Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

பூக்காதோ உந்தன் மௌனம்-1

 


 பூக்காதோ உந்தன் மௌனம்

அலைந்து திரிந்து ஓய்ந்ததில் சோர்வாக வந்து சேர்ந்த மங்கையின் கண்கள் சொருகிட, அந்த அப்பார்த்மேன்ட்டின் கதவினை திறந்தாள் அவள்.. கதவு கிரீச்சென திறந்துகொள்ள, ஹாலே அலங்கோலமாகி கிடந்தது..

தான் இல்லாத காலத்தில் எவரையேனும் தேசாய் தங்க வைத்திருக்கலாம் என்று தானாகவே யூகித்து கொண்டவள் அந்த சோர்விலும் மெல்ல சுத்தம் செய்ய தொடங்கினாள்..

ஹாலின் ஒருபகுதியை சுத்தம் செய்துவிட்டு கிச்சன் பக்கம் சென்றால் அவள் செல்லும் பொழுது சமைத்த ரவை துணுக்குகள் இன்னும் அப்படியே தான் கிடந்தது.. ஒருவேளை ஆணாக இருக்கக்கூடும் என்றவள் கூந்தலை அள்ளி முனிந்து தூய்மைப்படுத்தி சமைக்க தொடங்கினாள்..

அலுவலகத்திற்கு கிளம்பியவள் காலை உணவிற்காக எதிர்வீட்டு கதவை நோக்க, “சாந்தினி பாப்பா.. சார் காலையிலேயே கிளம்பி போயிட்டாங்க.. நீங்க சாப்டுட்டு கிளம்புவீங்களாம்..” என்றார் அந்நேரமாய் தண்ணீர் கனெக்ஷனை மாற்ற வந்த செக்கியூரிட்டி..

“ம்ம்..” என தலையசைத்தவளாய் கதவை சாத்திக்கொண்டவள் பெயருக்காக இரண்டு வாயை விழுங்கி கொண்டாள்.. ஷாலையும் ஐடியையும் எடுத்துக்கொண்டு கண்ணாடி முன்னே வந்து நின்றவள் அடித்து ஐந்து நொடியில் கதவை அடைத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பிவிட்டாள்..

அது ஒரு கேமிங் ஆப்கள் உருவாக்கும் கம்பெனி.. ஒரே மனிதனாய் சாம்ராஜ்ஜியத்தை கட்டிய தேசாய் தனக்கு ஒரு துணையாக சாந்தினியை தத்தெடுத்துக்கொண்டார்.. அலுவலகத்தினுள் சிறுபுன்னகையோடு நுழைந்து கொண்டவள் தன்னுடைய வொர்க்ஸ்டேஷனில் நல்ல புள்ளையாக அமர்ந்த பின்னரே நினைவுக்கு வருகிறது அவருக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வந்தது..

வேலைகளுக்கு நடுவே எழுந்து செல்வது அவ்வளவு நல்ல பழக்கம் இல்லையென யோசித்தவளாக அன்றைய டிசைன்களை வேகவேகமாக முடித்தாள்.. சப்மிட் செய்ய செல்வது போல தேசாயின் அறைக்குள் நுழைந்தவள், “சார்.. ப்ரேக்பாஸ்ட் எடுத்துட்டு வந்தேன்..” என நீட்டவும், “நீ ஏன் சிரமப்படுற சாந்தினி.. நான் இங்கேயே சாப்ட்டுப்பேனே..” என கேட்டார் தேசாய்..

“கேண்டீன் பூட் உங்களுக்கு ஒத்துக்காது சார்..” என நினைவுப்படுத்தியவள், “எனக்கு சிரமம் எல்லாம் இல்லை.. எனக்கு யாருமே இல்லாத நேரத்துல நீங்க மட்டும் தான் இருந்தீங்க சார்..” என்றாள் சாந்தினி.. இதே வார்த்தைகளை கூறக்கூடாது என தடைவிதித்திருந்தும் நாளுக்கு மூன்று முறையாவது கூறிவிடுவாள்..

