இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மின்மினி...

 

இந்த உலகில் இருவர் சந்திக்கும் போது பார்த்த உடனோ இல்லை பழகிய பிறகோ தான் எவ்வுறவும் தோன்றும் என்பது நடைமுறை நியதி!!


நான் உன்னை சந்தித்த போது வந்ததா இல்லை பழகிய பிறகு வந்ததா என்று தெரியவில்லை.. 
எந்த நிமிடத்தில் உன்னை என் உடன்பிறவா தங்கையாக ஏற்றுக் கொண்டேன் என்று தெரியவில்லை...
ஆனால் நீ இன்று வரை என் தங்கையாக இருப்பதற்கு விருது தான் கொடுக்க வேண்டும்....

ஏனெனில் நான் இதுவரை ஒரு சகோதரியாக உனக்கு எதுவும் செய்யவில்லை... இருப்பினும்,

நான் துவண்டு போன நேரத்தில் எல்லாம் ஆறுதல் கூறினாய்....
நான் மறந்து விடுவேன் என்று முந்தைய நாளே யூகித்து பல அலுவல்களை நினைவுபடுத்துவாய்...
அவ்வவ்போது நான் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் வேளையில் என்னை காப்பது மட்டுமின்றி என்னை காயப்படுத்தாத வகையில் அறிவுரை வழங்குவாய்... 
என்னை எவரும் தவறான வகையில் பேசாமல் பார்த்து கொள்வாய்....

மாறாக நான் எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை..... உன்னை அடிக்கடி காயப்படுத்தினேன்.... 

என் உடன்பிறவா சகோதரியாய் விளங்கினாய்.... 

இன்று உன் பிறந்தநாள்..... ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு இனிதாக சிறப்பு பெற்று அமையும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... தீர்க்காயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.....

Reactions

Post a Comment

2 Comments

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மின்மினி சிஸ்டர்
    வாழ்க வளமுடன்💐💐

    ReplyDelete