ப்ளூ சட்டை அழகன்... - 1
தலைப்பை பார்த்ததுமே படத்துக்கு ரிவியூ பண்ற அந்த "ப்ளூ சட்டை"ன்னு தப்பா நெனச்சுடாதீங்க நண்பர்களே.... இது என்னை நானே ரிவியூ பண்ணிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்த என்னோட ப்ளூ சட்டை அழகன் (ச்சே இல்லை இல்லை.... அவன் என்னோடவன் இல்லை...) வெறும் ப்ளூ சட்டை அழகன் தான்... என்னோட ப்ளூ சட்டை அழகன் இல்லை... அவனால எனக்குள்ள ஏற்பட்ட வேதிமாற்றங்களை தான் நான் உங்ககிட்டே ஷேர் பண்ணிக்க போறேன்...
முதல்ல எங்க இருந்து தொடங்குறதுன்னு தெரியல... ஏன்னா அவன் ஒண்ணும் என்னோட முதல் காதல், என்னோட மனசுல அரும்புன அறியாத பருவ காதல் இல்லை... நல்லா விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறம் டீனேஜ் எல்லாம் முடிஞ்சு 23 வயசு ஆனதுக்கு அப்புறம் என்னோட மனசுக்குள்ள நுழைஞ்சவன் தான்...
அப்போ அதுக்கு முன்னாடி லவ் பண்ணிருக்கிறியான்னு கேக்கறீங்களா??? ஆமா காதலிச்சேன்... அதை ஒத்துக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.... அவனை நேசிச்சேன்ன்னு சொல்றதை விட உயிருக்குயிரா சுவாசிச்சேன்னு தான் சொல்லணும்... அந்த அளவுக்கு அவன் மேல பைத்தியமா இருந்திருக்கேன்... பைத்தியம் தான்.. மூணு வருஷத்துக்கு முன்னாடி ப்ரொபோஸ் பண்ணுனவன் இன்னமும் என்னை விரும்புறானான்னு தெரியாமலேயே அவன்மேல் உயிரா இருந்த என்னை பைத்தியம்ன்னு சொல்றதை விட வேற என்ன சொல்றது???
அவனுக்காக நான் என்னவெல்லாம் செஞ்சேன்னு தெரியுமா??? அவன் வச்ச அரியர்காக தூங்காம அவனோட புத்தகத்தை படிச்சு என்னோட பேலன்ஸ் எல்லாம் காலி ஆகுற அளவுக்கு (அப்போ ஜியோ எல்லாம் வரலைங்க.... ரேட்கட்டர் மட்டும் தான்....) அவனுக்கு போன்லயே டியூஷன் எடுத்தேன்...
அவன் நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக கைலயே கற்பூரத்தை ஏத்தி வேண்டிகிட்டேன்...
மார்கழி மாதம் அதிகாலையிலேயே எழுந்து அவனுக்காக பூஜையில கலந்துக்கிட்டேன்..
ஒவ்வொரு விரதத்தையும் மிஸ் பண்ணாம கடைபிடிச்சேன்... (எனக்கு லோ பிபி இருந்தாலும் அவனுக்காக செஞ்சேன்...)
எல்லா கோயிலிலயும் அவனுக்காக தவறாம வேண்டிகிட்டேன்...(இதுல நான் பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவள் அப்படிங்கிறது கூடுதல் தகவல்... மழைக்கு கூட கோவில் பக்கம் ஒதுங்கினா பெரிய பாவம்ன்னு ஜீசஸ்கிட்டே மன்னிப்பு கேட்கிற அளவுக்கு எங்க வீட்டு ஆளுங்களோட பக்தி இருக்கும்....)
சிவராத்திரி அன்னைக்கு ராத்திரி முழுக்க தூங்காம அவனுக்காக "ஓம் நமசிவாய" எழுதினேன்... (செமஸ்டர் எக்ஸாம்ல் கூட தமிழ் பரீட்சையில் சரியாக பாஸ் ஆகும் அளவுக்கு மட்டுமே எழுதும் சோம்பேறி நான் என்பது குறிப்பிடத்தக்கது..)
