Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

தமிழகத்தில் பாராமெடிக்கல் படிப்புகள்

 

தமிழகத்தில் பாராமெடிக்கல் படிப்புகள்



கேள்வி:

நர்ஸிங், லேப் டெக்னீஷியன், பிசியோதெரபி போன்ற படிப்பிற்கான அட்மிஷன், நுழைவுத்தேர்வு இருக்கிறதா?”

பதில் :

முதலில் அட்மிஷன் குறித்து தெரிந்துகொள்வோம்..

நர்ஸிங், லேப் டெக்னீஷியன் போன்ற படிப்புகளை ஒட்டுமொத்தமாக பாராமெடிக்கல் படிப்புகள் என வகைப்படுத்தலாம். மொத்தமாகப் பார்க்கையில் சில படிப்புகள் மட்டுமே நமக்கு பரிச்சயமாகத் தோன்றினாலும் பாராமெடிக்கல் பிரிவின் கீழே பல படிப்புகள் இடம்பெறுகின்றன. அவை அனைத்தையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.

·                  B.Sc (Allied Health Services)

·                  B.Sc (Audiology and Speech Therapy)

·                  B.Sc (Medical Lab Technology)

·                  B.Sc (Nuclear Medicine)

·                  B.Sc (Ophthalmic Technology)

·                  B.Sc (Radio Therapy)

·                  B.Sc (Radiography)

·                  B.Sc (Respiratory Therapy Technology)

·                  B.Sc in Critical Care Technology

·                  B.Sc in Dialysis Therapy

·                  B.Sc in Operation Theatre Technology

·                  B.Sc Nursing

·                  Bachelor of Naturopathy & Yogic B.Science

·                  Bachelor of Physiotherapy

·                  BOT - Bachelor of Occupational Therapy

·                  BPT - Bachelor of Physio / Physical Therapy

·                  Diploma in Anaesthesia

·                  Diploma in Dialysis Technology

·                  Diploma in Medical Imaging Technology

·                  Diploma in Medical Laboratory Technology

·                  Diploma in Nursing Care Assistant

·                  Diploma in OT Technician

·                  Diploma in Physiotherapy

மேலே குறிப்பிட்ட இருபத்து மூன்று படிப்புகளுக்கும் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பாக சேர்க்கை நடைபெறும். இந்த சேர்க்கை ஏறத்தாழ பொறியியல் சேர்க்கையை ஒத்தது. அதாவது இயற்பியல், வேதியியல், உயிரியல் (விலங்கியல், தாவரவியல்) ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் (Rank List) தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். அதன்பிறகு அந்த பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் முதலில் நிரப்பப்படும். அதைத் தொடர்ந்து தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களைத் தேர்வு செய்வர்.

தமிழகத்தில் பொதுவாக ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த சேர்க்கை நடைபெறும். ஆகவே நர்சிங் முதலிய பாராமெடிக்கல் பிரிவைப் பயில விரும்புவோர் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். உடன் பயின்ற மாணவ மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து விட்டனரே, நமக்கு விருப்பமான கல்லூரியில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்கிற கலக்கம் வேண்டாம்.

 

கல்விக்கட்டணத்தை பொருத்தவரையில் அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தான். தனியார் பாராமெடிக்கல் கல்லூரிகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக இருபத்து எட்டாயிரம். இது டியூஷன் பீஸ். மேலதிக கட்டணங்கள் அந்தந்த கல்லூரியைப் பொருத்தவை.

மேலே குறிப்பிடப்பட்ட படிப்புகளில் அதனதன் பெயருக்கேற்ப தனித்தனி பாடத்திட்டங்களும், வேலைவாய்ப்புகளும் உள்ளன. என்றுமே பாராமெடிக்கல் படிப்பென்பது சோடை போனதல்ல. எந்தப் படிப்பைப் படித்தாலும் ஏதோ ஒரு இடத்தில் உங்களுக்கு வேலை நிச்சயம். அதே சமயத்தில் பணிச்சுமையும் சற்றே அதிகம் தான். ஏனெனில் உயிரைக் காப்பாற்றும் மருத்துவருக்கு உறுதுணையாக இருக்கப் போகிறீரே!

