தற்கொலை பற்றிய விழிப்புணர்வு

 தற்கொலை தடுப்பு தினத்திற்காக நான் எழுதிய கட்டுரையை பதிவிட்டிருக்கிறேன்... 


தற்கொலை பற்றிய விழிப்புணர்வு 

வணக்கம்,

                  இன்று காலையில் நெருக்கமான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை கேள்விப்பட்டபோது என் சிந்தையில் எழுந்த எண்ணத் தீற்றல்கள் இவை. செப்டம்பர் 10 தற்கொலை தடுப்பு தினம் என அனைவரும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே அதை பற்றி விளக்கம் அளிக்கவோ இல்லை விழிப்புணர்வோ தர வரவில்லை. காரணம் இதுபற்றி பலர் பல விதங்களில் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு தந்திருப்பர்.

                 நாம் காணப்போவது தற்கொலை செய்ய தயாராகும் நபர்களின் மனநிலை பற்றி தான். அது குறித்து கவிதை கூட எழுதியாயிற்று. இது சீப் பப்ளிசிட்டி தேடி கொள்ள பேசுவது இல்லை. இந்த உரை எந்த ஆய்வு கட்டுரைகளையும் ஆராய்ந்து தகவல்கள் திரட்டி எழுதப்பட்டவை இல்லை. தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்று மனம்திரும்பி வந்த ஒரு நபரின் அனுபவங்களை கொண்டு தொகுக்கப்பட்டது. பொதுவாகவே தற்கொலை செய்பவர்களுக்கான காரணங்கள் கீழ்காணும் ஏதோ ஒன்றாகவே இருக்கும்.

                                        1. காதல் தோல்வி 

                                         2.கல்வி தோல்வி 

                                        3.அவமானங்கள் 

                                        4.குடும்ப தோல்வி 

                                        5.கடன் தொல்லை.

இது போன்ற காரணங்கள் மூன்றாவது மனிதனாக இருந்து கவனிக்கும் போது ஆயிரம் வழிகள் பிறக்கும். இது எல்லாமா காரணம்??? என்று தோன்றும். ஆனால் அந்த இடத்தில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் கண்டிப்பாக எவருக்கும் வராது..

அவர்களால் உணர்வுகளை கையாள முடியா நிலைக்கு செல்லும் போது அவர்களின் முடிவு தற்கொலையாகிறது. அப்போது அவர்களின் மனநிலையானது எவ்வாறு இருக்கும் 

  • வருத்தம் - முதலில் இவ்வுலகில் அவர்கள் இழந்ததை நினைத்து வருத்தம் கொள்வர். அந்த வருத்தம் எந்த அளவில் இருக்கும் எனில், நடக்காது என தெரிந்த ஒன்றை நடந்து விடாதா?? என்ற ஏக்கம், மனதை வாட்ட, இதயத்தை பிழிய தொடங்கும்.
  • அழுகை- இயலாமையின் காரணமாக ஏற்படும். தங்களின் சோகம் தீரும் வரை அழ தொடங்கி அழுகையே சோகமாய் உருமாறும். கண்களில் நீர் வற்றும் வரை அழுது தீர்த்து விடுவர்.
  • விரக்தி- வற்றிய கண்ணீரின் தொடராய் பிறக்கும். ஏன் இந்த உலகில் வாழ்கிறோம்?? என தன வாழ்க்கையை நினைத்து அதில் நடந்த எதிர்மறையான நிகழ்வுகளை மூளையானது அசைபோடும். வாழ தகுதி உள்ளதா?? என ஆராயும் முன் இந்த வாழ்வை வாழ தைரியம் இல்லை.. என்ற எண்ணம் பிறக்கும்.
  •  வெறி- இயலாமை, துக்கம், வலி, வேதனை, காயம், அவமானம், ஏமாற்றம் அனைத்தும் சேர்ந்து மனதில வெறியாய் உருமாறும். இந்த வெறியினால் ஒருவன் அடுத்தவர்களை காயப்படுத்தினால் சைக்கோ கில்லராய் மாறுகிறான் .தன்னையே காயப்படுத்தி கொள்ளுகிறவன் தற்கொலை செய்கிறான். வெறியின் காரணமாக தன்னை தானே காயப்படுத்தி கொள்கிறான். முடியினை இழுத்து முறிப்பது, கை கால்களில் கீறல்கள் இட்டு கொள்வது போன்றவை.
  • மனதளவில் பலவீனமாகுதல்- விருப்பமானவர்கள் மற்றும் அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களிடம் (பெற்றோர்கள், நண்பர்கள், உறவுகள், காதல்ரகள் ) தன்னுடைய முடிவிற்காய் மன்னிப்பு கேட்பர். சிலர் மனதிற்குள்ளே மருகி பேசி கொள்வர். சிலர் தற்கொலை கடிதமாய் கூறுவர். சிலர் தொலைபேசி வாயிலாக கடைசி பேச்சாக வெளிப்படுத்துவர். 

