அத்தியாயம்-1
ஹைஹீல்ஸ்
மார்பிளோடு மத்தளம் வாசித்து கொண்டிருக்க கைகளில் கேலக்சி60ஐ சுழற்றியபடியே
வந்தவள் பயோமெட்ரிக்கில் தன்னுடைய ஐடியை நுழைத்து உள்ளே செல்கையில், மொத்த ஆபீசுமே
பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது..
உயர்த்தி சிறை செய்யப்பட்டிருந்த போனிடெயில் உயிருக்கு
போராடி குதித்து கொண்டிருக்க லாவகமாக சுழலும் வீல்சேரில் அமர்ந்தவள் நேரே
வைக்கப்பட்டிருந்த சிஸ்டத்தை ஆன் செய்ய முற்படுகையில், “ஹனி.. ஜித்தின்
கூப்பிடுறாரு..” என்று விட்டு சென்றான் மானிட்டர் அறையில் வேலை செய்யும் ஜெகன்..
“என்ன??” என்பது போல தோழி ஹரிணியை புருவம் உயர்த்த, “தரியல..” என உதட்டை வளைத்தாள் அவள்.. கண்ணாடி கதவை
திறந்து கொண்டு உள்ளே நுழைகையில் ஏசியின் குளிர் குப்பென அடிக்க, “எக்ஸ்கியூஸ் மீ
ஜித்தின்..” என காண்பித்த இருக்கையில் அமர்ந்தார்..
“சோ..” என ஜித்தின் அவளின் பக்கம் ஒரு செய்திதாளை நீட்ட,
இரண்டு நாட்களுக்கு முன் அவள் எழுதிய ஆர்டிகிள் அது.. உதட்டை கடித்து அவனுடைய
வார்த்தைகளுக்காக காத்திருக்க, “வாட் இஸ் திஸ் ஹனி.. இப்படி இர்ரெஸ்பான்சிபிலா ஒரு
விஷயத்தை எழுதுவீங்களா?? இது எவ்ளோ
சென்சிட்டிவ்வான ப்ராப்ளம்ன்னு தெரியாம விளையாடுறீங்க..” என கூறினார் ஜித்தின்..
“எஸ்.. ஜித்தின் சென்சிட்டிவான ஒரு விஷயத்துல தலையிட
கூடாதுன்னா நாம ஏன் மீடியா ப்ரெஸ்ன்னு இருக்குறோம்.. நாட்டுல நடக்குற விஷயங்களை
மக்களுக்கு கொண்டு போய் சேர்க்குறது தான் நம்ம கடமை..” என கூறி கொண்டிருக்கும்
போதே, “ஸ்டாப்
இட் ஹனி.. இந்த கம்பெனி உங்க கிட்ட இருந்து எக்ஸ்பெக்ட் பண்றது சாரி.. டெபனிஷன்
இல்லை..” என முடித்து விட்டார் கம்பெனிக்கு விசுவாசியான ஜித்தின்.
கைகளை விரித்து கண்களால் “வாட் இஸ் திஸ்..” என கேட்டவள், தீர்க்கமான பெருமூச்சை
இழுத்து விட்டு, “சாரி.. ஜித்தின்.. இந்த இஷியூல என்னோட மிஸ்டேக்ஸ் எதுவும் இல்லை..
சோ இ டோன்ட் அக்செப்ட் இட்..” என மறுத்தாள் ஹனி..
ஜித்தினுக்கு பேச வாய்ப்பே அளிக்காமல், “ஓகே.. ஜித்தின்..”
என ஐடி கார்டை கழற்றி டேபிளில் வைத்து, “எனக்கு எப்பவுமே வொர்க் ப்ரீடம் வேணும்..
இதை பேசணும்.. இதை பேச கூடாதுன்னு ஆர்டரை பாலோ பண்ற நார்மல் பீப்பிளா இருக்க
விரும்பல..” என கூற, “ஹனி..