“உண்மை என்னன்னா நம்ம ரெண்டு பேருக்குமே யாரும் கிடையாது.. நாம ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்குறோம்.. நீ தேங்க்ஸ் சொன்னா நானும் தேங்க்ஸ் சொல்ல வேண்டி வரும்..” என வார்த்தைகளுக்கு முற்றுபுள்ளி வைத்த தேசாய், “அப்பார்ட்மென்ட் கலைஞ்சு கிடந்ததா??” என விசாரித்தார்..

“ஆமா சார்..” என ஆமோதித்தவளிடம் “ஒரு பேயிங் கெஸ்ட் தங்கியிருந்தாங்க..” என தகவல் கூற கேட்டுக்கொண்டாள்.. “அப்புறம் உன்னோட ஆன்சைட் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் எப்படி போச்சுது??” என நலன் விசாரிக்க, அங்கு நடந்தவைகளை சுவாரஸ்யமாக விவரித்து கொண்டிருந்தவளை ஆத்மார்த்தமாய் நோக்கினார் தேசாய்..

அதன் பின்னே தன் வொர்க் ஸ்டேஷனில் அமர்ந்தவளுக்கோ சற்று சரியான சூழல் கிட்டாமல் சங்கோஜமாக உணர, பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்தவன் இவளையே வெறித்திருந்தான்..

“ஏண்டா பாக்குற??” என்று கேட்டுவிட மனம் துடித்தாலும் வாயால் கேட்டுவிட மாட்டாள்.. அனாவசியமாய் மற்றவர்களிடம் பேசுவதை கூட அத்தியாவசியமில்லை என்று நினைப்பவள் தான் சாந்தினி..

வீடு விட்டால் அலுவலகம்.. அலுவலகத்தில் தேசாய்.. இதை தவிர பெரிதான உலகம் ஒன்றுமில்லை.. இதில் எதிர்பாலினத்தவரிடம் எதிர்க்க உட்கார்ந்து பேசுவது என்பது அரிதிலும் அரிது.. அப்படியே சூழ்நிலை அமைந்தாலும் அவளின் விரல்கள் தேடுவது தேசாயின் எண்களை தான்..

“ச்சே..” என நொந்து கொண்டவள் நெற்றியை நீவிக்கொண்டே திரும்ப டேபிளின் பக்கவாட்டில் ஏதோ தென்பட்டது.. சட்டென எடுத்து பார்க்க, ‘என்’ என்ற ஆங்கில எழுத்தில் சுட்டியோடு இணைந்த செயின் அது.. இது அந்த நந்தனின் வேலையாக இருக்கக்கூடும் என நினைத்தவளாக பட்டென குப்பைத்தொட்டியில் வீசினாள்..

அலுவலகத்திற்கு டிப்டாப்பாக கிளம்பி வந்த நந்தினியிடம், “கரணை எங்க??” என விளித்தார் ராகவி.. “என்கிட்டே கேக்காதீங்க மாமியாரே,, வேணும்னா வருணை போய் பார்க்க சொல்லுங்க..” என்று திருப்பி கொண்டவளை பாவமாக பார்த்தார் அவர்..

தொடர்ந்த நாட்களாகவே இது தான் பிரச்சனை.. சிறுவயதில் கரணிற்கும் வருணிற்கும் மல்லு கட்டிய ராகவி இப்பொழுது கரணிற்கும் நந்தினிக்கும் நடுவில் மாட்டிக்கொள்கிறார்.. வருணை அர்த்தமாய் நோக்கிய ராகவியிடம், “நேத்து டெண்டர் விஷயம் தான்..” என்றான் அவன்..

இருவரையும் எண்ணி தலையிலடித்து கொண்ட ராகவி கரணை தேடி செல்ல, “ஹினி.. கரண் அண்ணா பத்தி தெரிஞ்சும் ஏன் இவ்ளோ அடமென்ட்டா இருக்குற.. விட்டுடலாமே.. ஒரு டெண்டருக்காக இப்படி சண்டை போட்டுப்பீங்களா??” என நல்ல பிள்ளையாக அறிவுரையை தொடங்கினான் வருண்..

“ஒ.. ஹோய் வருண்.. இது டெண்டருக்கு இல்லை.. எங்க ரூம் டேபிள் லைட்டை உடைச்சிட்டாரு உங்க னொண்ணா.. கோபம் வராதா??” என்ற நந்தினியை இப்படியே சுவற்றில் அடித்து விடலாமா என்றிருந்தது அவனுக்கு..

