Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

குட்டி டீசர்...

 குட்டி டீசர்...



“சது... நான் உன்கிட்டே ஒண்ணு கேட்பேன்... தப்பா எடுத்துக்காம உண்மையை சொல்லுவியா?” என பீடிகை போட்ட தன் சகோதரனை விசித்திரமாகப் பார்த்தான் சாத்விக்.

“டேய்... நமக்குள்ள என்ன ஃபார்மாலிட்டீஸ்? ஸீன் போடாம சொல்லுடா...” என அவன் ரித்விக்கின் தோளில் தட்ட, “வந்து... இது ஒரு கன் ஃபர்மேஷனுக்குத்தான்...” என இழுத்தான்.

“ஐயா ராசா... கொஞ்சம் சீக்கிரமா சொல்றியா? ஒரு முக்கியமான வேலை இருக்குது...” என ஆலாகப் பறந்தான் அஞ்சனாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அவசரத்தில்.

“அது... உனக்கு அஞ்சனா மேல எந்த தனிப்பட்ட அபிப்பிராயமும் இல்லைதானே!” என்னும் ரித்துவின் கேள்வியில் செய்வதறியாது திகைத்தான் சாத்விக்.

“அதான் அப்பவே சொன்னனேடா... பேசிக்கறதே இல்லைன்னு...” என அவன் மழுப்ப, “அப்போ சரி...” என்ற ரித்விக், “அது ஒண்ணுமில்லைடா.. அஞ்சனாவை கட்டிக்க சம்மதமான்னு அம்மா கேட்டாங்க... எனக்கு இதுவரைக்கும் அவமேல அப்படியொரு தாட் வந்ததில்லை.. அம்மா கேட்டதுக்கு அப்புறம் யோசிச்சுப் பார்த்தா ‘ஒய் நாட்?’ன்னு தோணுச்சு... அஞ்சனா நல்ல பொண்ணு, ரொம்பவே பொறுப்பானவ, அதைவிட நம்ம வீட்டுல எல்லாருக்கும் அவளை பிடிக்கும்.. அதான் சரின்னு சொல்லிடலாமான்னு யோசிக்கறேன்...” என ரித்விக் முடிக்கையில் முழுவதுமாக முடிந்திருந்தான் அவனது சகோதரன்.

Post a Comment

1 Comments

  1. Achacho...indha sadhu marachu marachu ipdi Inga vandhu nikkudhe .... Epdiyum vikky oda support iruku... Anjana kochukama irundha sari

    ReplyDelete