ஹையர் அபீசியல்ஸ் உன்மேல கோபமா இருக்குறாங்க.. உன்னோட இந்த ஆர்ட்டிகிள் சோஷியல்
மீடியால நெகட்டிவ் வைப்ரேஷன் கொடுத்துருக்குது.. நீ சாரி கேக்குற வரை வேற எந்த
நியூஸ் சானலும் அப்பாயின்ட் பண்ண மாட்டாங்க..” என மறைமுகமாக மிரட்டலை விடுத்தார்..
“ஜித்தின்.. நான் நெக்ஸ்ட் நியூஸ் சானல் போறேன்னு யார்
சொன்னா?? இந்த சொசைட்டில நடக்குற கிரைம்ஸ் அண்ட் ரியாலிட்டியை மக்களுக்கு கொண்டு
போக மெனி ஆப்ஷன்ஸ் இருக்குது.. கருத்து சுதந்திரம் இல்லாத இன்னொரு இடத்துல போய்
மாட்டிக்க விரும்பல..” என நாகரீகமாக வேலையை விட்டாள் ஹனி..
வீட்டிற்கு வந்து உடைமாற்றி அமர்ந்தவளின் மூளைக்குள்
முகபுத்தகத்தில் நடைபெறும் வாக்குவாதங்களே ஓடிகொண்டிருந்தது.. “மக்கள் இவ்ளோ
முட்டாளா இருப்பாங்களா?? சரியானது கண்ணு முன்னாடி இருந்தும் தப்பான ஒரு விஷயத்தை
சப்போர்ட் பண்ணி தலை மேல வச்சு கொண்டாடுறாங்க..” என சலிப்பாக அமர்ந்தவளை போன்
சிணுங்கி கலைத்தது..
“சொல்லுங்க சந்திரன்..”
“என்ன ஹனி.. வேலையை விட்டுட்டியா?? ஏன்மா??”
“ப்பா.. நினைச்சதை செய்ய முடியாம கையை கட்டி போட்ட
மாதிரி மூச்சு முட்டுது.. சோ..” என இழுக்க, மகளின் முடிவை என்றும் ஆதரிக்கும் சந்திரன், “சரி
ம்மா.. சாப்பிட்டியா??” என இயல்பான உரையாடலை கொண்டு வந்தார்..
“நான் சாப்பிட்டேன்ம்மா..” என்றவரிடம் அதற்கு மேல் என்ன
பேசுவதென தெரியாமல் விழிக்க, ஓய்வளிக்கும் விதமாக அவரும் அதிகமாக
பேசிக்கொள்ளவில்லை..
காப்பியை கலக்கி கொண்டு புக் செல்பில் சாய்ந்து அமர்ந்து
கொண்டவள் மேலே பார்த்து ஆராய துவங்கினாள்.. டெய்லி அப்டேட்ஸ் செக்ஷனை கவனித்து
கொண்டிருந்தவள் ஹரிணியின் விடுப்பு காரணமாக ஆர்ட்டிகிளின் அருகே சென்றவள்
சமீபத்தில் நடந்து முடிந்த சம்பவம் ஒன்றிற்கான தீர்வை எழுதியதால் வந்த விளைவு தான்
இது..
யோசனையிலேயே மூழ்கி போனவளுக்கு மூளையில் ஒரு சிந்தனை
துளிர்த்தது.. அந்த சிந்தனைக்கு உயிர் கொடுக்கும் விதமாக மடிகணினியில் அமர்ந்தவள்
தேடலை தொடங்க, சில மணி நேரங்களுக்கு பிறகு தீர்வும் கிடைத்தது சாமபுரம் என்ற இணைய
வரைபடத்தில்..
அதே சாமபுரத்தில்,
அமாவாசை
கும்மிருட்டில் குதித்தோடும் கொலுசு ஓசையினை மிஞ்சிய மூச்சிரைப்போடு கண்மண்
தெரியாத பாதையில் வெறுங்கால்களோடு இறுகிய கரங்களுக்குள் உயிரையொத்த நாணயங்கள்
பதித்த தாலி ஒன்றையும் நெஞ்சில் கண்மூடித்தனமான நம்பிக்கையும் கொண்டு ஓடி
கொண்டிருந்தாள் அந்த காட்டினுள்..
