Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

Novels

1.நானின்றி நீயாக

       இது தான் முதல் கதை. ஒரு சுட்டித்தனமான பொண்ணு சில காரணங்களுக்காக பிடிவாதம் பண்ணி வீட்டை விட்டு வந்துடுறா... அப்புறம் அவளுக்கான வாழ்க்கை அமையுது.. அதோட சேர்ந்து பிரச்சினையும் அமையுது... அந்த பிரச்சினையை அவளோட காதல் மற்றும் நட்போடு சேர்ந்து கையாளுறா??? அப்படிங்கிறது தான் கதை.. சொதப்பிட்டேன்னு நினைச்சிருந்தேன். சிலபேர் இந்த கதையை படிச்சிட்டு என்னை பாலோ பண்ணுறீங்கன்னு சொன்னதும் ஆனந்த கண்ணீரா போயிடுச்சு. கதை இல்லை என்னோட ஒரு நாள் கனவு. 2)சுவாசமாய் நீ..

      இதுவும் முதல் கதை தான். சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிற பொண்ணு தன்னோடு சொந்த காரணங்களுக்காக திருமணம் பண்ணிக்க தயங்குறா. அவளை உருகி உருகி காதலிச்சு அவளையும் காதலிக்க வைக்குற கணவன். 3) உனக்கே உயிரானேன்...

       இது தான் என்னோட வளர்ச்சிக்கு முதல் படி. குடும்ப காதல் கதை. தாய் தந்தையரற்ற நிலையில் தவிக்கிற பொண்ணை காயப்படுத்துன ஒருத்தன் காயத்தை விட அதிகமா எப்படி காதல் பண்றான். இதுலயே பெருங்கூட்டம் கூடியிருக்கும்...அதுக்குள்ள வீட்ல நடக்குற அம்மா பாசம், அண்ணன் தங்கை அக்கறை, நண்பனின் காமெடியும் செண்டிமெண்ட்டும் கலந்த ஒரு கதை. இதுல இல்லாத ஒரு சுவையே இல்லன்னு சொல்லாம். அப்படின்னு நானே சொல்லிப்பேன். உனக்கே உயிரானேன் நான் எழுதிய முதல் கதை. 4)உயிரே ஒரு வார்த்தை சொல்லடா...

          அனைத்திலேயும் வெற்றியே பெறணும்னு நினைக்குற பொண்ணு இயல்பான வாழ்க்கை வாழுற ஒருத்தனை காதல் பண்ணி கட்டாயப்படுத்தி கல்யாணமும் பண்றா. அவனோ அவளை கொல்லணும்னு துடிக்கிறான். அவனுக்காக அவள் இறந்து போனாளா?? இல்லை அவளுக்காக அவளோட காதலை அடைஞ்சாளா??ன்றது தான் கதை. இது ஒரு ஆண்டி ஹீரோயின் காதல் கதை. 5)சிவாவின் காதல்...         உனக்கே உயிரானேன் கதையில் வர்ற காமெடி ஹீரோ சிவாக்கான காதல் கதை. இந்த கதையில் எந்த ஒரு திருப்பங்களோ இல்லை குழப்பங்களோ கிடையாது. சிவாவின் காமெடியும் காதலுமே நிறைந்த சுவாரஸ்யமான கதை. இந்த கதை எழுதுனதுக்காகவே ஒரு கூட்டம் பாராட்டிக்கிட்டு இருக்கிறாங்க... 6) தாலாட்டும் காற்றே வா...

      என்ன சொல்ல?? என்னத்த சொல்ல??? இது ஒரு கல்லூரி காதல் கதை. பல்வேறு திருப்பங்கள் கொண்டு ஒரு கல்லூரிக்குள் நடக்கும் ஐந்து ஜோடிகளுகளுக்கான காதல் களம். கல்லூரியில் வாழ்ந்ததிற்கான உணர்வினை கொடுக்கும் கதை. 7) சிறு எறும்பாய் நான் ஒரு துளி தேனாய் நீ..

      முன்ஜென்ம காதல் கதை. ஹீரோயின் பக்கம் இருந்து தொடங்காமல் வில்லியின் பக்கம் இருந்து வில்லியை நியாயப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது. ஜென்ம ஜெனமமாய் தொடரும் காதலின் ஏக்கம் இந்த ஜென்மத்தில் நிவர்த்தியானதா??? இல்லை மீண்டும் தொடங்கியதா??? கதையை படியுங்கள்.
8. கூர்முனை போர்
        குறுநாவல். ஏழு பேரும் ஒரே மாதிரியான முறையில் கொலையுற்று கிடக்க, அதனை ஆராய வரும் சிபிஜ குழு. உண்மையை கண்டறிந்தார்களா?? இல்லை திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததா?? கொலையா?? தற்கொலையா??? கொலை என்றால் கொலையாளி யார்??? தற்கொலை என்றால் காரணம் என்ன??? மேலும் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட மர்மக்கதை. 9). இனி எல்லாம் வசந்தமே