வந்தது தான் வந்தாள் அலுவலகத்திற்கு.. ஒரு வேலையையும் செய்வதில்லை.. கரணும் செய்ய விடுவதில்லை.. இடைவேளை கிடைத்துவிட்டால் போதும் உப்பு சப்பில்லாத விஷயங்களை காரணமாக கொண்டு இருவரும் பேச்சுவார்த்தையை தொடங்கி விடுவர்..

ராகவி ஒருவழியாக சமாதானம் செய்து கீழே அழைத்து வர, டைனிங் டேபிளில் அவளை இடித்துக்கொண்டு வந்து அமர்ந்தான் கரண்.. காதல் வந்ததும் கடமைகளும் சேர்ந்தே வரும் என்பதெல்லாம் சுத்த போய்.. குழந்தையை போல அடம் பிடிக்கும் என்பதே உண்மை..

பதிலுக்கு நந்தினியும் குறும்பாய் முறைக்க, “அம்மா.. இது சரிபட்டு வராது.. கிளம்பலாம்..” என்று சைகையில் வருண் உணர்த்தியதும் காலை உணவை கட்டிக்கொண்டு இருவருமே பறந்து விட்டனர்..

“ப்ச்.. அந்த பக்கம் இடமே இல்லையா?? இடிச்சிட்டு தான் வந்து உக்காரனுமா??” என கேட்ட நந்தினி தடுக்க முயலாமல் இருக்க, “இங்க தானே கம்பர்ட்டபிளா இருக்குது..” என இடைவளைத்து இன்னுமே நெருங்கினான்..

“டெரரிஸ்ட் பாய்.. நீங்க நேத்து சண்டை போட்டுட்டு பேச மாட்டேன்னு முடிவு பண்ணுனீங்க.. மறந்துட்டீங்களா??” என நினைவுப்படுத்த, “உன்கிட்ட தானே சண்டை.. என் பொண்டாட்டிக்கிட்ட இல்லையே..” என குறும்பாய் கண்ணடித்தான் காரிகையவளின் கண்ணன் அவன்..

“ம்ம்..” என அலுத்துக்கொண்டவளாக, “மூட் சரியில்லைன்னா கொஞ்சம் கூட யோசிக்காம கத்த வேண்டியது.. ஏழு ஊருக்கு கத்தும் போது நெஞ்சு பதறுது..” என தனக்குள்ளே முணுமுணுத்து கொள்ள, “மூட் சரியா இருந்தா கொஞ்சுறதெல்லாம் கணக்குல வராதே..” என தோள்களோடு இடித்தான் அவன்..

“என்னடி ஆட்டோபாம் பேசாம இருக்குற.. அடுத்து எப்படி வெடிக்கலாம்னு யோசிக்குறியா??” நாடி பிடித்து செல்லம் கொஞ்ச, உதட்டை பிதுக்கியவளாக, “சாரி சொல்லு..” என்றாள் கரணவனின் காதல் மனைவி..

“ஸாரியா??” என அலட்சியமாக நாவை சுழித்த சூழ்ச்சிக்காரனை நெஞ்சிலே அடித்து, “நேத்து என்னை பிடிச்சு கத்த தெரிஞ்சிதுல்ல.. சாரி சொல்லு.. சாரி சொல்லு..” என சிணுங்கிய சில்லுவண்டு தான் வார்த்தைக்கு வார்த்தை மானிப்பாய் இறைஞ்சினாளே தவிர அவனோ இறுகிய இதழ்களை விரித்து மன்னிப்பை வேண்டிடவே இல்லை..

இத்தனை நாட்களாய் கவனித்ததில் கரண் கொஞ்சமேனும் மாறவே இல்லை.. முன்னர் எப்படி முறுக்கிக்கொண்டு நிற்பானோ அதே நிலை தான் நீடித்து கொண்டிருக்கிறது.. ஆனால் நெருங்கியவரிடத்தில் நேசத்தை வெளிப்படுத்த மட்டும் தவறவில்லை..