இறுதியாய் எடுத்த முடிவின் படி தற்கொலை செய்வர். ஒருவரது தைரியத்தை பொறுத்தே அவரது தற்கொலை முறை உள்ளது.

  1. விஷம் அல்லது பூச்சிமருந்து- எளிதில் கிடைக்க கூடியவை, உடனடி தற்கொலைகளுக்கு காரணமாகும்.
  2. தூக்கு- மனநிலையில் சற்று இறுக்கம் கொண்டவர்கள் செய்து கொள்வது. இறப்பின் போது மரணவலியை காட்டும். 
  3. உயரத்தில் நின்று, கடல் மற்றும் கிணற்றில் குதித்தல்- இதில் ஈடுபடும் நபரின் மனநிலை, மலையாக இருந்தால் தனது உடல் எவருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணமாக இருக்கும்.. கட்டிடம் என்றால் உடனே உயிர் பிரிய வேண்டும்.. நீர் பகுதியாய் இருந்தால் சுமூகமான முறையில் எந்நிலையிலும் தனது எண்ணத்தை மாற்றி கொண்டு வெளியே வரமுடியாது என்ற எண்ணமாக இருக்கும்.
  4. தண்டவாளம் மற்றும் பேரூந்தில் தலைகொடுப்பது-  பெரும்பாலும் மிகுந்த அளவில் மன உளைச்சலில் இருப்பவர்களே ஈடுபடுவார்கள்.
  5. தீக்குளித்தல்- இந்த முறை மன உளைச்சலை மீறிய மனவேதனையில் உள்ளவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.நெருப்பின் எரிச்சலை தாங்கும் அளவில் உள்ளத்தின் மனக்குமுறல்கள் அடங்கியிருக்கும்.

தற்கொலையில் உள்ள பாதகங்கள்;

  1. விஷம் குடித்த பின் சிகிச்சைக்காய் வாய் வழியே குழாய் அனுப்பி வயிற்றில் உள்ள விஷத்தை வெளியே எடுப்பர். சிகிச்சையின் பின் வயிறும் தொண்டையும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.
  2. தூக்கின் போது கழுத்து நரம்பு பாதிக்க பட்டால் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு தேவைக்கும் மற்றொருவரை சார்ந்து வாழ வேண்டும்.
  3. மேலிருந்து ஆழத்திற்கு குதிக்கும் போதும் தண்டவாளம் மற்றும் பேரூந்தினுள் குதிக்கும் போது மிகுந்த வலி உண்டாகும். உயிர் உடனே பிரிய வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  4. தீக்குளித்தல் முடிவில் ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் இறப்பின் முன்னாலும், தப்பிய பிறகும் நரக வேதனை. தேகம் எங்கும் எரிச்சல் மட்டுமே மிஞ்சும்.

உயிரை மாய்த்து கொள்வதினால் அந்த நபருக்கு இந்த வேதனைகள் எனில் அவர்களை மனதில் கொண்டவர்களுக்கு அவர்கள் இறந்த பின்னர் மொத்த உலகும் சூன்யமாகிவிடும்.. அதன் பின் இந்த உலகில் அவர்கள் நடைபிணங்கள் மட்டுமே... எனவே தற்கொலை முடிவினை எடுப்பவர்களுக்கு வேண்டுமானால் அவர்களின் வாழ்வை தீர்மானிக்கும் உரிமை இருக்கலாம். அனால் நெருங்கியவர்களின் வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்க உரிமையில்லை.

