இனி எல்லாம் வசந்தமே...
இந்த தொடரில் அனிஷாவிற்கு இரண்டு சாபங்கள் இருப்பதாகவும் அவள் அந்த விஷயங்களை நினைத்து பயந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும்...
மேலும் அவள் பயந்தது போலவே அந்த சாபங்கள் அவளுக்கு நிகழ்ந்துவிடும்... ஆனாலும் அந்த சாபங்களை வரமாக மாற்றி அவள் வாழ்வில் வென்றுவிட்டாள்...
இந்த காட்சிக்கான காரணம் கீழே...
முன்னொருகாலத்தில் நடந்த சம்பவம் இது... நான் அப்போது விடுதியில் தங்கி இளங்கலை (பி.எஸ்சி கணிதம்..) படித்துக்கொண்டிருந்தேன்... எங்கள் கல்லூரி விடுதியின் போன், லேப்டாப் என எதுவும் அனுமதியில்லை... வீட்டிற்கு பேசுவதாக இருந்தாலும் வாரத்திற்கு ஒருநாள்... அதுவும் இரண்டு நிமிடம் தான்... நேரடியாக நாம் பேச கூடாது... என்ன கூறுவதென நாம் கூறவேண்டும்... போனை உபயோகப்படுத்துபவர் அதை நம் வீட்டில் உள்ளோரிடம் தெரிவிப்பார்... நம் வீட்டினர் பேசுவதை கேட்டு நம்மிடம் தெரிவிப்பார்...
பொழுதுபோக்கு என பெரிதாக எதுவும் கிடையாது... தினமும் ஒரு மணிநேரம் பாடல் ஒலிபரப்பப்படும்... மாதத்திற்கு ஒரு திரைப்படம் ஒளிபரப்பப்படும்...
இப்படி இருந்த விடுதியில் தங்கியிருந்ததால் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அந்நியோன்யமாக குடும்பமாக இருக்க பழகிக்கொண்டோம்... யாருக்கும் உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களை கவனித்துக்கொள்வது, கவலையில் இருப்போருக்கு ஆறுதல் கூறுவது என வாழ தொடங்கினோம்...
ஆனால் எங்களுக்கும் நெருக்கமானதொரு கும்பல் இருந்தது... அப்படி எங்கள் குழுவில் நாங்கள் ஏழு பேர் இருந்தோம்... எனக்கு வாய்த்த அடிமைகளின் பெயர் மஞ்சுளா, லட்சுமி, சினேகா, அப்புறம் இன்னொரு லட்சுமி, வேணி, ஐஸ்வர்யா... இப்டி ஏழு பேர் கொண்ட குழு சாப்பிடுகையில், டீ குடிக்கையில் என ஒன்றாக அமர்ந்து அரட்டையடிப்போம்...
பொதுவாக நான் ஒரு டிசிப்ளின் பேர்வழி... யாராவது தவறு செய்தால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது... அதிலும் ஆங்கிலம் யாரவது தவறாக பேசினாலோ, எழுதினாலோ பொங்கி எழுந்துவிடுவேன்...
"இவ பெரிய இங்கிலீஸ்காரன் பொண்டாட்டி..." என கேலி செய்வர் என் தோழியர்...
மஞ்சுளா எனது துறை என்பதால் நான் அவளிடம் சற்றே உரிமை எடுத்துக்கொள்வேன்... அப்படியிருக்கையில் அவளுக்கு ஆங்கிலம் சற்றே குழறும்...
"select" என்பதை "செலக்ட்" என உச்சரிக்காமல் "செலெக்ஸ்.." என உச்சரித்துவிட்டாள் எனதருமை செல்லம்... பாம்புக்காது கொண்ட எனக்கு இது தெளிவாக கேட்டுவிட்டது... அன்றிலிருந்து அவளை "செலெக்ஸ்... செலெக்ஸ்...' என கேலி செய்ய ஆரம்பித்துவிட்டேன்... அவளும் என் மீது கொண்ட அதீத பிரியத்தினால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்...
அடுத்ததாக அவள் "character..." என்பதை "கேரக்டர்..." என உச்சரிக்காமல் "சேரக்டர்..." என உச்சரித்துவிட்டாள்... தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த நான் கொப்பளித்துவிட்டு "என்ன டி???" என கேட்க "chair...' சேர் என்றால் "character..." "கேரக்டர்..." தானே..." என அப்பாவியாக கேட்டாள் அவள்...
எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த இங்கிலீஷ்காரன் பொண்டாட்டி வெளியே வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட அன்றிலிருந்து அவளை கலாய்த்து தள்ள தொடங்கினேன்... பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்துவிட்டாள்...
"இதோ பாரு டி... நானாவது ஒண்ணு ரெண்டு வார்த்தை தான் தப்பா பேசுறேன்... உனக்கு இங்கிலீஸ் தெரியாத ஒருத்தன் தான் புருஷனா வருவான்... அதிலயும் அவன் உன்னை இம்ப்ரெஸ் பண்றதுக்காக என்னை மாதிரியே தப்பு தப்பா பேசி உன்னை தினமும் சாவடிப்பான் பாரு...' ன்னு பொசுக்குன்னு சொல்லிட்டா...
அப்புறம் எத்தனயோ தடவை கெஞ்சியும் சாப விமோசனம் கிடைக்கல... இதே மாதிரி வாய்க்கொழுப்பினால "அந்த பெயர்..." சாபத்தையும் வாங்கி வச்சிக்கிட்டேன் நான்...
ரெண்டு சாபங்கள் கிடைத்துவிட, அனிஷா மாதிரியே அடிவயிறு கலங்கிட்டே இருந்தேன் ரொம்ப நாள்...
இதுவே தான் அந்த காட்சிக்கு பின்னாடி இருக்கும் கதை...
அப்போ அந்த சாபம் பலிச்சிடுச்சா சிஸ்டர்?? அப்டின்னு கேக்காதீங்க... நான் கும்பிட்ட சாமி என்னை கைவிடல... அதனால அப்டி எதுவுமே நடக்கல... தப்பிச்சிட்டேன் மக்களே...
பெயரும் நல்ல பெயர் தான்... ஆங்கிலமும் நன்கு அறிந்த ஜீவன் தான் நமக்கு சிக்கிச்சு...
முழுக்கதையும் படிக்க : இனி எல்லாம் வசந்தமே...
3 Comments
😂😂 semma nickname ka
ReplyDeleteha ha ha.. thank you so much drr... keep supporting maa..
DeleteThank you so much drrr... keep supporting...
ReplyDelete