முன்கோபமும் முரட்டுத்தனமும் அவனின் இரத்தத்திலேயே ஊறியிருக்க, பிரிப்பதற்கு சிறிதும் முயலவில்லை மூன்று முடிச்சு மாங்கல்யம் வாங்கி கொண்ட மனைவி.. ஏனோ தன்னிடம் மட்டுமே கரணாய் வாழ்வதில் அவளுக்கு அப்படி ஒரு கர்வம்..

“பிராடு..” என செல்லமாய் அடிக்க சென்றவளின் பிஞ்சு விரல்கள் பிடித்து கன்னத்திலே தேய்த்து கொள்ள, குறும்பாய் வளைந்து நின்ற தாடியில் குத்தி கூசியது.. நாணத்தில் நங்கையவள் நெளிய, உள்ளங்கையில் ஒற்றை இதழ் தீண்டலை நிகழ்த்தியவள் கெத்தாக நோக்கினான் தன்னை அணுஅணுவாய் கொல்பவளை..

“என்ன??” என்று புருவம் உயர்த்திய நந்தினிக்கு, “கேட்டுட்டேன்..” என்கவும், “எப்போ?? எனக்கு கேக்கலையே..” என காதுமடல்களை தூக்கினாள்.. “இப்படி தானே..” என மற்றுமொரு இச்சுவை பதிக்க, “ஆ..” என ஆச்சரியத்தில் வாயை பிளந்தாள் அவள்..

“நாம இப்படியே சண்டையை கண்டினியு பண்ணுவோம்..” என அர்த்தமாய் கண்ணடித்தவனை அதிசயமாய் நோக்கிவிட்டு, “ஆஹான்.. ரூல்ஸ் இவ்ளோ லிபரலா இருந்தா டெரரிஸ்ட் அடுத்தடுத்து அட்டாக் பண்ண ஆரம்பிச்சுடுமே..” என்றவள் சத்தமில்லாமல் சம்மதிக்கவும் செய்தாள்..

மன்னிப்பென்பது நான் மருகியும் நீ மன்னித்திடவும்

இல்லையடி என் மஞ்சத்தின் மகாராணியே..

கண்ணிமைப்பதில் நீ வெட்கியும் நான் மீறியும்

முத்தாப்பில் வழங்குவதடி..

அலுவலகத்தில்,

முன்னரை விட தற்பொழுது அதிக சுறுசுறுப்புடன் வலம் வரும் வருணிற்கு கன்னியர்களின் காதல் பார்வை அதிகமே இருந்தது.. கண்டதும் கட்டியிழுக்கும் கச்சிதமான கவர்ச்சி இருப்பினும் அவனுடைய இயல்பான புன்னகை கூடுதல் மதிப்பெண் வழங்க காரணமாயிருந்தது..

கேபினில் நின்று டெண்டருக்கான காகிதங்களை பிரித்துக் கொண்டிருந்த வருணின் பின்னே வந்து நின்ற ஸ்ரீதர், “குட் மார்னிங்.. வருண் ப்ரோ..” என்றான்.. காலையிலேயே அவனுடைய குரலை கேட்டதும் புத்துணர்வாக திரும்பிய வருண், “ஹே.. ஸ்ரீ..” என பட்டும்படாமல் மெல்ல அணைத்தான்..

“போற போக்கை பார்த்தா கடைசி வரை என்னை மட்டும் தான் கட்டிப்புடிப்ப போல.. பொண்ணுங்களே பார்க்காம பிரம்மச்சாரியா போற ஐடியாவா..” என செல்லமாக வயிற்றில் குத்திய ஸ்ரீதரிடம் சிரித்து கொண்டான் வருண்..

“நானும் கட்டிப்புடிக்குற கடைசி ஆம்பளை நீயா தான் இருக்கணும்னு தான் நினைக்குறேன்.. ஆனா முடியலியே..”

“என்ன முடியுது.. முட்டலைன்னு.. ஸ்கூல் படிக்கிறப்போ க்ரூப் ஸ்டடீஸ்க்கு வந்த பொண்ணுங்கள்லேயே எங்க ஆத்தா யாருடா என் மருமகன்னு கேட்டுச்சு.. ராகவி மம்மி ஏன் ஒரு பொறுப்பே இல்லாம இருக்குறாங்க..” என பாவமாய் உச்சுக்கொட்டி கொண்டான் ஸ்ரீதர்..