உலகே இருண்டு போகும் நிலை வந்தாலும் ஒளி தோன்ற வழி என்று ஒன்று உள்ளது. அதுபோல ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை ஆக வேண்டாம். எதுவாக இருந்தாலும் எதிர்த்து நின்று முயற்சிக்கலாம். வெற்றியும் தோல்வியும் வாழ்வில் வரக்கூடியவை தான். 

அறிவுரை வழங்குவது எளிது. ஆனால் ஒருவரின் நிலையில் வாழ்ந்து பார்த்தால் தான் புரியும் . ஒரு நிமிடம் நமக்கான கவலைகளை  விட்டு வெளியே வந்து முடிவு எடுத்தால், பிரச்சனையை சமாளிக்கும் வழி கிடைக்கும். ஆனால் வழியில்லை என்பதற்காக வலி ஏற்படுத்திக்கொள்ள கூடாது.

தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எவ்வாறு???

  • எண்ணம் வராமல் தடுக்க முடியாது. ஆனால் எண்ணத்தின் கவனத்தை திசை திருப்பலாம்.
  • தற்கொலையின் எண்ணங்கள் தோன்றும் போது நம் கண்முன்னே நெருங்கிய சொந்தங்களோ பெற்றோர்களோ நல்ல நிகழ்வுகளோ வர வாய்ப்பில்லை. எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும்.
  • முதல் வழி நண்பர்கள், நண்பர்களை விட சிறந்த தற்கொலை மருந்துகள் இவ்வுலகில் கிடையாது. முடிந்தவரை அதிக அளவிலான நண்பர்களை சேர்த்து கொள்ளுங்கள். அவர்களோடு அதிக நேரத்தை செலவிடுங்கள். தங்களின் மனபாரத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • பெற்றோர்கள்-அவர்களுடன் உரையாடுங்கள். அவர்களின் எண்ணவோட்டத்தினை அறிந்து கொள்ளுங்கள். உங்களை இந்த உலகில் அழைத்து வந்ததில் இருந்து உண்மையான அக்கறை கொண்ட மனிதர்கள் அவர்களே. அவரக்ளுக்கு உங்களால் முடிந்த மகிழ்ச்சியை அளியுங்கள். அவர்களின் முகத்தில் உங்களால் சிரிப்பு பிறக்கிறதென்றால் அந்த சிரிப்பு விலைமதிப்பற்றது. உலக செல்வந்தர்களின் நீங்களும் ஒருவர்.
  • நல்ல அமைதி மற்றும் கருத்துக்கள் தரும் புத்தகங்களை வாசியுங்கள். புத்தகம் என்பது பல வாழ்வுகளை எடுத்துரைக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் வாழ்ந்து முன்னேற உந்தி தள்ளும்.
  • மாலை நேரத்தில் இயற்கையை ரசித்து காலாற நடந்து பழகுங்கள். பலவிதமான மனிதர்களை சந்திக்க வாய்ப்பாக அமையும். வாழ்க்கையின் பலவிதமான  பக்கங்களை உணர்த்தும்.
  • மனதிற்கு அமைதி தரும் செயல்களை செய்யலாம் எடுத்துகாட்டக்காக தோட்டம் அமைத்தல், இசை ஓவியங்கள் நடனம் கைவேலைகள் (கூடை புனைதல், காகித புனைவுகள்).
  • அதிகம் தனிமையில் இல்லாமல் புது மனிதர்களை சந்தியுங்கள். உங்களை எப்போதும் சுறுப்பாகவும் அதிக வேலைகளோடும் வைத்திருங்கள். ஏனெனில் இது நீங்கள் இழந்தவற்றை நினைவு படுத்தும் உங்களின் மூளையையும் மனதையும் கட்டுப்படுத்தும்.

எதிர்மறையான எண்ணங்களை எடுத்து விட்டு எண்ணிலடங்கா எல்லைகளை கடக்கலாம்...

நல்லது விதைக்கும் போது நல்லதே விளையும்...


Reactions

Post a Comment

1 Comments

  1. Sema pathivu man... Karankal ah vida tharkolai eappudi pannipanka nu padichathula na sema feel akiden ruthi ji .. yosika thondura oru pathivu ..

    ReplyDelete