சொல்ல வந்ததை சொல்லாம ஏதேதோ சொல்லிட்டு இருக்கிறேன்னு நெனைக்கிறீங்களா??? முதல்ல இருந்து சொன்னா தானே எனக்குள்ள நடந்த மாற்றங்கள் பற்றி தெளிவா புரியும் ??
அவனுக்காக நான் இவ்ளோ செஞ்சேனே அவன் எனக்காக என்னவெல்லாம் செஞ்சான் தெரியுமா??? என் அப்பா மிகவும் நல்லவர்... எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பவர்... எங்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்... இதனாலேயே நான் ஆண் பெண் பாகுபாடு இன்றி எல்லாரிடமும் சகஜமாக பேச பழகியிருந்தேன்... இதற்கு அவன் வைத்த பெயர் "ஒழுக்கம் கெட்டவள்..."..... ஒருமுறை கானபெரென்ஸ் காலில் நானும் இருப்பதை அறியாமல் அவன் தன் நண்பனிடம் கூறினான் "அவ ஒரு நடத்தைகெட்டவ டா.. எல்லா பசங்ககிட்டேயும் பேசுறா டா... அவளை கட்டிக்கிட்டு என்னால எப்படி டா நிம்மதியா வெளியே போய்ட்டு வரமுடியும்?? வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்க முடியுமா டா??" என ... நொருங்கி தான் போனேன்....
அவன் மருத்துவ துறை சார்ந்த படிப்பு படிப்பதாலும் அவன்மேல் கொண்ட நம்பிக்கையாலும் ஏதோ ஒரு பாதுகாப்பான உணர்வு ஏற்பட என்றோ ஒருநாள் “ எனக்கு மாதவிடாய் சீராக இல்லாததை" எதேச்சையாக கூறியிருந்தேன்... அதற்கு அவன் எனக்கு அளித்த விருது "மலடி..." (இதை உண்மையென்றே நம்பி யாரிடமும் கூறாமல் எனக்கு வந்த வரன்களை எல்லாம் தட்டி கழித்துவிட்டு இருந்த நான் சென்ற மாதம் தான் எந்த பிரச்னையும் இல்லை என மருத்துவர் தோழியிடம் சென்று உறுதிப்படுத்தி கொண்டேன்...)
பார்ப்பதற்கு மற்ற பெண்களை போல இல்லாமல் சற்றே தடித்தும் கருத்தும் இருந்த எனக்கு அவன் கொடுத்த வெகுமானம் "கறிச்சட்டி, இட்லி குண்டா"
இப்படி பலப்பல பட்டங்கள் எனக்கு அளித்திருந்தான்... அவன் என்னை இவ்வாறு வெறுப்பது தெரிந்தும் அவனை நேசிக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை.. ஒருகாலத்தில் என்னை உருகி உருகி காதலித்தவன் தான், எனக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே ஓடி வந்தவன் தான், நான் மனதளவில் துவண்டு போயிருந்தால் எனக்கு ஆறுதலாக இரவு முழுவதும் சமாதானம் செய்தவன் தான்.... எதனாலோ ஒரேநாளில் தலைகீழாய் மாறி போயிருந்தான்... அந்த திடீர் மாற்றத்தை உணராமல் பழைய எண்ணத்திலேயே அவனிடம் நெருங்க எண்ணுகையில் அவன் எனக்கு அளித்த வெகுமதிகள் தான் இவை... மாற்றத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ள எண்ணி தோற்று தான் போனேன் ஒரு கட்டத்தில்....