உதாரணமாக, Ophthalmology பிரிவைத் தேர்ந்தெடுத்தால் கண்பார்வை கணக்கீட்டாளராக பணிபுரியலாம். மருத்துவமனைகளிலும் பணிக்குச் சேரலாம். சொந்தமாக ஆப்டிக்கல் வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

பேச்சிலர் ஆப் பார்மசி படித்து, உரிமம் (License) பெற்றுவிட்டால் தனியாகவோ இல்லை மருத்துவமனையுடன் இணைந்தோ மருந்தகம் நிறுவும் வாய்ப்பு உள்ளது. இன்றளவும் கிராமங்களில் மெடிக்கலில் ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இது சரியா தவறா என்பதையெல்லாம் நான் விவாதிக்க விரும்பவில்லை. இவ்வாறு நடக்கிறது எனக் குறிப்பிட்டேன் அவ்வளவே.

இவ்வாறு ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனி வேல்யூ, வேலைவாய்ப்பு உள்ளது. இவற்றில் எது பெரியது, எது சிறியது என்பன போன்ற பேச்சுக்களே இடமில்லை. அதனதன் பார்வையில் அவை சிறந்தவையே. இவை அனைத்துமே வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ப்ரொபஷனல் படிப்பு வகையைச் சார்ந்தவை.

 

தமிழகத்தைப் பொருத்தவரையில் இந்த படிப்புகளுக்காக தனிப்பட்ட நுழைவுத் தேர்வு என்று எதுவும் இல்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் இருக்கின்றன.

சில பல்கலைக்கழகங்கள் அவற்றின் இடங்களை நிரப்புவதற்காக நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. உதாரணமாக, CMC – Vellore என்று அழைக்கப்படும் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜில் சேர்வதற்கு தனியே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

அரசின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வு மட்டுமே. மேனேஜ்மென்ட் கோட்டா அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளாமலே சிலர் சேர்க்கை பெறுவர். ஆனால் அவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அப்பாற்பட்டவர்கள். கல்லூரியின் கட்டண நிர்ணயத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.

இது தான் மேலே குறிப்பிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை முறை.

 

இவை தவிர, டிப்ளமோ இன் பார்மஸி, டிப்ளமோ இன் ஆப்தால்மால்ஜி போன்ற டிப்ளமோ படிப்புகளும் தனித்தனி கல்வி நிறுவனங்கள் சார்பாக நடத்தப்படுகின்றன. இவற்றிற்கான சேர்க்கை அந்தந்த கல்லூரியைச் சார்ந்தது. நுழைவுத் தேர்வு/மெரிட் அடிப்படையிலானது.

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்து விடலாம் என்பதைப் போல, D.Pharm (Diploma in Pharmacy) முடித்தவர்கள் நேரடியாக இரண்டாமாண்டு B.Pharm சேர்ந்து கொள்ளலாம்.

 

இவையே தமிழகத்தில் பாராமெடிக்கல் சேர்க்கைக்கான நடைமுறைகள். இந்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

அடுத்ததாக எந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமென இந்த பதிவின் கீழே பதிவிடுங்கள்.. உள்பெட்டியில் கேட்பவர்களிடம், “அடுத்ததாக பதிலளிக்கிறேன்...” எனக் கூறினாலும், பணிச்சுமையால் நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை. அந்தந்த பதிவின் கீழே நீங்கள் கேள்வியைப் பதிவு செய்தால் அடுத்த பதிவில் உங்களுக்கு பதிலளிக்கிறேன்.. நன்றி!!

 

அடுத்ததாக, தொலைதூர படிப்பில் சேர்ந்து பயிலுவது பயனளிக்குமா?? என்பதற்கு பதிலளிக்க இருக்கிறேன்.

 

 

 

 

 

Post a Comment

0 Comments