஸ்
கண்டுபிடிச்சி நீ மாட்டிக்கிட்டா..” என கலக்கத்தோடு கேட்க, “அர்ஜுன்
பயப்படுற அளவுக்கு பனிஷ்மென்ட் கூட தர்றதில்லை.. ஈவன் திட்டுறது கூட காமெடியா தான்
இருக்கும்..” என்றவள் சிரிப்பை மட்டும் நிறுத்தவில்லை..
“தீஸ்தா,
ஸ்டாப் யா.. இவ்ளோ லிபரலான டாடை பார்த்து ஏன் மறைஞ்சிக்குற??” தனக்கு எழுந்த சந்தேகத்தை கேட்டு விட, சிரிப்பை
நிறுத்தி விட்டு சலனமேயின்றி அவனை நோக்கினாள்.. “நான் கேட்டது உன்னை ஹர்ட்
பண்ணியிருந்தா...” என கூற வந்தவனை மறித்து கொண்டு, “மால்ல
வச்சு அப்படி பிஹேவ் பண்றியே.. உன்னை பத்தின சொசைட்டியோட ஒப்பினியன் டேமேஜ்
ஆகும்னு யோசிக்கலையா??” என கேட்டாள் தீஸ்தா..
“ஏன்
யோசிக்கலை.. பியூச்சர் பத்தி பயமே இல்லாம ஒரு பொய்யை சொன்னியே அப்போ இதே கொஷ்டினரி
எனக்கு வந்துச்சு..” என அவளையே மடக்கி விட, “நாட்
பேட்.. நல்லா பேசுற.. ஸ்டாண்ட் அப் காமெடியன் போஸ்டிங்குக்கு ஓவர் குவாலிபைட்
தான்..” என கேலி செய்தாள் தீஸ்தா.. “ஜோக்ஸ் அப்பார்ட்.. ஸீ ஆர்டினரி பாயோட
கேரக்டர் இப்படி தான் இருக்கணும்னு ப்ரீ டிசைன் எதுவும் வச்சிருக்குறாங்களா?? அப்படி இருந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஹண்ட்ரட் பிசிலேயே
மறைஞ்சிடுச்சு.. அந்த பீரியட்ல லைப் ஸ்டைல் வேற.. இப்போ வேற.. அல்தோ ஹியூமன் ஏவால்வேஷன்
எப்படி வரும்.. எல்லாரும் அவங்க அவங்க விருப்பபடி வாழ்றாங்க.. நான் நானா இருக்க
விரும்புறேன்.. பப்ளிக் ஒப்பினியன் பார்லிமென்ட் எலக்ஷன்ல கூட உல்ட்டா ஆகும் போது
பாவப்பட்ட நானெல்லாம் காணாம போய்டுவேன்.. ஜஸ்ட் லைக் தட்னு எடுத்துக்கும் போது
தான் லைப் ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கா போகும்..” என்றான்..
“இன்ட்ரெஸ்ட்டிங்..