        வாழ்வில் சாதிக்க துடிக்கும் மூன்று பெண்களின் வாழ்க்கை முறை. வெவ்வேறான குணங்கள் கொண்ட ஹீரோயின்கள் ஆசை கொண்டதை சாதித்தார்களா?? அவர்களுக்கான பொருத்தமான காதல் கிடைத்ததா?? முடிவு என்ன??? 10)மர்மராணி
        திடீரென இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அதை விசாரிக்க இரண்டு காவல் அதிகாரிகள் வருகை தர, அவர்களது சொந்த பிரச்சினைகள் குறுக்கிட, அதை கடந்து வழக்குகளில் மூழ்க, தோண்ட தோண்ட குறையாத தங்கம் போல மர்மங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. மர்மத்திற்கான காரணம் என்ன??? கொலைகள் எவ்வாறு நடந்தது??? விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்ட மர்மக்கதை. 11) நிழலுக்குள் நீராய்.

             கனவு உலகத்தில் காதல் செய்பவனும் கடந்த காலத்தை கண்டு கவலை கொள்பவளும். பிடிவாதத்தை விடாத பெண்ணின் ஒருதலை காதலும் ஒருதலையாய் நடத்தப்படும் பிரச்சினைகளும். அவள் காதல் வெளிப்பட்டதா?? இல்லை தோல்வி அடைந்ததா?? நகைச்சுவையும் அடிதடிகளும் கொண்ட காதல் கதை.

            தமிழகத்தின் நம்பர் ஒன் ஆர்.ஜேயாக கொடிகட்டிப் பறக்கும் ஷிவானியின் வாழ்வில் ஏற்கனவே ஒரு காதல் வந்து, இருந்து, அப்புறம் இல்லாமலே சென்றுவிடுகிறது. இந்நிலையில் அவள் வாழ்வில் இருவர் குறுக்கிடுகின்றனர். ஒருவன் அவளின் கல்லூரி சீனியர், மற்றொருவன் அவளது சகோதரனின் தோழன். இருவரில் யாரை கரம்பிடிக்கிறாள் என்பதே கதை..


            தான் ஆறு ஆண்டுகளாக காதலித்து மணந்த அர்ஜுனை திருமணமாகி ஆறே நாட்களில் பிரிய நினைக்கிறாள் பிரியா. அதற்கான காரணம் என்ன?? அர்ஜுன் - பிரியாவிற்கு விவாகரத்து கிடைத்ததா?? அவர்களின் எதிர்காலம் என்ன?? இந்த கேள்விகளுக்கான பதில் இந்தக் கதையில்.. 

            காலம் காலமாக புறக்கணிக்கப்பட்ட காதலின் வலியும், வலிமையும். நிகழ்காலத்தில் வாழும் ரக்ஷதீரன் பள்ளி முடிந்து வருகையில் சிரசூர் தேசத்து இளவரசி லௌசியை சந்திக்கிறான். காலப்போக்கில் இவனும் அவளது தேசத்தில் சென்று வசிக்கும் சூழல் ஏற்பட, அங்கே நிகழ்வது என்ன?? அவளைக் கரம்பிடித்து காதல் நாயகன் ஆனானா?? காதல் கசக்குமா?? என்பன விறுவிறுப்பாக.



            கதையைப் பற்றி நான் கூறுவதை விட நீங்களே படித்து தெரிந்துகொண்டால் நலமாக இருக்கும். எனது சுயசரிதையில் நான் சந்தித்த சிலரை உருவகப்படுத்தி வித்தியாசமாக கதையைப் புனைந்துள்ளேன். 


            மர்மராணி 2.0. ஆனால் மர்மராணியின் தொடர்ச்சி இல்லை.. இது அப்பாவி பெண்களை கொடூரமான முறையில் கொன்று தீர்க்கும் ஆக்ரோஷமான அமானுஷ்ய சக்தி. காரணங்கள் வெளிவருமா??? தொடர்ந்து வரும் திகில் தொடர். (இனி தான் தொடங்கவே போகிறேன்..) 17) காற்றில் எந்தன் கீதம்



இளவேனிற் தீஞ்சுடரே இரண்டாம் பாகம். இன்றைக்கு மீடியா விஷயங்களாக பெரிதாக பேசப்படுவனவற்றின் வேறொரு கோணம் மற்றும் ஷிவானியின் அதிரடி ஆட்டம்...



          காதலும் கசந்து போகும் இரண்டாம் பாகம்...



          ரொம்பவே கலாட்டாவான காதல் கதை.. மூன்று சகோதரிகளும் ஒரே வீட்டில் மருமகள் ஆனால் என்னவாகும் என்பதே கதையின் கரு... வெகு விரைவில் முடிவை நோக்கி... 




Post a Comment

0 Comments