சுயமரியாதை எல்லாம் போன பின்னும் அவனிடம் கெஞ்சி கொண்டிருந்தேன் காதலை வேண்டி.... ஒருவேளை அவன் எல்லாவற்றையும் எளிதாக கடந்து போயிருந்திருக்கலாம் ஆனால் என்னால் அவ்வாறு போக முடியவில்லை... ஏன் என்றால் ஒவ்வொரு காலை விடிவதும் அவனது "குட் மார்னிங் டி" என்னும் குறுஞ்செய்தி ஒலி கேட்டு தான்... ஒவ்வொரு இரவு முடிவதும் "குட் நைட் டி..." என்னும் குறுஞ்செய்திக்கு பின்னர் தான்... அவன் என்னை கடந்து செல்லும் போது தோன்றும் அந்த படபடப்பு, அவனும் நானும் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் இருந்து ரசித்து கேட்ட பாடல்கள், எங்கேனும் அவனது பெயரை யாரோ உச்சரிக்க கேட்க என்னை அறியாமலே திரும்பும் எனது தலை, என் மனமெங்கும் நிறைந்து கிடக்கும் அவனுக்கான காதல், அவனுக்காக கவிதைகள் எழுதி நிறைத்த எனது மூன்று நாட்குறிப்பு டைரிகள் ... என அனைத்திலும் அவனே நிறைந்து இருந்தான்...
ஆனாலும் அவனது வார்த்தைகள் என்னை கூறாய் கிழித்து தான் போட்டன.... இரவு முழுவதும் உறங்காமல் இருந்து அவனது பெயரை உச்சரித்து கொண்டே இருந்தேன்... விடுதியின் குளியலறைக்குள் அமர்ந்து இரவு முழுவதும் கதறி அழுதேன்... பல நாட்கள் சாப்பிடாமல் யாரிடம் பேசாமல் கிடந்தேன் ... சோக பாடல்களாக கேட்டு கேட்டு காதை செவிடாக்க முயன்றேன், அவனுக்காக எழுதி வைத்த காதல் கவிதைகள் எல்லாவற்றையும் கிழித்து தீ வைத்து எரிக்கும் போது "அவற்றை ஏன் எரிக்க வேண்டும்??? அவற்றை எழுதிய கைகளை தான் எரிக்க வேண்டும்" என என் கையை நானே சுட்டுக்கொண்டேன்... இவ்வாறு பல தனிமை தீவிரவாத போராட்டங்களுக்கு பின்னர் ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தேன்... ஆனால் ஒருபொழுதும் தற்கொலைக்கு முயலவில்லை...(அவனை உயிருக்கு உயிராக காதலித்தேன் தான் ஆனால் என் பெற்றோர் கொடுத்த உயிரை அவனுக்காக அதுவும் என்னை விட்டு சென்ற ஒருவனுக்காக தியாகம் செய்ய நான் தயாராக இல்லை....)
இருப்பினும் "எல்லாமே பொய் தான் உன்னை வெறுத்தது, உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டது எல்லாமே பொய் தான்.." என கூறிவிட்டு வேகமாக என் கையை இறுக்கப்பற்றி கொள்வான் என அடிமனதில் ஒரு ஆசை கனன்று கொண்டு தான் இருந்தது... ஒவ்வொரு நாளும் அதற்காக ஏங்கி காத்திருந்த எனக்கு இடியென வந்திறங்கியது அவன் இன்னொரு பெண்ணை காதலிக்கும் செய்தி...
6 Comments
ஆரம்பமே ரொம்ப கஷ்டமாக இருந்தது.
ReplyDeleteஇனிமேல் எல்லாம் இனிமையாக வாழ்த்துக்கள்
ellaame santhoshamaga maarum ena enni kaatthiruppom anna.. thank you so much for you love..
DeleteUngalukku avenka worth lam illa saki.... Kadanthavai kadanthavaikalave pogadum dr.... Unga future bestah brighta happy a irupenka....
ReplyDeleteidhu friend oruthangaloda diary thangam... soon next episode post panren... thank you for your comment maa...
DeletePast is past
ReplyDeleteNice sis
ReplyDelete