பின்னாலேயே
தீப்பந்தங்களுடன் ஆண் பெண் வித்தியாசங்கள் மறந்த மக்கள் கூட்டம் கூச்சலிட்டு
கொண்டே துரத்தி வர,
பாதைகளில் பாதங்கள் பதியாமல் ஓட்டம் எடுத்து கொண்டிருந்தாள்.. கிளைகிளையாக பிரிந்த
பாதையை பொருட்படுத்தாமல் ஏதோவொன்றில் பயணித்தவள் அவ்வபோது பின்னால் திரும்பி அந்த
கூட்டத்தினை காண மறக்கவில்லை..
துருப்பிடித்த
கேட்டினை திறந்து கொண்டு உள்ளே செல்ல, துரத்தி வந்த கூட்டம் மெல்ல பின்வாங்க துவங்கியது.. தெளிவாக தான்
வந்து சேர்ந்த இடம் இன்னதென்று அறிய முயன்றவளின் இதயம் தனது துடிப்பில் வேகமெடுக்க
நின்ற இடமோ சுடுகாடு..
இரும்புவேலிக்கு
வெளியே நின்ற மக்கள் கத்தி கூச்சலிடுவதோடு வெளியே வருமாறு எச்சரிக்க, மனிதர்களிடம்
மாண்டுபோவதற்கு பதில் பேய்களிடம் உயிர் பிரியலாம் என்ற முடிவிற்கு வந்தது போல
கல்லறையில் கிடந்த வாடிய மாலைகளை தூக்கி வெளியே எரிந்து “வாங்க.. வந்து பிடிங்க..”
கைதட்டி சிரிக்க துவங்கினாள்..
சிலர்
பேய் பிடித்து விட்டதென பின்வாங்க, மீதமிருப்போர் நடிப்பதாக சீற்றத்தை
அதிகமாக்கினர்.. கூட்டத்தில் நின்ற தாயவள், “ஏ.. இவளே.. வெளிய வா.. அங்கன நிக்காத.. படிச்ச பிள்ள நீயே தப்பு
பண்ணுனா பின்னாடி வளர்ந்து வர்ற பிள்ளைங்களுக்கு யார் நல்ல புத்தி சொல்லி
குடுக்குறது..” என அழைத்தும் பயனில்லை..
அவ்விடம்
விட்டு ஒரு அடி நகர்ந்தாலும் அந்த கூட்டத்தில் அகப்பட்டு அடிவாங்கியே
செத்துவிடுவோம் என்ற உண்மை புரிந்தவளோ, “நீங்க போங்க ம்மா.. நான் வரமாட்டேன்.. நான் எடுத்த முடிவு சரின்னு
ஒருநாள் புரியும்..” என்றவள் ஒரு கல்லறைக்கு பின்னே அமர்ந்து கொண்டாள்..
கூட்டத்தில்
ஒருவருக்கொருவர் வாய்சண்டையில் ஈடுபட அவ்விடமே கூச்சல் காடாகியது.. அப்பொழுது, “ஏ.. நிறுத்துங்க..” என்ற கணீர்
குரல் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்த, கூட்டமே அமைதியாக வழிவிட்டது.. அந்த குரலை கேட்டதும்
புதுதெம்பு பிறந்தது போல எழுந்தவளை,
“அம்மாடி பூஜா.. படிச்ச பொண்ணு இப்படி பண்ணலாமா?? வா.. நான் பேசுறேன்..” என அழைத்தார்
சோமசுந்தரம்..
“அப்பா..
நான் வெளிய வந்தா எல்லாரும் என்னை அடிச்சே கொன்னுருவாங்க.. எனக்கு பயமா இருக்கு..”
