ஷ்ரத்தாவில் விழுந்தேன்... சாராவில் எழுந்தேன்... - டீசர்

 ஷ்ரத்தாவில் விழுந்தேன்... சாராவில் எழுந்தேன்... - டீசர் 



        அலுவலகத்திற்கு தயாரானவன் தனது மகிழுந்தை உயிர்ப்பித்து, கூடவே பாடலையும் ஒலிக்கவிட்டான். “என் இனிய தனிமையே..” என. சித்ஸ்ரீராமின் குரலில் லயித்தவாறே வண்டியைச் செலுத்தியவன்; அடுத்ததாக ஒலிக்கத் தொடங்கிய, “தும் தோ.. தோக்கே பாஸு ஹோ...” பாடலின் ஆரம்ப இசை கேட்கும்முன்னரே, எரிச்சலுடன் மாற்றிவிட்டான். அது அவளை நினைவுபடுத்தும் பாடல் என்பதால்.

கண்களை மூடி, தன்னிலையை சமன்படுத்திக் கொண்டவன்; அடுத்த பாடலை மாற்றி, ஸ்ரேயா கோஷலின்  காதல் கசிந்துருகும் காந்தக்குரலுக்குள் தன்னைத் தொலைக்க முற்பட, அவளின் குரலையும் ஓரங்கட்டச் செய்துவிடும் அதீத இனிமை தேங்கிய குரலில், “ஒய் ஆர் யூ டிஸ்டர்பிங் மீ?? ஐ அல்ரெடி டோல்ட் யூ தட் ஐ ஆம் நாட் இண்டரெஸ்டட்... தென் ஒய்??” என நாசி சிவக்க கத்திக்கொண்டிருந்தாள் அந்தக் கார்குழல் காரிகை.

போக்குவரத்து விளக்கு தற்காலிகமாக சிவப்பில் சிலிர்த்து நிற்க, தானும் சிலிர்த்துக் கொண்டு ஜன்னல்வழியே தெரிந்த காட்சியைப் பார்க்கத் தொடங்கினான் சந்தோஷ்.

வெண்ணைக் கட்டிகளை இரண்டு பந்துகளாக உருட்டி  அதன் நடுவே ப்ளூபெர்ரி பழங்களால் அலங்கரித்தாற் போன்ற அவளிரு கண்களைப் பார்க்கையில் அவை காண்பதற்கென படைக்கப்பட்டவையல்ல கட்டியிழுக்கும் திறத்தவை என கவிவடிக்கத் துணிந்தான் இந்த இன்ட்ரோவெர்ட் இந்திரனாகிய சந்தோஷ்.

இந்த சந்தோஷ் யார்?? எவ்விதம் ஷ்ரத்தாவில் விழுவான்?? எவ்விதம் சாராவில் எழுவான்??? காண்போம் வரும் அத்தியாயங்களில்... 

ஷ்ரத்தாவில் விழுந்தேன்... சாராவில் எழுந்தேன் - ஜனவரி 15ம் தேதி முதல்... 

Reactions

Post a Comment

2 Comments

  1. Ippudi than aarvatha thondi vittudu 10 nal wait panna vaikanum😤.... Enna ellame s ave irukku.. akka ku s mela oru kannoo.... Super deeser.... Waiting for the story...❤️

    ReplyDelete