“ஹினி மருமகளா வந்துடுவாளோன்னு பயத்துலே கேட்ருக்குறாங்க..” என்று வருண் கலாய்த்து விட, “இதுவும் யோசிக்க வேண்டிய பாயின்ட் தான்.. எங்க வீட்டு தலையெழுத்தை தரதரன்னு இழுத்துட்டு போய் உங்க வீட்டுல வச்சிக்கிட்டா எப்படி இருக்கும்.. அவளை சமாளிக்கவே ஒரு வழி ஆயிடும்.. இதுல இன்னொரு டிக்கெட்டான்னு பாக்காம விட்டுட்டாங்களோ..” என பங்கமாய் வாரி விட்டான் ஸ்ரீதர்..

“அதுசரிங்க தம்பி.. உங்க கல்யாணம் எப்ப?? பொண்ணும் மாப்பிள்ளையும் வருஷகணக்கா ரெடி.. பக்கத்து பக்கத்து கேபின் வேற.. கல்யாணம் பண்ற ஐடியா இருக்குதா?? இல்லை மெயில்லையே முடிசிப்பீங்களா??” என நம்ரதாவின் விஷயத்தை இழுத்து வாயை அடைத்து விட்டான் வருண்..

“ப்ரோ.. அதை விடுங்க.. முடிஞ்சி போன விஷயத்தை தோண்டி எதுவும் ஆகப்போறதில்லை..” என ஸ்ரீதரின் முகம் சீரியசாக, “முடிஞ்சு போன விஷயத்துக்காக தான் காலையில ஹாப் அன் ஹார் ஈவ்னிங் ஒன் ஹார்னு பாலோ பண்றீங்களா?? இது போதாதுன்னு ஆபீஸ் சிசிடிவி புட்டேஜை கூட விடாம சேவ் பண்ணி வச்சுக்குறது..” என உதட்டை வளைக்க, “ஈஈ..” என அசடாய் வழிந்தான் ஸ்ரீதர்..

“மாட்டிக்கிட்டீங்க பங்கு..” என தோள்களை வளைத்து கொண்ட வருணிற்கு முப்பத்தியிரண்டு பற்களையும் காண்பித்த ஸ்ரீதர், “அது சும்மா..” என்றான் வடிவேலு வாயுடன்.. “ஸ்ரீ.. சீரியஸா கேக்குறேன்.. செஞ்ச தப்பை புரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறமும் பனிஷ் பண்றது சரியா??” என முகத்தில் ஆர்வத்தை வருண் வெளிப்படுத்த, “ம்ஹும்..” என ஆழ்ந்த பெருமூச்சை ஆயாசமாக வெளியிட்டான் ஸ்ரீதர்..

“சரியில்லை தான் வருண்.. இன்பாக்ட் எனக்கு ரதி மேல எந்த கோபமும் கிடையாது.. தீனாவை ஹர்ட் பண்ணினது கூட எனக்காக தானே.. அப்புறம் எப்படி நான் தண்டிக்க முடியும்.. என்னோட பிரச்சனையே என் மாமனார் தான்.. நாங்க எப்படி சேர்ந்தாலும் தில்லாலங்கடி வேலை பார்த்து பிரிச்சிடுவாரு.. அந்த டைம்ல நானா அப்பாவான்னு யோசிக்குற சங்கடமான சூழ்நிலையில தள்ள விரும்பலை..” என்றான் தீர்க்கமாக..

“ஓகே.. வாழ்ந்து முடிச்ச பிரபு அங்கிள்காக நீங்க வாழாம இருக்க போறீங்களா??” என வருண் சரியான கேள்வியொன்றை உதிர்க்க, “என்ன பண்ணுறது வருண்.. மனசு முழுக்க விஷம் வச்சிட்டு சுத்துறவரை என்ன பண்ணுறது.. அப்படி அவருக்கு என்ன காண்டுன்னு தான் புரியல.. ரித்துவோட நிச்சயத்துல முறை எல்லாமே இவர் தான் செஞ்சிருக்குறாரு.. அப்ப யோசிச்சு பாரு.. ஏதாவது செஞ்சி எங்களை பழிவாங்கணும்னு துடிக்கிறவரை என்ன பண்ணுறது..” என நொந்து கொண்டான் ஸ்ரீதர்..