என்றவளின் நா தளுதளுக்க, “அப்பா இருக்குறேன்மா.. என்னை மீறி இவனுங்க என்ன
பண்ணிருவானுங்கன்னு பார்க்கலாம்.. என்னடா.. என் பொண்ணையே அடிப்பீங்களோ??” என
கூட்டத்தை பார்த்து கேட்க அனைத்து தலைகளும் கவிழ்ந்து கொண்டது..
அதன்பின்னே
பூனை போல மெல்ல பதுங்கி அவள் வெளியில் வந்த சமயம், “உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்டி...” என
கூந்தலை கொத்தாக பற்றியிருந்தான் அவளின் மாமன் பத்ரி. “பத்ரி..” என சோமசுந்தரம்
உறும, விடுவித்தான் அவளை..
“நாம
கும்பிடுற கடவுள் பொண்ணு தான்டா.. கோயில்ல மட்டுமில்லை.. வீட்டு பொண்ணுங்களையும்
கடவுளா தான் பார்க்கணும்..” என கடிந்து கொண்ட சுந்தரம், “உன் இஷ்டப்படியே
செஞ்சிடலாம் பூஜா..” என அரவணைப்பாக மலை கோவிலிற்கு அழைத்து சென்றார்..
சாமபுரத்தின்
ப்ளூபிரிண்ட் திரையில் ஓடிகொண்டிருக்க, “சார் பிரதாப் சிங்..” என ஜீவா கூற, உள்ளே நுழைந்தான் அவன் ஆறடியில்
அதிரடியாக.. “சார்..” என சல்யூட் வைத்து கைகுலுக்கி கொள்ள, “ப்ளீஸ் பீ சீட்டட்.. பிரதாப்..” என இருக்கையை
காண்பித்தான்..
“கோமதி
நகர்ல உங்களோட கேஸ் ஹிஸ்டரி பார்த்து தான் இந்த கேஸை உங்க கிட்ட ஒப்படைக்குறேன்..
உங்களுக்கு தேவைப்பட்டா லோக்கல் போலீஸ் ஹெல்ப் பண்ணுவாங்க... கேஸ் டீடெயில்ஸ்
திவ்யா சொல்லுவாங்க..” என கூறிவிட்டு நகர்ந்தார் கமிஷனர்..
“ஹலோ
சார்.. திவ்யா..” என வந்து சேர்ந்திட, “பிரதாப் சிங்..” என கை குலுக்கி கொண்டான்.. “ஏழு வருஷத்துக்கு முன்ன
பாபுன்னு ஒரு ரைட்டர் சாமபுரத்துல காணாம போயிருக்குறாரு.. ரெண்டு வருஷத்துக்கு
முன்ன அவங்க அப்பா கொடுத்த மிஸ்ஸிங் கம்ப்ளைன்ட் கொடுத்ததுனால தேடி பார்த்தப்போ
அங்க இருக்குற மக்கள் என்ன சொல்றாங்கன்னா வந்த ஆறு மாசத்துலேயே அங்க இருந்து
ஓடிபோயிட்டதா சொல்றாங்க..” என கூற,
“எதுக்காக போனாரு??” என
கேட்டான் பிரதாப்..
“சார்..
பேசிக்கா அவன் ஒரு ரைட்டர்.. ஊர் ஊரா போய் வித்தியாசமான கதைகள் எழுதுறது அவரோட
ஹாபிட்ஸ்ன்னு பேரெண்ட்ஸ் சொல்றாங்க..” என்கவும், “ஓகே.. கெஸ்ஸிங் ஏதாவது??” என வினவினான் பிரதாப்.. “எஸ் சார்.. சாமபுரம்
பொறுத்தவரை அது ஒரு கலவரபூமி.. இருக்குற பத்து பதினைஞ்சு தெருவுல ஐம்பதுக்கும் மேல
கலவரம் நடந்துருக்குது.. என்ன சொல்றாங்கன்னா ஒருவேளை பாபு அங்க ஒரு பொண்ணை
காதலிச்சதுனால ஊர் மக்கள் சேர்ந்து கொலை பண்ணிட்டு பொய் சொல்றாங்கன்னு..” என்ற
திவ்யா அவனை நோக்க, “யூகங்கள் வச்சிட்டு எதுவும் சொல்ல முடியாது.. நாம நேர்ல போய்
பார்க்கலாம்...” என்று ஒரு குழுவுடன் அவ்வூருக்கு பயணமாகினர்..
