சிறு எறும்பாய் நான்.. ஒரு துளி தேனாய் நீ...
ஒரு இண்ட்ரோ போய்ட்டு வந்துடலாம்.. இது ஒரு போட்டி கதைதான்.. டைம் வேற இல்லை.. அதனாலதான் 25 எபிசோட்ல முடிச்சிட்டோம்.. இல்லன்னா ரெண்டு வருஷத்துக்கு இழுத்து இருக்க மாட்டோமா?? அதை விடுங்க... நாம காப்பி கேட்டுக்குள்ள போகலாம்... முதல் காட்சியில் கதாநாயகியும் அவளோட தோழியும் ட்ரெயின்ல வேகமா வந்து ஏறி உட்காருவாங்க... அப்பவும் ஹீரோயினோட பிரெண்ட் பயங்கரமான அட்வைஸ் பண்ணிட்டு தான் கிளம்பினாங்க.. அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் போட்டு ஜாலியா ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து இருப்பாங்க.. அதுக்கு அப்புறம் ஹீரோ இண்ட்ரோ சீன் எல்லாம்...
காப்பி சீன் :
இது எப்படி நடந்துச்சுன்னா.. சென்னைக்கு ஒரு கான்பிரன்ஸ்க்காக போயிருந்தேன்.. அதாவது இந்த கான்பிரென்ஸ்னு சொல்லிட்டு பேபர் பிரசெண்டேஷன்காக பதினோரு மணி வெயில்ல பாட்டே பாடாம தூங்க வைப்பாங்கல்ல.... அந்த வேலைக்கு தான் நான் அங்க போயிருந்தேன்.. பிரசெண்டேஷன் எல்லாம் முடிச்சுட்டு ரொம்ப ப்ரீயா வந்தேன்.. அப்போ என் ஃப்ரெண்டும் நானும் ஷாப்பிங்னு மால் சூப்பர் மார்க்கெட்டனு சுத்திட்டு நல்லா ஊர சுத்திட்டு ட்ரெயினோட டைமுக்கு தான் ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம்.. அதே சீன் அப்படியே தான் நடந்துச்சு...
நமக்கு டைம் கம்மியா இருக்கு... மத்த கதைகள் மாதிரி விஷ்வாவ 20வது எபிசோட்லயும் க்ரிஷை 30வது எபிசோட்லயும் ஹீரோவாக்குன பருப்பு இந்த கதையில வேகாதே.. சோ ரெண்டே எபிசோட்ல மீட்டிங் சீன் வைக்கணும்.. அப்போ நினைவுக்கு வந்தது தான் இந்த நிகழ்வு..
ட்ரெயின் வர்ற மாதிரி இருக்குன்னு ஒரு ஆள் இடிச்சிட்டு ஓடிவந்து ட்ரெயின்ல ஏறுனது எல்லாம் வேற கதை...இந்த இடத்தில ஜெகன் எங்க வர்றான்னு தானே கேக்குறீங்க..வரலைப்பா.. நானே அங்க இருந்த ஒரு பையன் ஒருத்தன ஜெகனா எடுத்துக்கிட்டேன்.. பேச்சு குடுத்ததுக்கு அப்புறம் தான் தெரியுது நம்ம ஊருக்கு பக்கத்து ஊரு பையன்.. சேம் ப்ரீலைப் போட்டோகிராபர்.. ஒரு ரயில் சிநேகத்துக்காக சின்னதா பேசிக்கிட்டோம்....
வைஷூ ட்ரெயின்ல சாய்ஞ்சு நின்று பார்க்கும்போது ஆப்போசிட்ல ஜெகன் நின்ன மாதிரி, நான் இங்க சாய்ஞ்சு நிக்க, அங்க அந்த பையன் சாஞ்சு நின்னான். இதுல ஹைலைட் என்னன்னா.. அந்த பையன் நான் வீடியோ பார்த்துட்டு இருக்கேன்னு நினைச்சு என்ன பார்த்து சிரிச்சான்... ஆனா அவனையே ஒரு வீடியோவா என்ற வூட்டுகாரர் பாத்துட்டு இருந்தாரு.. (அதாங்க வீடியோ கால்ல பேக் கேமரா ஆன் பண்ணி வச்சு தான்..) சின்ன வயசுல எல்லாம் நாங்க கேங்கா உக்காந்து சைட் அடிப்போம்.. ஆனா இங்க குடும்பமா உக்காந்து சைட் அடிச்சிட்டு இருந்தோம்.. அப்பல்லாம் எனக்கு சிரிக்கிறதா இல்லை தலையில அடிச்சிக்கிறதான்னே தெரியாம நின்னுட்டு இருந்தேன்.. அப்ப பாத்துக்கோங்க பையன் எம்புட்டு அழகா இருந்திருப்பான்னு...
ட்ரெயினை விட்டு இறங்குவதும் அதை விட வேற லெவல்.. என்னை தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வர சொல்லிட்டு, மனுஷன் அங்க போய் அந்த பையன்ட்ட நின்னு பேசுறாரு.. வேகமாக போறதுக்குள்ள பேசி முடிச்சிட்டு வந்துட்டாரு... கேட்டதுக்கு "அவரோட பெர்மிஷன் இல்லாம அவரை பாத்தோம் இல்லையா?? அதான் போய் சொல்லிட்டு வரேன்" அப்படிங்குறாரு...
அடப்பாவி மனுஷா...
நான் ஒரு தத்தின்னு பார்த்தா அவரு அதுக்கு மேல இருக்காரு... "தத்தி தம்பதியர்கள்"னு அவார்ட் குடுக்கிறதா இருந்தா என்னை கட்டினவர், எனக்கு வாய்த்த அடிமைக்கு தான் குடுக்கனும்.. இப்ப அந்த பையன்கூட பேஸ்புக் பிரெண்டா இருக்காரு.. ப்ரெண்ட்ஸ் சேக்கிறாராம்... அதுக்கு அப்புறம் வழக்கம் போல கதையில் அவரே ஜெகனாவும் ஜெகனை காதலிக்கிற பொண்ணா நானாவும் மாறிட்டேன்..
முழுக்கதையைப் படிக்க கீழே உள்ள இணைப்பில் சென்று படிக்கவும்..
0 Comments