இருவரின் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே, “சார்.. ரிதன்யா வந்துருக்குறாங்க..” என பணியாளர் கூறிவிட்டு செல்ல, “நூறு ஆயுசு..” என வருணும், “இங்க ஏன் வந்துருக்குறா??” என ஸ்ரீதரும் முணுமுணுத்து கொண்டபடியே, “வர சொல்லுங்க..” என்றனர் இருவரும் ஒருசேர..

புதுபெண்ணிற்கான கல்யாணகளை முகத்தில் அரும்பியிருக்க, உள்ளே நுழைந்தாள் ரிதன்யா பழைய அப்பாவித்தனங்களை களைந்தவளாக.. “ரித்து..” என தோழியை கண்ட பழைய உற்சாகத்தில் வருண் அழைக்க, அசட்டை செய்தாள் அவள்..

இதையெல்லாம் பழகி கொண்ட ஸ்ரீதரோ முன்வந்து, “எதுக்காக வந்த ரித்து??” என தடாலடியாக கேட்கவும், “பரவாயில்லையே.. மரியாதை எல்லாம் தலைகீழா வருது..” என நக்கலாய் உதடு வளைத்தாள் ரிதன்யா..

“என்ன பண்றது ரித்து.. கூட இருக்குறவங்களை வச்சு தானே ஒரு ஆளை மதிக்க முடியும்..” என ஏளனமாக ஸ்ரீதர் பார்க்க, “ஒரு நிமிஷம்.. ஸ்ரீதர்.. என்ன பேசுற நீ.. தேடி வந்தவங்களை இப்படி தான் பேசுவியா?? உக்கார வச்சு பொறுமையா பேசலாம்..” என்ற வருண், “ரித்து நீ உக்காரு..” என நாற்காலியை இழுத்தான்..

அதே நேரத்தில், “புது பொண்ணுக்கு இங்க என்ன வேலை??” என்றபடியே உள்ளே நுழைந்தாள் நந்தினி.. அவளின் பின்னே ஆளுமையாய் கரணும் வந்து சேர்ந்திட, கோபமாய் எடுத்த வார்த்தைகளை தனக்குள்ளே அடக்கினாள் ரிதன்யா..

எத்தனை மாற்றங்கள் நடந்திடினும் வருண் என்றதும் மனம் கரைகிறதோ இல்லையோ கரண் என்றதும் கைகால்களில் நடுக்கம் மட்டும் குறையவே இல்லை.. அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாக ஸ்ரீதர் நந்தினியை உற்றுநோக்க, “கரண்.. ம்ம்..” என்றிட, அவளின் கட்டளையை ஏற்று பக்கவாட்டில் சம்பந்தமில்லாதவன் போல அமர்ந்து கொண்டான்..

“வருண்.. நான் சாவகாசமா உக்காந்து பேச வரலை.. ப்ராப்பெர்ட்டியை பிரிச்சு வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்..” என்றவளை புரியாது நந்தினி நோக்க, “அப்பாவோட மொத்த ப்ராப்பெர்ட்டியும் உன்னோட கையில எப்படி இருக்கலாம்.. எனக்கும் பங்கு உண்டு தானே..” என்ற ரிதன்யாவின் மீது கொண்ட பொறுமையை இழந்திருந்தாள் நந்தினி..

“என்ன சொன்ன ரித்து?? அப்பாவோட ப்ராப்பெர்ட்டியா?? அப்பான்னு சொல்லுறதுக்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்குது.. உள்ள போனவர் எப்படி இருக்குறாருன்னு ஒரு வார்த்தை கூட கேக்கலை.. வெளிய எடுக்க ஹெல்ப் கேட்டு வந்தப்போ முடியாதுன்னு சொல்லிட்டு இப்ப எந்த அக்கறையில வந்து நிக்குற?? இந்த காசும் சொத்தும் முக்கியமில்லை.. தேவைப்பட்ட நேரம் வராம போன நீ இப்ப ஏன் உரிமை கொண்டாட வர்ற??” என நந்தினி கத்த துவங்கும் பொழுதே, பூமியில் பாதம் பரபரக்க ஓடி வந்துவிட்டான் பத்தினியவளின் பதியவன்..