பையன் பாக்குறதுக்கு கியூட் அண்ட் ஹன்ட்சம்மா தான் இருக்குறான்.. இட்ஸ் ரெபர்ஸ் டு
நாட் எ பிசிக்கல் அப்பியரன்ஸ்.. பேசிட் ஆன் கேரக்டர்.. ஹுமரா பேசுறான்.. ஹியூமனா
நடந்துக்குறான்.. நாட் பேட்.. ரேர் ஸ்பீபஸா இருப்பானோ.. நான் என்ன சொல்ல வரேன்னா திஸ்
டைப் ஆப் பெர்சன்ஸ் ரொம்ப கம்மி.. நார்மல் பிகைவியர், நார்மல் ஆட்டிடியூட், நார்மல், நார்மல் எக்ஸட்ரா.. இது மட்டும் போதுமா
இன்னும் நிறைய கேரக்டர் இருக்குது.. அதையும் செக் பண்ணிடனும்.. ஒரே நாள்ல ரொம்ப
நல்லவன்னு பச்சை குத்திட கூடாது..” -தீஸ்தா
“கபீர், ஆர் ஆர் அவெனியூல ஸ்டாப் பண்ணிடு..” என கூற, “தீஸ்தா, ஐயம் கோயிங் தெயர் டூ..” என காரை அவள் குறிப்பிட்ட இடத்தில்
நிறுத்தினான்.. வழியிலேயே வாட்ச்மேன் பொருட்கள் சரியாக இருப்பதாகவும் எடுத்து
கொண்டு உள்ளே செல்லவும் கூறினார்.. அதிலே குஷியான கபீர், “தீஸ்தா,
நாம பிளாட் நெய்பர்ஸ்.. பிளாட் நம்பர் என்ன??” என படபடவென கேட்க, “பிளாட் நான் இன்னும் புக் பண்ணலை.. சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லி
வச்சேன்.. ப்ரோக்கரை மீட் பண்ண வரும் போது தான் அர்ஜுன் கிட்ட.. அப்புறம் நடந்த
எல்லாமே...” என தோள்களை குலுக்கி கைகளை விரித்து காண்பித்தாள்..
“இட்ஸ்
ஓகே.. இவ்ளோ பழகியாச்சு.. பிளாட்டுக்கு வரலாமே.. ஒரு சின்ன பிளாட் டூர் போகலாம்..”
என கண்ணடித்த கபீர் பெட்டிகளை தூக்கி கொள்ள உதவி செய்தான்.. இரண்டாவது தளத்தினுள்
நுழைந்து ஒரு அறையின் முன்னே சாவியை தேடி திறந்தான்.. “வெல்கம் டு மினி ஹெவன்..”
என கரத்தை விரித்து அழைக்க, உள்ளே நுழைந்தாள் தீஸ்தா..
ஒவ்வொரு அறையாக சுற்றி காண்பித்த கபீர், “தீஸ்தா, மார்னிங்
டீயா காபியா??” என கேட்டான்.. “கம் ஆன் கபீர் இது ஆப்டர்நூன்..”
என கூற, “ப்ச்.. ஆன்சர் ஒன்லி...” என போலியாக அதட்டினான்.. “ப்ளாக்
காபி...” என்கவும், “ஓகே.. மில்க் வாங்குற செலவு மிச்சம்.. மிஸ்.தீஸ்தா
அர்ஜுன், திஸ் இஸ் யுவர் ரூம்.. கோ இன்சைட் அண்ட் டேக்
ரெஸ்ட்..” என சிரம் தாழ்த்தி வணங்கினான்..
“கபீர்..
வாட் யா??” என தீஸ்தா சங்கடத்தில் நெளிய, “உனக்கு ஒரு ரூம்
தேவை.. எனக்கு மார்னிங் காபிக்கு கம்பெனி கொடுக்குற ரூம்மேட் தேவை.. ப்ராப்ளம்
சால்வ்ட்..” என அலட்டலின்றி கூறினான் கபீர்..
“கபீர், அன்ஸ்டேபிள் இடியட்.. அப்போ தெரியாம மாட்டிக்கிட்டேன்.. இப்போ தெரிஞ்சே
வந்து மாட்டிகிட்டேன்.. தென் ஐ டோன்ட் கோ ஹிம் அண்ட் ஹிஸ் இரிடேடிங் எமோஷனல்
நான்சென்ஸ்.. அண்ட் நவ் வெல் நோ அபௌட் திஸ் இடியட்.. ஏன் இவ்ளோ அனாயிங்கா
இருக்குறான்??”
-தீஸ்தா
“இப்போ
என்னாச்சுடா??” என தீஸ்தா சற்றே எரிச்சலோடு கேட்க, “ஹிமாவாரி.. நான் சாகுறதை தவிர வேற வழியில்லை...” என்றவனிடத்தில் தனது
கலவரம் நிறைந்த முகத்தை மறைக்க இயலவில்லை..
பந்தங்கள் தொடரும்..
0 Comments