“குட்
ஆப்டர்நூன் சார்..” என உள்ளே நுழைந்த ஹனியை அமருமாறு பணிக்க, “தேங்க்ஸ் சார்..” என அமர்ந்தவளை “சொல்லுங்க
என்ன விஷயம்??” என
கேட்டார் கமிஷனர்..
“சார்..
நான் ஹனி.. ட்ரூத் 360டிக்ரீ சானல்ல ரீசென்ட்டா நடந்த கான்ட்ரோவஷியல் டாபிக்
எழுதுன ரைட்டர்..” என தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள, “நியூஸ் பேப்பர்ல பார்த்தேன்..
ஏதாவது ஹெல்ப் வேணுமா?? எனி
த்ரட்டன் கால்ஸ்??” என முன்னேற்பாடாக கேட்டார் கமிஷனர்..
“நோ
சார்..” என அதிர்ந்தவள்,
“என்னோட ஜாபை நான் ரிசைன் பண்ணிட்டேன்.. சோ ஒரு புக் எழுதலாம்னு இருக்குறேன்..
கல்சுரல் பேசிட்.. நெட்ல செர்ச் பண்ணி பார்க்கும் போது எனக்கு இந்த வில்லேஜ்
கிடைச்சிது.. என்ன கேக்க வர்றேன்னா இங்க போகுறதுக்கு அபீஷியலா பெர்மிஷன் வேணும்...” என்றாள் ஹனி..
“லுக்..
நீங்க சூஸ் பண்ணியிருக்குறது ஒரு கலவரபூமி.. இன்னும் கொஞ்ச நாள்ல அந்த ஊர்ல வீடு
மட்டும் தான் இருக்கும்.. மக்கள் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டு செத்து
போயிடுவாங்க.. ப்ளீஸ்.. வேற ஏதாவது சிட்டியா இருந்தா சொல்லுங்க.. நான் பெர்மிஷன்
குடுக்குறேன்..” என கறாராக மறுத்து விட, “சார்.. ப்ளீஸ்.. இந்த மாதிரியான வில்லேஜ்ல நாம பார்க்காத நம்ம
அறிவுக்கு எட்டாத பழக்கவழக்கங்கள் நிறைய இருக்குது.. நான் செர்ச் பண்ணும் போது
நிறைய கிராமங்கள் தன்னோட இயல்பை விட்டுட்டு நகரமயமாக்குதல்ல கலாச்சாரங்களை மிஸ்
பண்ணிட்டாங்க.. கடைசியா இருக்குறது இந்த ஊர் தான் சார்.. ப்ளீஸ்.. வேணும்னா
போயிட்டு வர்ற என்னோட பொறுப்பை நானே ஏத்துக்குறேன்..” என்றவள் அவ்வளவு
சீக்கிரத்தில் பின்வாங்கமாட்டாள் என புரிந்துவிட்டது..
“ஓகே...
நான் பெர்மிஷன் தர்றேன்.. பட் ஒன் கண்டிஷன்.. சப்போஸ் பேப்பர் பேக்கா வந்தா
பர்ஸ்ட் காப்பி எனக்கு தான்..” என்ற கமிஷனர் அவளின் ஆர்ட்டிக்கிளில் தெரிந்த
தைரியத்திற்கு விசிறியாகி போயிருந்தார்..
சாமபுரத்தில்
சந்திப்போம்...
1 Comments
Heyyyy sema starting mini sis.... Unka matha story mathiri intha story laum paraparappuku panjam irukathunu nenaikiren... Prathap honey ppoja valam next episode la pakka aarvama iruken... Nalla write panni contest win pannunka .. all the best sakothariiii❤️❤️❤️❤️❤️👍👍👍👍😘😘😘😘😘
ReplyDelete