அவனின் திடீர் செய்கையினால் வருண் கோபத்தை குறைக்குமாறு நந்தினியை புருவம் சுருக்க, “அப்பாவுக்கு என்னாச்சு?? நான் எந்த ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொன்னேன்..” என புரியாமல் ரிதன்யா திருதிருக்க, “அந்த கேடுகெட்ட துருவனை காப்பாத்துறதுக்காக தீனா கொடுத்த பொய் கேஸ்னால மாமா அரெஸ்ட் ஆனப்போ வாபஸ் வாங்குங்கன்னு வந்து கேட்டப்போ முடியாதுன்னு சொன்னது யாரு??” என இடைநுழைந்தான் ஸ்ரீதர்..

“அப்பாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா??” என்று கேட்டிட உதடுகள் துடித்தாலும், ராஜசேகர் மகளின் மீது உள்ள கோபத்தினாலே வரவில்லை என்று துருவனின் வீட்டாரால் சொல்லி வைக்கப்பட்ட பொய் அம்பலமாகி விடுமே..

அதிர்ச்சியை தனக்குள்ளே விழுங்கி கொண்ட ரிதன்யாவோ, “ஒ.. நான் மறந்துட்டேன்.. நடந்த எதுக்கும் நான் காரணமில்லை.. அவரோட செல்ல பொண்ணு செஞ்ச வேலையால வந்தது தானே.. இதுக்கு எப்படி நான் பொறுப்பேற்க முடியும்..” என்றாள் ரிதன்யா மனதை கல்லாக்கி கொண்டு..

தன்னுடைய தவறு மீண்டும் சுட்டிக்காட்ட பட்டதும் நந்தினியின் குரல் தாழ்ந்து அமைதியாகி கொள்ள, “ரித்து, ஆக்சுவலா ரெண்டு கம்பெனியும் டைஅப் பண்ணியிருக்குறோம்.. ப்ராப்பெர்ட்டியா இருக்குறதையும் பிரிச்சு வாங்கிட்டு போறதுக்கு அங்கிள் வரட்டுமே.. வந்ததுக்கு அப்புறம் பெரியவங்க பேசி முடிவு பண்ணட்டுமே..” என வருண் நல்லவிதமாக பேசி புரியவைக்க முயன்றான்..

“எப்படி?? உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நிச்சயம் பண்ணின மாதிரியா?? இல்லைன்னா இந்த ஸ்ரீதரும் நந்துவும் தான் பெரிய மனுஷங்களா??” என வருனிடம் ரிதன்யா சீற, “ரித்து.. மிட் யுவர் வேர்ட்ஸ்.. வருண் எவ்ளோ டீசென்ட்டா சொல்றாரு.. டிசிப்ளின் இல்லாம கத்துற..” என ஸ்ரீதர் பரிந்து பேச என்று சலசலப்பு ஏற்பட்டது..

இந்த இடைவெளியில் துவண்டிருந்த நந்தினியை சமாதானம் செய்துகொண்டிருந்த கரண், “ஏய்...” என்று அதட்ட, மொத்த பெரும் மிரட்சியாய் நோக்கினர்.. அதற்குள், “கரண்..” என ஈனஸ்வரத்தில் நந்தினி அழைத்திட, எழுந்த வேகத்தோடு அவளுக்குள் அடங்கி போனான் ஆட்டோபாமின் டெரரிஸ்ட்..

ஆனாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீரவேண்டும் என்ற தீர்மானத்தில் வந்திருந்த ரிதன்யாவோ, “நந்து.. நான் கேக்குறதுல என்ன தப்பு இருக்குது.. இப்படி ஆளாளுக்கும் கோபப்படுறப்போ ஏதோ எனக்கே நான் தப்பு பண்றேன்னு பீல் ஆகுது..” என நந்தினியின் பலவீனத்தில் சரியாய் தாக்கினாள்..

மிக பெரிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நின்றிருந்த நந்தினி கரணை நோக்க, “இப்ப என்ன ப்ராப்பெர்ட்டில பங்கு வேணும்.. அவ்ளோ தானே.. என் நந்தினிக்கு இது எதுவுமே தேவை இல்லை.. மொத்தமும் வேணும்னாலும் சரி.. சீக்கிரமே ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிடலாம்..” என்றான் அவன்..

அதே நேரத்தில், “இல்லை.. ப்ராப்பெர்ட்டில எந்த பங்கும் ரித்துவுக்கு கிடையாது..” என உணர்ச்சிவேகத்தில் உளறிய ஸ்ரீதர், அனைவரின் அதிர்ச்சியையும் கிரகித்தவாறே, “நான் என்ன சொல்றேன்னா மாமா வர்ற வரைக்கும் எந்த ரிஜிஸ்ட்ரேஷனும் கிடையாது..” என மறுத்து கூறினான்..

அவனின் கூற்றை ஆதரித்த வருணும், “ஆக்சுவலா இது தான் சரி.. நடைமுறையிலேயும் இது தான் நியாயமா இருக்கும்..” என்றிட, “அது எப்படி?? கன்ஸ்ட்ரக்ஷனை நந்து பொறுப்புல கொடுக்கும் போது கூட அப்பா இருந்தாரா?? என் அப்பாவோட ப்ராப்பெர்ட்டி வாங்குறதுக்கு யார் யார்கிட்டயோ பதில் கேட்க வேண்டியிருக்குது.. முக்கியமா ஸ்ரீ.. எங்க குடும்ப விவகாரத்துல நீ தலையிடாத..” என சுட்டுவிரல் உயர்த்தி எச்சரித்தாள் ரிதன்யா..

அதிகமாய் பேசிவிட்டோமோ என்ற அவமானத்தில் ஸ்ரீதரின் முகம் கறுக்க, “ரித்து.. வார்த்தையை அளந்து பேசு.. ஸ்ரீ பத்தி பேச உனக்கு தகுதியே கிடையாது.. உனக்கு ப்ராப்பெர்ட்டி தானே வேணும்.. எனக்கு ஒன் வீக் டைம் கொடு.. முடிவு பண்றேன்..” என கோபத்தில் கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்த நந்தினியை சமாதானம் செய்யும் நோக்கோடு ஸ்ரீதர் பின்தொடர, கரணோ ரிதன்யாவை கொடூரமாய் முறைத்தவாறே நின்றிருந்தான்..

தொடரும்..

ஸாரி ப்ரெண்ட்ஸ்... வாக்சின் போட்ட கையால இவ்ளோ தான் டைப் பண்ண முடிஞ்சிது.. அடுத்த எபி நிறைய எழுதுறேன்..      

  

Post a Comment

2 Comments

  1. வாவ்... சூப்பர் சகி !
    இந்த ரித்து ஏன் இப்படி இருக்கிறா? ஏற்கனவே ரொம்ப நல்ல மனசு..இதுல துருவ் கூட வேற ஜோடி சேரந்ததுல இருந்து வருணை கூட மதிக்கிறது கிடையாது...
    இவளால எத்தனை பேருக்கு தொல்லை....

    அந்த ப்ராப்ர்டியில அவளுக்கு மட்டும் பங்கில்லையே... என்ன தான் நந்தினி வேண்டாமுன்னு சொன்னாலும்... சாந்தினிக்கு கண்டிப்பா ஷேர் இருக்குமே... சொத்துக்கு சம்பந்தப்பட்டவர் இல்லாதப்ப வந்து இப்படி அராஜகம் பண்றாளே.... இவை பண்றது மட்டும் எந்த விதத்தில் நியாயம் தெரியவையே.. நந்தினியோட குற்ற உணர்ச்சியை யூஸ பண்ணிக்கிறான்னு நினைக்கிறேன்.
    இவளுக்கெல்லாம் கரண் மாதிரி ஆளுங்களோட அப்ரோச் தான் சாி வரும்... பார்க்கலாம் கரண் என்ன பண்றான்னு...!

    ReplyDelete
  2. Sema epi akka.. ana anniki na potta comment ah kanom ☹️... Apoo rithu avenka ponnu illaya😏.... Intha rithuku evlo pattalum onnum puriyathu... Waiting for next ud...

    ReplyDelete